INDW vs ENGW Test: 17 ஆண்டுகளாக தோல்வி இல்லை – INDW vs ENGW Test 347 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!
இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய மகளிர் அணி 347 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
India Women vs England Women Cricket
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய மகளிர் அணி 3 டி20 போட்டிகள் மற்றும் ஒரு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இதில், முதலில் நடந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இங்கிலாந்து மகளிர் அணி 2-1 என்று கைப்பற்றியது.
INDW vs ENGW Test
இதையடுத்து கடந்த 14 ஆம் தேதி டெஸ்ட் தொடங்கியது. இதில், டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்து 428 ரன்கள் குவித்தது. இதில், அதிகபட்சமாக சுபா சதீஷ் 69 ரன்களும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 68 ரன்களும் எடுத்தனர்.
India Women vs England Women Test
யாஸ்திகா பாட்டியா 66 ரன்களும் எடுத்தனர். ஆல்ரவுண்டரான தீப்தி சர்மா 67 ரன்கள் எடுத்தார். பின்னர் தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து மகளிர் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 136 ரன்கள் மட்டுமே எடுத்தது.
India Women vs England Women, Only Test
இதில் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார். பின்னர் இந்திய அணி 2ஆவது இன்னிங்ஸ் விளையாடி 6 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதன் மூலமாக இந்திய அணி, 478 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
Indian Women Cricket Team
இதையடுத்து 2ஆவது இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து மகளிர் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 131 ரன்கள் மட்டுமே எடுத்து 347 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் இந்திய மகளிர் அணி 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். பூஜா வஸ்த்ரேகர் 3 விக்கெட்டும், ராஜேஸ்வரி கெய்க்வாட் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
INDW vs ENGW Test Cricket
இந்தப் போட்டியில் இந்திய அணி 347 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலமாக கடந்த 1949 ஆம் ஆண்டு முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை இந்திய மகளிர் அணி படைத்துள்ளது. அணியின் வெற்றிக்கு காரணமான தீப்தி சர்மா PLAYER OF THE MATCH விருது வென்றார்.