MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • இங்கிலாந்தை காலி செய்த இந்தியா.. ஐசிசி ரேங்கிங்கில் அதிரடி முன்னேற்றம்.. முதலிடம் யார்?

இங்கிலாந்தை காலி செய்த இந்தியா.. ஐசிசி ரேங்கிங்கில் அதிரடி முன்னேற்றம்.. முதலிடம் யார்?

ஐசிசி டெஸ்ட் ரேங்கில் இந்தியா 3வது இடம் பிடித்துள்ளது. இங்கிலாதை காலி செய்து இந்திய அணி அசத்தியுள்ளது. முதலிடம் எந்த அணி? என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம். 

2 Min read
Author : Rayar A
Published : May 01 2026, 09:12 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
ஐசிசி டெஸ்ட் ரேங்க்
Image Credit : X/BCCI

ஐசிசி டெஸ்ட் ரேங்க்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தனது வருடாந்திர ரேங்கிங்ஸ் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், ஆண்கள் டெஸ்ட் மற்றும் பெண்கள் ஒருநாள் போட்டி ஆகிய இரண்டிலுமே ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது. இந்த ரேங்கிங்ஸ் எப்படி கணக்கிடப்படுகிறது என்றால், மே 2025-க்குப் பிறகு நடந்த போட்டிகளுக்கு முழு வெயிட்டேஜும், அதற்கு முந்தைய இரண்டு ஆண்டுகளில் நடந்த போட்டிகளுக்கு 50% வெயிட்டேஜும் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆண்கள் டெஸ்ட் ரேங்கிங்ஸ் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் எந்த மாற்றமும் இல்லை. ஆஸ்திரேலிய அணி 3 புள்ளிகள் அதிகரித்து, 131 புள்ளிகளுடன் நம்பர் 1 இடத்தில் தனது நிலையை மேலும் வலுப்படுத்தியுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியனான தென்னாப்பிரிக்காவும் 3 புள்ளிகள் அதிகரித்து, 119 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் நீடிக்கிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
இந்தியா 3வது இடம்
Image Credit : ANI

இந்தியா 3வது இடம்

இந்திய அணி ஒரு இடம் முன்னேறி 104 புள்ளிகளுடன் 3-வது இடத்தைப் பிடித்துள்ளது. இதன் மூலம் இங்கிலாந்து அணியை இந்தியா பின்னுக்குத் தள்ளியுள்ளது. இங்கிலாந்து அணி 102 புள்ளிகளுடன் ஒரு இடம் சரிந்து 4-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஏப்ரல் 30, 2023-க்கு முன்பு நியூசிலாந்து, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் பெற்ற வெற்றிகள் மற்றும் பாகிஸ்தானை 3-0 என வீழ்த்தியது போன்ற பழைய வெற்றிகளின் வெயிட்டேஜ் குறைக்கப்பட்டதே இங்கிலாந்தின் சரிவுக்குக் காரணம்.

இந்த அப்டேட் பாகிஸ்தான் அணிக்கு சாதகமாக அமைந்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிராக 3-0 என்ற கணக்கில் சொந்த மண்ணில் தோற்றது மற்றும் 2024-ல் வங்கதேசத்திடம் 2-0 என தோற்றது ஆகியவற்றின் வெயிட்டேஜ் குறைக்கப்பட்டதால், பாகிஸ்தான் அணி (89) இலங்கையை (86) முந்தி 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் முதல் 10 இடங்களில் உள்ளன. அயர்லாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடாததால், ரேங்கிங்ஸ் பட்டியலில் இருந்து வெளியேறியுள்ளது.

33
எந்தெந்த அணிகள் பட்டியலில் இல்லை
Image Credit : ANI

எந்தெந்த அணிகள் பட்டியலில் இல்லை

அயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மீண்டும் பட்டியலுக்குள் வர, அடுத்த ஆண்டில் தலா இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும். பெண்கள் ஒருநாள் போட்டி ரேங்கிங்ஸிலும் இதே கதைதான். ஆஸ்திரேலியா தொடர்ந்து முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது. அந்த அணி 2 ரேட்டிங் புள்ளிகள் சரிந்து 163 புள்ளிகளைப் பெற்றிருந்தாலும், அவர்களது ஆதிக்கம் தொடர்கிறது. இங்கிலாந்து அணி 2 புள்ளிகள் அதிகரித்து 128 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருந்தாலும், இரு அணிகளுக்கும் இடையே பெரிய வித்தியாசம் உள்ளது.

முதல் ஆறு இடங்களில் எந்த மாற்றமும் இல்லை. இந்தியா (126), தென்னாப்பிரிக்கா (100), நியூசிலாந்து (93) மற்றும் இலங்கை (89) ஆகிய அணிகள் தங்களது இடங்களைத் தக்கவைத்துக் கொண்டுள்ளன. வங்கதேச அணி (73) பாகிஸ்தானை (72) பின்னுக்குத் தள்ளி 7-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 

இதற்கிடையில், தாய்லாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் கடந்த மூன்று ஆண்டுகளில் 8 ஒருநாள் போட்டிகளில் விளையாடாததால், தற்போதைக்கு ரேங்கிங்ஸ் பட்டியலில் இருந்து வெளியேறியுள்ளன. தாய்லாந்து அணி மீண்டும் ரேங்கிங்கிற்குள் வர இன்னும் ஒரு ஒருநாள் போட்டியிலும், நெதர்லாந்து அணி இரண்டு போட்டிகளிலும் விளையாட வேண்டும். வரும் வாரங்களிலும் ரேங்கிங்ஸ் அப்டேட்கள் தொடரும். மே 5-ஆம் தேதி ஆண்கள் மற்றும் பெண்கள் T20I ரேங்கிங்ஸும், மே 7-ஆம் தேதி ஆண்கள் ஒருநாள் போட்டி ரேங்கிங்ஸும் வெளியிடப்படும்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஐபிஎல்
இந்திய கிரிக்கெட் அணி
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Asian Games 2026: சிக்ஸர் மழை பொழிந்த இந்திய மகளிர் அணி.. ஆசிய விளையாட்டில் புதிய சாதனை ஸ்கோர்!
Recommended image2
IND vs JPN T20I: ஜப்பானுடன் டி20 மோதல், சஞ்சுவுடன் வைபவ் ஓப்பனிங், அபிஷேக்குக்கு ரெஸ்ட்!
Recommended image3
MS Dhoni: “பிளேயரா? மென்டரா?” தோனியின் அடுத்த ரோல் என்ன..? CSK வெளியிட்ட முக்கிய அப்டேட்..!
Related Stories
Recommended image1
Sanju Samson: வேற யாரு, நம்ம சஞ்சு தான்! உலகக்கோப்பையில் கலக்கிய சஞ்சு சாம்சனுக்கு ஐசிசி விருது..
Recommended image2
டி20 உலகக்கோப்பை 2026.. ஐசிசி கனவு அணியில் 4 இந்திய வீரர்களுக்கு இடம்.. அட! கேப்டன் இவரா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved