MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • மகளிர் கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா நிகர மதிப்பு எவ்வளவு தெரியுமா?

மகளிர் கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா நிகர மதிப்பு எவ்வளவு தெரியுமா?

மகளிர் கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவின் 2023 ஆம் ஆண்டு நிகர மதிப்பு ரூ.26 கோடி என்று சொல்லப்படுகிறது.

2 Min read
Author : Rsiva kumar
Published : Feb 13 2023, 01:14 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
ஸ்மிருதி மந்தனா

ஸ்மிருதி மந்தனா

கடந்த 1996 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் தேதி மும்பையில் பிறந்தவர் மகளிர் கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா. கடந்த 2013 ஆம் ஆண்டு வங்கதேச மகளிர் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியின் மூலமாக ஒரு நாள் கிரிக்கெட்டில் அறிமுகமானார். 
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
210
ஸ்மிருதி மந்தனா கிரிக்கெட்

ஸ்மிருதி மந்தனா கிரிக்கெட்

அதே ஆண்டு ஏப்ரல் 5 ஆம் தேதி வங்கதேசத்திற்கு எதிரான டி20 போட்டியின் மூலமாக டி20 கிரிக்கெட்டில் அறிமுகமானார். அதே போன்று 2014 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். கடந்த 2018 ஆம் ஆண்டு சிறந்த மகளிர் சர்வதேச கிரிக்கெட் வீரருக்கான விருது பெற்றார். 

310
மகளிர் பிக்பேஸ் லீக்

மகளிர் பிக்பேஸ் லீக்

மகளிர் பிக்பேஸ் லீக், கியா சூப்பர் லீக், நூறு பால் கிரிக்கெட் தொடர் ஆகிய போட்டிகளில் விளையாடியுள்ளார். தற்போது, நடக்க இருக்கும் மகளிர் பிரீமியர் லீக் தொடரிலும் இடம் பெற்றுள்ளார். இந்த தொடர் வரும் மார்ச் மாதம் தொடங்க இருக்கிறது. இந்த தொடரில் உள்ள 5 அணிகளின் வீராங்கனைகளுக்கான ஏலம் இன்று நடக்கிறது.
 

410
ஸ்மிருதி மந்தனாவின் நிகர மதிப்பு

ஸ்மிருதி மந்தனாவின் நிகர மதிப்பு

ஸ்மிருதி மந்தனாவின் நிகர மதிப்பு 2023 ஆம் ஆண்டின் படி 3.5 மில்லியன் டாலர் (ரூ.26 கோடி). பிசிசிஐ மூலமாக பெறும் சம்பளம், மகளிர் பிரீமியர் லீக், விளம்பரங்கள், ஒப்புதல் மற்றும் முதலீடு ஆகியவற்றின் மூலமாக வரும் வருமானத்தின் மூலமாக அவரது நிகர மதிப்பு ரூ.26 கோடி என்று சொல்லப்படுகிறது.

510
ஸ்மிருதி மந்தனாவின் நிகர மதிப்பு

ஸ்மிருதி மந்தனாவின் நிகர மதிப்பு

இதற்கு முன்னதாக கடந்த 2017 ஆம் ஆண்டின் கணக்கின்படி ரூ.7 கோடி, 2018 ஆம் ஆண்டு ரூ.10 கோடி, 2019 ஆம் ஆண்டு ரூ.15 கோடி, 2020 ஆம் ஆண்டு ரூ.21 கோடி, 2021 ஆம் ஆண்டு ரூ.25 கோடி ஆகும்.

