- Home
- Sports
- Sports Cricket
- இந்தியா vs தென்னாப்பிரிக்கா ஓடிஐ தொடரை எந்த டிவியில் பார்க்கலாம்? போட்டிகள் தொடங்கும் நேரம்?
இந்தியா vs தென்னாப்பிரிக்கா ஓடிஐ தொடரை எந்த டிவியில் பார்க்கலாம்? போட்டிகள் தொடங்கும் நேரம்?
இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான ஒருநாள் போட்டித் தொடரை எந்த டிவியில், ஓடிடியில் பார்க்கலாம்? போட்டிகள் தொடங்கும் நேரம்? என்பது குறித்து விரிவாக காண்போம்.

இந்தியா vs தென்னாப்பிரிக்கா ஓடிஐ தொடர்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி படுமோசமாக விளையாடி இழந்தது. அடுத்ததாக இரு அணிகளும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.
முதல் 50 ஓவர் ஒருநாள் போட்டி நவம்பர் 30 ஆம் தேதி (நாளை மறுநாள்) ஜார்க்கண்டில் உள்ள ராஞ்சியில் நடைபெறுகிறது. இரண்டாவது ஓடிஐ போட்டி டிசம்பர் 3 ம் தேதி நியூ ராய்ப்பூரிலும், மூன்றாவது போட்டி ஆந்திராவிலும் நடைபெற உள்ளது.
எந்த டிவியில் பார்க்கலாம்? போட்டிகள் தொடங்கும் நேரம்?
இந்தியா vs தென்னாப்பிரிக்கா ஓடிஐ போட்டிகள் இந்திய நேரப்படி எத்தனை மணிக்கு தொடங்கும்?
இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையிலான மூன்று ஓடிஐ போட்டிகளும் இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும்.
இந்தியா vs தென்னாப்பிரிக்கா தொடரை எந்த டி.வி, ஓடிடியில் பார்க்கலாம்?
இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையிலான ஓடிஐ போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் சேனல்களில் பார்க்கலாம். ஸ்டார்ட் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலில் தமிழ் வர்னணையுடன் போட்டிகளை கண்டு ரசிக்கலாம். ஓடிடி தொடரை பொறுத்தவரை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் பார்த்து ரசிக்கலாம்.
இந்திய அணி அறிவிப்பு
தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடருக்கான இந்திய அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. சுப்மன் கில் காயம் காரணமாக வெளியேறியதால் கே.எல்.ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். சிஎஸ்கே கேப்டன் ருத்ராஜ் கெய்க்வாட்டுக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது. அதே வேளையில் இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தபொதெல்லாம் சிறப்பாக விளையாடி வந்த சஞ்சு சாம்சனுக்கு இடம் கிடைக்கவில்லை.
இந்திய அணி வீரர்கள் லிஸ்ட்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி: கே.எல்.ராகுல் (கேப்டன்), ரோகித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, திலக் வர்மா, கே.எல். ராகுல், ரிஷப் பந்த், வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ராணா, ருதுராஜ் கெய்க்வாட், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங் மற்றும் துருவ் ஜுரெல்.

