MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • பதிலுக்கு பதில் திருப்பி கொடுத்த நியூசிலாந்து – சான்ட்னர் சுழல் சூறாவளிக்கு இந்தியா 156 ரன்னுக்கு ஆல் அவுட்!

பதிலுக்கு பதில் திருப்பி கொடுத்த நியூசிலாந்து – சான்ட்னர் சுழல் சூறாவளிக்கு இந்தியா 156 ரன்னுக்கு ஆல் அவுட்!

IND vs NZ Pune 2nd Test: புனேவில் நடைபெற்று வரும் 2ஆவது டெஸ்டில் நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர் மிட்செல் சான்ட்னரின் அபார பந்துவீச்சில் இந்திய அணி 156 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சான்ட்னர் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

2 Min read
Author : Rsiva kumar
Published : Oct 25 2024, 01:43 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
India vs New Zealand, Pune Test Match

India vs New Zealand, Pune Test Match

IND vs NZ Pune 2nd Test: நியூசிலாந்தின் சுழல் சக்கரவர்த்தி மிட்செல் சான்ட்னர் சுழலில் சிக்கிய இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 156 ரன்களுக்கு சுருண்டது. புனேவில் நடந்த இரண்டாவது டெஸ்டின் 2வது நாளில் நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணியின் பேட்டிங் சரிந்தது. நியூசிலாந்தின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரான 259 ரன்களை துரத்திய இந்தியா, வெள்ளிக்கிழமை (இன்று) மதிய உணவு இடைவேளையின் போது 7 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்கள் எடுத்திருந்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Mitchell Santner 7 Wickets

Mitchell Santner 7 Wickets

ரவீந்திர ஜடேஜா (11) மற்றும் வாஷிங்டன் சுந்தர் (2) ஆகியோர் களத்தில் இருந்தனர். மிட்செல் சான்ட்னர் நான்கு விக்கெட்டுகளையும், க்ளென் பிலிப்ஸ் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். உணவு இடைவேளைக்கு பிறகு ஜடேஜா கூடுதலாக 17 ரன்கள் எடுத்து 38 ரன்களுக்கு சான்ட்னர் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். இதன் மூலமாக சான்ட்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக 5 விக்கெட் கைப்பற்றி சாதனை படைத்தார்.

36
India vs New Zealand, Michell Santner 7 Wickets

India vs New Zealand, Michell Santner 7 Wickets

அடுத்து வந்த ஆகாஷ் தீப் ஒரு சிக்ஸர் அடித்து சான்ட்னர் பந்தில் ஆட்டமிழந்தார். கடைசியாக பும்ராவும் சான்ட்னர் பந்தில் ஆட்டமிழக்கவே இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து156 ரன்கள் மட்டுமே எடுத்தது. நியூசிலாந்து அணியைப் பொறுத்த வரையில் மிட்செல் சான்ட்னர் 19.3 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் உள்பட 53 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்தார்.

46
IND vs NZ 2nd Test, India Scored 156 Runs

IND vs NZ 2nd Test, India Scored 156 Runs

இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்தியா 103 ரன்கள் பின் தங்கியுள்ளது. ரோகித் சர்மா (0), விராட் கோலி (1) ஆகியோரும் ஏமாற்றமளித்தனர். இரண்டாவது நாளில் இந்தியாவின் முதல் விக்கெட்டாக கில், சான்ட்னரின் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ ஆனார். பின்னர் கோலி களத்திற்கு வந்தார். ஒன்பது பந்துகளை மட்டுமே சந்தித்த 35 வயதான கோலி, சான்ட்னரின் பந்துவீச்சில் போல்டானார்.