610
ஸ்மிருதி மந்தனா சமபளம்

ஸ்மிருதி மந்தனா சமபளம்

ஸ்மிருதி மந்தனா A காண்ட்ராக்ட் மூலமாக பிசிசிஐயிடமிருந்து ஒரு வருடத்திற்கு ரூ.50 லட்சம் பெறுகிறார். அதுமட்டுமின்றி ஐபிஎல் மூலமாக ரூ.3 லட்சமும், டெஸ்ட் போட்டிக்கு என்று ரூ.4 லடசமும், ஒரு நாள் போட்டிக்கு ரூ.2 லட்சமும், டி20 போட்டிக்கு ரூ.2.5 லட்சமும் சம்பளம் வாங்குகிறார். டபிள்யூபிபிஎல் தொடர் மூலமாக ரூ.3 லட்சமும் வாங்குகிறார். 
 

710
ஸ்மிருதி மந்தனா சம்பளம்

ஸ்மிருதி மந்தனா சம்பளம்

கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு ரூ.2 முதல் ரூ.5 கோடி வரையில் வருமானம் ஈட்டுகிறார். தற்போது இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் பெண் கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா ஆவார். கடந்த ஆண்டில் இவர் ரூ.72 லட்சம் மதிப்புள்ள ரேஞ்ச் ரோவர் கார் ஒன்றை வாங்கியுள்ளார். இதற்கு முன்னதாக ரூ.16.27 லட்சம் மதிப்புள்ள ஹூண்டாய் கிரேட், ரூ.8.80 லட்சம் மதிப்புள்ள மாருதி ஸ்விப்ட் டிசையர், ஆடி, பிஎம்டபிள்யூ ஆகிய கார்களும் வைத்திருக்கிறார்.

810
ஸ்மிருதி மந்தனா - ஒப்பந்தம்

ஸ்மிருதி மந்தனா - ஒப்பந்தம்

கிரிக்கெட் விளையாட்டின் மூலமாக பிரபலமான ஸ்மிருதி மந்தனா பல நிறுவனங்களுக்கு ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தம் அளித்துள்ளார். Equitas Small Finance, Playerzpot, Bata, Alcon Hydrophobic Lenses, Spektacom Technologies, Garnier, Red Bull மற்றும் Hero Motocorp ஆகியவை அவரது ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தங்களில் அடங்கும். இந்த ஒப்பந்தம் மூலமாக அவர் போதுமான வருமானம் ஈட்டுகிறார்.
 

910
ஸ்மிருதி மந்தனா கார்

ஸ்மிருதி மந்தனா கார்

கடந்த ஆண்டில் இவர் ரூ.72 லட்சம் மதிப்புள்ள ரேஞ்ச் ரோவர் கார் ஒன்றை வாங்கியுள்ளார். இதற்கு முன்னதாக ரூ.16.27 லட்சம் மதிப்புள்ள ஹூண்டாய் கிரேட், ரூ.8.80 லட்சம் மதிப்புள்ள மாருதி ஸ்விப்ட் டிசையர், ஆடி, பிஎம்டபிள்யூ ஆகிய கார்களும் வைத்திருக்கிறார்.
 

1010
ஸ்மிருதி மந்தனா 2 வீடுகள்:

ஸ்மிருதி மந்தனா 2 வீடுகள்:

ஸ்மிருதி மந்தனாவுக்கு மும்பை மற்றும் டெல்லியில் இரண்டு ஆடம்பரமான அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இந்த 2 அடுக்குமாடி குடியிருப்புகளும் ஆடம்பரமாகவும், சிறப்பாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஸ்மிருதி மந்தனா தனது சொந்த ஊரான சாங்லியில் SM18 என்ற கஃபேவை வைத்திருக்கிறார்.
 

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
Rohit Sharma: ரிட்டையர்மென்ட் வதந்திக்கு பேட்டால் பதிலடி! லார்ட்ஸில் வரலாற்று சதம் அடித்த ஹிட்மேன்!
Recommended image2
IND vs ENG: ரோஹித் சதம் அடித்தும் இந்தியா தோல்வி... லார்ட்ஸில் கோட்டைவிட்ட 5 இடங்கள்..
Recommended image3
IND vs ENG: இந்திய பவுலர்கள் சொதப்பல்! இங்கிலாந்து மெகா ஸ்கோர்... என்ன காரணம்a?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved