MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • India vs Bangladesh 2nd Test: இந்தியா-வங்கதேசம் டெஸ்ட்: மழை தான் ஜெயிக்குமா? டிராவை நோக்கி 2ஆவது டெஸ்ட்!

India vs Bangladesh 2nd Test: இந்தியா-வங்கதேசம் டெஸ்ட்: மழை தான் ஜெயிக்குமா? டிராவை நோக்கி 2ஆவது டெஸ்ட்!

IND vs BAN 2nd Test, Kanpur: கான்பூரில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மழை குறுக்கிடுவதால் போட்டி டிராவில் முடிய வாய்ப்புள்ளது. முதல் டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றதால், இந்தப் போட்டி டிராவானாலும் இந்தியா தொடரை வெல்லும்.

2 Min read
Author : Rsiva kumar
Published : Sep 28 2024, 08:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
India vs Bangladesh 2nd Test

India vs Bangladesh 2nd Test

கான்பூரில் நடைபெற்று வரும் 2ஆவது டெஸ்ட் போட்டியானது மழையின் காரணமாக டிராவில் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் நாளில் 35 ஓவர்களில் முடிக்கப்பட்ட போட்டியானது, 2ஆவது நாளில் ஒரு ஓவர்கள் கூட வீசப்படவில்லை. எஞ்சிய 3 நாட்களில் வங்கதேசம் ஒருநாள் அல்லது 2 நாட்கள் பேட்டிங் செய்தால் பின்னர் இந்தியா முதல் இன்னிங்ஸ் விளையாடும் அதன் பிறகு மீண்டும் வங்கதேசம் பேட்டிங்கிற்கு வரும். கடைசியில் போட்டி டிராவில் தான் முடியும்.

பாகிஸ்தான் சென்ற வங்கதேசம் விளையாடிய 2 டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்று 2-0 என்று வரலாற்று வெற்றியோடு இந்தியாவில் கால் பதித்தது. இந்தியாவிற்கு எதிராக ஒரு போட்டியில் கூட ஜெயிக்காத வங்கதேசம் பாகிஸ்தானை வென்ற நம்பிக்கையோடு இந்தியாவையும் தோற்கடித்து வரலாறு படைக்கலாம் என்று நினைத்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Kanpur 2nd Test

Kanpur 2nd Test

ஆனால், இந்திய ஜாம்பவான்கள் அதற்கு வழி கொடுக்கவில்லை. சென்னையும் சேப்பாக்கம் ஸ்டேடியமும் அதற்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் வரிசையாக ஆட்டமிழந்தாலும், சென்னை நாயகன் ரவிச்சந்திரன் அஸ்வின் நிதானமாக விளையாடி அரைசதம் அடித்தார். ரவீந்திர ஜடேஜாவும் ரன்கள் சேர்த்துக் கொடுத்தார்.

இதனால், இந்தியா முதல் இன்னிங்ஸில் 376 ரன்களை எட்டியது. இதில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 56 ரன்களும், ரவிச்சந்திரன் அஸ்வின் 113 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 86 ரன்களும் எடுத்தனர். பின்னர் முதல் இன்னிங்ஸை விளையாடிய வங்கதேசம் 149 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதைத் தொடர்ந்து இந்தியா 2ஆவது இன்னிங்ஸை விளையாடியது. இதில் ரிஷப் பண்ட் 109 ரன்களும், சுப்மன் கில் 119* ரன்களும் எடுத்தனர். இறுதியாக இந்தியா 4 விக்கெட்டுகளுக்கு 287 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. மேலும், வங்கதேசத்திற்கு 514 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

35
IND vs BAN 2nd Test

IND vs BAN 2nd Test

பின்னர் 2ஆவது இன்னிங்ஸை விளையாடிய வங்கதேசம் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 234 ரன்கள் எடுத்து 280 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலமாக இந்தியா 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்று வென்றது.

இதைத் தொடர்ந்து 2ஆவது போட்டி தற்போது கான்பூரில் நடைபெற்று வருகிறது. கான்பூரில் மழை பெய்து வரும் நிலையில் டாஸ் தாமதமும் ஏற்பட்டதோடு முதல் நாள் போட்டியும் முன்கூட்டியே முடிக்கப்பட்டது. முதல் நாளில் வங்கதேசம் 35 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்கள் எடுத்தது.

45
India vs Bangladesh, 2nd Test

India vs Bangladesh, 2nd Test

இரண்டாவது நாளான இன்று ஒரு பந்து கூட வீசப்படவில்லை. மழையின் காரணமாக இன்றைய போட்டியும் நடைபெறவில்லை. நாளை போட்டி நடைபெற்றால் வங்கதேசம் பேட்டிங் செய்யும். நாளை முழுவதும் பேட்டிங் செய்து 4ஆவது நாளில் இந்தியா பேட்டிங் செய்தாலும் அதிரடியாக விளையாடினாலும், 5ஆவது நாளில் இந்தியா பேட்டிங் செய்து பாதி நாட்களுக்கு பிறகு வங்கதேசம் பேட்டிங் செய்ய வாய்ப்பிருக்கிறது. எது எப்படி இருந்தாலும் இந்தப் போட்டி கடைசியில் டிராவில் தான் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

55
IND vs BAN 2nd Test

IND vs BAN 2nd Test

இந்தப் போட்டி டிராவில் முடிந்தாலும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 1-0 என்று கைப்பற்றும். மேலும், வங்கதேசம் ஒரு முறை கூட வெற்றி பெறாத மோசமான அணி என்ற சாதனையை இந்தியாவிற்கு எதிராக படைக்கும் என்று கூறப்படுகிறது.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
ரவிச்சந்திரன் அஸ்வின்
ரோகித் சர்மா
இந்திய கிரிக்கெட் அணி
விராட் கோலி
 
1st ODI • NZ vs IND 2026
Live
NZNZ
(38.3 ov)182/9
INDIND
-
IND chose to bowl.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Glenn Maxwell: கிரிக்கெட்டுக்கு 'குட்பை' சொன்ன தமிழ்நாட்டு மருமகன்! 'பிக் ஷோ' கிளென் மேக்ஸ்வெல் திடீர் ஒய்வு!
Recommended image2
IPL 2027 Auction: ரூ.14 கோடி பிளேயரை கழட்டிவிடும் சிஎஸ்கே.. தோனியின் மாஸ்டர் பிளான்!
Recommended image3
Vaibhav Suryavanshi: "சுடு தண்ணி மட்டும் குடிப்பா.." வைபவ் சூர்யவன்ஷிக்கு ரசிகை அட்வைஸ்.. பாலகன் ரியாக்ஷன் வீடியோ பாருங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved