Mumbai Indians: ரோகித் சர்மா கேப்டன்ஷி நீக்கம் – ஹார்ட் உடைந்தது போன்ற எமோஜியை பதிவிட்ட சூர்யகுமார் யாதவ்!
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன்சி பொறுப்பிலிருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதயம் உடைந்தது (Heart Broken) போன்று எமோஜியை பதிவிட்டுள்ளார்.
Hardik Pandya
இந்தியாவில் 17 ஆவது ஐபிஎல் 2024 தொடர் வரும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடக்க இருக்கிறது. இதற்கான மினி ஏலம் வரும் 19 ஆம் தேதி துபாயில் நடக்கிறது. அதற்கு முன்னதாக ஐபிஎல் அணிகளில் தக்க வைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. மேலும் டிரேட் முறையில் அணிகளின் வீரர்களும் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.
mumbai indians
அதன்படி, மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்திக் பாண்டியா ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால், ஹர்திக் பாண்டியாவை குஜராத் டைட்டன்ஸ் தக்க வைத்துக் கொண்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதே போன்று மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆல் ரவுண்டரான கேமரூன் க்ரீன் அணியில் தக்க வைக்கப்பட்டிருந்தார்.
Hardik Pandya Replaces Rohit Sharma
இதையடுத்து 10 அணிகளிலும் தக்க வைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியல் வெளியான பிறகு ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் எடுத்துக் கொண்டது. மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்த கேமரூன் கிரீனை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஒப்பந்தம் செய்தது.
Mumbai Indians Captai
மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்த ஹர்திக் பாண்டியா 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார். இதில், குஜராத் அணியின் முதல் சீசனில் டைட்டிலும் பெற்றுக் கொடுத்துள்ளார். தற்போது ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வந்த நிலையில், அவருக்குப் பதிலாக சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
Mumbai Indians
ஆனால், கடந்த 2013ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மா கேப்டனாக இருந்து வந்துள்ளார். இதில், 5 முறை ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியானது சாம்பியனாகியுள்ளது. ரோகித் சர்மா கேப்டனான 2013 ஆம் ஆண்டு டிராபியை வென்று கொடுத்தார்.
Rohit Sharma
அதன் பிறகு 2015, 2017, 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் மும்பை இந்தியன்ஸ் அணியானது சாம்பியனாகியுள்ளது. அதுமட்டுமின்றி 2013 முதல் 2023 ஆம் ஆண்டு வரையில் ரோகித் சர்மா விளையாடிய 163 டி20 போட்டிகளில் 91 போட்டிகளில் அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்துள்ளார். எஞ்சிய 68 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. 4 போட்டிகள் டையில் முடிந்துள்ளது.
Rohit Sharma
ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வந்தது முதல் அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில், தான் ரோகித் சர்மாவிற்குப் பதிலாக ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
Hardik Pandya
ஆனால், ரசிகர்கள் பலரும் ரோகித் சர்மா கேப்டனாக இருந்தால் மட்டுமே மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆதரவு கொடுப்பதாக கூறி வருகின்றனர். அதோடு, ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்ததற்கு பலரும் விமர்சனம் செய்தனர்.
Suryakumar Yadav Heart Broke Emoji
இந்த நிலையில், ரோகித் சர்மா கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்திய அணியின் டி20 கேப்டனாக செயல்பட்டு வரும் சூர்யகுமார் யாதவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹார்ட் உடைந்தது (Heart Broken Emoji) போன்ற எமோஜியை பதிவிட்டு தனது வெறுப்பை காட்டியுள்ளார்.