அதிக எதிர்பார்ப்புடன் களமிறங்கிய கோலி, தேவையற்ற ஷாட்டை முயற்சித்து, குறைந்த ஃபுல் டாஸில் அவுட்டானார். தன்னம்பிக்கையுடன் தொடங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் (30) நீண்ட நேரம் நீடிக்கவில்லை. அவர் க்ளென் பிலிப்ஸின் பந்துவீச்சில் டேரில் மிட்செல்லால் கேட்ச் செய்யப்பட்டார்.

56
Glenn Phillips, Michell Santner, India vs New Zealand 2nd Test

Glenn Phillips, Michell Santner, India vs New Zealand 2nd Test

தொடரில் நல்ல ஃபார்மில் இருந்த ரிஷப் பந்த் (18), பிலிப்ஸின் பந்துவீச்சில் போல்டானார். கடந்த போட்டியில் சதம் அடித்த சர்ஃபராஸ் கான் (11), சான்ட்னரின் பந்துவீச்சில் மிட்-ஆன் மீது பந்தை அடிக்க முயற்சி செய்து அவுட்டானார். ரவிச்சந்திரன் அஷ்வின் ஐந்து பந்துகளை மட்டுமே சந்தித்து, சான்ட்னரின் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ ஆனார். நேற்று ரோகித் சர்மா (0) டிம் சவுதியின் பந்துவீச்சில் போல்டானார்.

முன்னதாக, நியூசிலாந்து 3 விக்கெட்டுகளுக்கு 197 ரன்கள் என்ற வலுவான நிலையில் இருந்து 259 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 76 ரன்கள் எடுத்த தொடக்க ஆட்டக்காரர் டெவோன் கான்வே, கிவிகள் அணிக்காக அதிக ரன்கள் எடுத்தார். ரச்சின் ரவீந்திரா 65 ரன்கள் எடுத்தார். இந்திய பந்துவீச்சாளர்களில் வாஷிங்டன் சுந்தர் ஏ இரண்டு விக்கெட்டுகளையும், அஷ்வின் மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

66
India vs New Zealand 2nd Test, India 156 Runs

India vs New Zealand 2nd Test, India 156 Runs

தற்போது 103 ரன்கள் முன்னிலையுடன் நியூசிலாந்து 2ஆவது இன்னிங்ஸை விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் அதிக ரன்கள் குவித்து இந்திய அணிக்கு சவாலான இலக்கை வெற்றிக்கு நிர்ணயிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு, இந்த போட்டியிலும் நியூசிலாந்து ஜெயிப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது. ஏற்கனவே ஏசியாநெட் நியூஸ் தளத்தில் புனே மைதானத்தில் டாஸ் ஜெயிச்சு பேட்டிங் எடுக்கும் அணியே அதிக முறை வெற்றி பெற்றிருக்கிறது என்று செய்தி வெளியிட்டிருந்தது.

மேலும் முதல் இன்னிங்ஸ் விளையாடும் அணி அதிக ரன்களையும், 2ஆவது இன்னிங்ஸ் விளையாடும் அணி குறைவான ரன்களையும் எடுக்கும் என்று பதிவிட்டிருந்தது. அதன்படியே தான் தற்போது இந்தியா மற்றும் நியூசிலாந்து 2ஆவது டெஸ்ட் போட்டியில் நடந்துள்ளது.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
ரவிச்சந்திரன் அஸ்வின்
ரோகித் சர்மா
விராட் கோலி
 
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
IPL 2027 Auction: ரூ.14 கோடி பிளேயரை கழட்டிவிடும் சிஎஸ்கே.. தோனியின் மாஸ்டர் பிளான்!
Recommended image2
Vaibhav Suryavanshi: "சுடு தண்ணி மட்டும் குடிப்பா.." வைபவ் சூர்யவன்ஷிக்கு ரசிகை அட்வைஸ்.. பாலகன் ரியாக்ஷன் வீடியோ பாருங்க!
Recommended image3
Abhishek Sharma: ஐசிசி டி20 ரேங்கிங்கில் மீண்டும் நம்பர் 1 ஆன அபிஷேக் ஷர்மா!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved