MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • IND vs USA T20 World Cup: டாஸ் வென்ற மோனங்க் படேல் - பும்ரா இல்லாமல் இந்தியா; வான்கடேயில் சாதனை படைக்குமா SKY And Team?

IND vs USA T20 World Cup: டாஸ் வென்ற மோனங்க் படேல் - பும்ரா இல்லாமல் இந்தியா; வான்கடேயில் சாதனை படைக்குமா SKY And Team?

India vs USA T20 World Cup 2026 : டி20 உலகக் கோப்பை தொடரின் 3ஆவது போட்டியில் இந்தியாவிற்கு எதிராக டாஸ் வென்ற அமெரிக்கா கேப்டன் மோனாங்க் படேல் பவுலிங் தேர்வு செய்துள்ளார்.

2 Min read
Author : Rsiva kumar
Published : Feb 07 2026, 07:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
India vs USA T20 World Cup 2026
Image Credit : Mufaddal Vohra X Page

India vs USA T20 World Cup 2026

இந்திய அணியின் கோட்டை என்று சொல்லப்படும் மும்பை வான்கடே மைதானத்தில் டி20 உலகக் கோப்பை தொடரின் 3ஆவது போட்டி நடக்கிறது. இதில் இந்தியா மற்றும் அமெரிக்கா அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற அமெரிக்கா அணியின் கேப்டனான மோனாங்க் படேல் பவுலிங் தேர்வு செய்துள்ளார். அதன்படி இந்தப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. இந்தப் போட்டியில் இந்திய அணியைப் பொறுத்தவரையில் ஜஸ்ப்ரித் பும்ரா உடல்நிலை சரியில்லை என்றும் அவருக்குப் பதிலாக முகமது சிராஜ் இடம் பெறுவார் என்றும் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

23
அமெரிக்காவிற்கு எதிரான போட்டி – இந்திய அணி வீரர்கள்:
Image Credit : Mufaddal Vohra X Page

அமெரிக்காவிற்கு எதிரான போட்டி – இந்திய அணி வீரர்கள்:

அபிஷேக் சர்மா, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ரிங்கு சிங், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்‌ஷர் படேல், வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ்.

ஏற்கனவே ஏசியாநெட் தமிழ் விளையாட்டு செய்திகள் பக்கத்தில் இந்திய அணியின் பிளேயிங் 11 பற்றி செய்தி வெளியிட்டிருந்தோம். அதில் இடம் பெற்றிருந்த வீரர்கள் தான் இப்போது அமெரிக்காவிற்கு எதிரான போட்டியில் விளையாடுகிறார்கள்.

33
இந்தியாவிற்கு எதிரான போட்டி – அமெரிக்க அணி வீரர்கள்:
Image Credit : Mufaddal Vohra X Page

இந்தியாவிற்கு எதிரான போட்டி – அமெரிக்க அணி வீரர்கள்:

ஆண்ட்ரிஸ் கோஷ் (விக்கெட் கீப்பர்), சைதேஜா முக்காமல்லா, மோனாங்க் படேல் (கேப்டன்), மிலிண்ட் குமார்,சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி, ஷுபம் ரஞ்சனே, ஹர்மீத் சிங், முகமது மோசின், ஷாட்லீ வான் ஷாக்வாக், அலி கான், சௌரப் நட்ராவால்கர்.

டி20 உலகக் கோப்பை தொடரின் பிராண்ட் அம்பாஸிடரான ரோகித் சர்மா தான் டி20 உலகக் கோப்பை டிராபியை மைதானத்திற்கு கொண்டு வந்தார். இரு அணிகளும் முதல் முறையாக டி20 உலகக் கோப்பை தொடரில் மோதுகின்றன. இதற்கு முன்னதாக கடந்த 2024 ஆம் ஆண்டு டி20 போட்டியில் இரு அணிகளும் ஒரு முறை மோதியுள்ளன. 

இதில் இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த அமெரிக்கா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 110 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. பின்னர் விளையாடிய இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 111 ரன்கள் குவித்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
விளையாட்டு
டி20 உலகக் கோப்பை

Latest Videos
Recommended Stories
Recommended image1
T20 World Cupல் 300 ரன்கள்; ருத்ரதாண்டவம் ஆடுமா இந்தியா? புதிய வரலாறு படைக்க 5 காரணங்கள்!
Recommended image2
ஷாக் நியூஸ்! ஜஸ்பிரித் பும்ராவிற்கு திடீர் வைரஸ் தொற்று: முதல் போட்டியில் விளையாடுவது சந்தேகம்? ரசிகர்கள் அதிர்ச்சி!
Recommended image3
டி20 உலக கோப்பையில் இந்தியா மீண்டும் சாம்பியனாக சாதகமான 5 வாய்ப்புகள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved