MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • IPL 2022: சீசனின் சிறந்த கேட்ச், சூப்பர் ஸ்டிரைக்கர், மதிப்புமிக்க வீரர்..! யார் யாருக்கு எந்தெந்த விருது?

IPL 2022: சீசனின் சிறந்த கேட்ச், சூப்பர் ஸ்டிரைக்கர், மதிப்புமிக்க வீரர்..! யார் யாருக்கு எந்தெந்த விருது?

ஐபிஎல் 15வது சீசனின் ஃபைனலில் ராஜஸ்தான் ராயல்ஸை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அறிமுக சீசனிலேயே ஐபிஎல் கோப்பையை வென்றது குஜராத் டைட்டன்ஸ் அணி. அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள், சூப்பர் ஸ்டிரைக்கர், மிகுந்த மதிப்புமிக்க வீரர், ஃபேர்ப்ளே, சீசனின் சிறந்த கேட்ச் என ஒவ்வொரு விருதையும் யார் யார் வென்றது என்று பார்ப்போம். 

2 Min read
Author : karthikeyan V
Published : May 30 2022, 06:57 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

ஐபிஎல் 15வது சீசனில் அதிக ரன்கள் அடித்து ஆரஞ்சு தொப்பையை தன்வசம் வைத்திருந்த ஜோஸ் பட்லர் அதிக ரன்கள் அடித்த வீரருக்கான விருதை வென்றார். இவர் இந்த சீசனில் அடித்த 863 ரன்கள் தான், ஒரு சீசனில் ஒரு வீரர் அடித்த 2வது அதிகபட்ச ஸ்கோர். விராட் கோலி 2016 ஐபிஎல்லில் 973 ரன்கள் குவித்தது தான் ஒரு சீசனில் ஒரு வீரர் அடித்த அதிகபட்ச ஸ்கோர்.
 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
210

அதிக விக்கெட்டுகளுக்கான விருது: யுஸ்வேந்திர சாஹல் - 27 விக்கெட்டுகள். ஒரு சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஸ்பின்னர் என்ற சாத்னையை சாஹல்படைத்தார்.
 

310

387.5 என்ற புள்ளிகளுடன் இந்த சீசனின் மிகுந்த மதிப்புமிக்க வீரருக்கான விருதையும் ஜோஸ் பட்லர் தான் வென்றார்.

410

சீசனின் சிறந்த கேட்ச்:

கேகேஆருக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி வீரர் எவின் லூயிஸ் ஒற்றை கையில் டைவ் அடித்து பிடித்த கேட்ச் தான் சீசனின் சிறந்த கேட்ச்சாக தேர்வு செய்யப்பட்டது. அதற்கான விருதை எவின் லூயிஸ் வென்றார்.

510

இந்த சீசனில் பவர்ப்ளேயில் நன்றாக விளையாடிய வீரருக்கான பவர்ப்ளேயர் விருதையும் பட்லரே வென்றார். அதிகமான பவர்ப்ளேக்களில் அதிரடியாக ஆடி ஆட்டத்தின் போக்கை மாற்றிய்வர் பட்லர் தான். அந்தவகையில், இந்த விருதை வென்றார்.
 

610

சீசனின் அதிவேக பந்து:

இந்த சீசனில் ஃபைனலுக்கு முன் வரை, சன்ரைசர்ஸ் பவுலர் உம்ரான் மாலிக் 157 கிமீ வேகத்தில் வீசிய பந்துதான் அதிவேக பந்தாக இருந்தது. ஆனால் ஃபைனலில் 157.3 கிமீ வேகத்தில் வீசி அதிவேக பந்துக்கான விருதை தட்டிச்சென்றார் லாக்கி ஃபெர்குசன். 
 

710

சூப்பர் ஸ்டிரைக்கர்:

183.33 என்ற அதிகபட்ச ஸ்டிரைக்ரேட்டில் ஆடிய ஆர்சிபி ஃபினிஷர் தினேஷ் கார்த்திக் சூப்பர் ஸ்டிரைக்கர் விருதை வென்றார்.
 

810

ஃபேர்ப்ளே விருது:

ஃபேர்ப்ளே விருதை ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பகிர்ந்துகொண்டன. 
 

910

வளர்ந்துவரும் வீரருக்கான விருது:

வளர்ந்துவரும் வீரருக்கான விருது சன்ரைசர்ஸ் ஃபாஸ்ட் பவுலர் உம்ரான் மாலிக்கிற்கு வழங்கப்பட்டது. ஐபிஎல்லில் மிரட்டலாக பந்துவீசிய உம்ரான் மாலிக், அதன் பலனாக இந்திய டி20 அணியில் இடம்பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
 

1010

அதிக சிக்ஸர்களுக்கான விருது: ஜோஸ் பட்லர் - 45 சிக்ஸர்கள்
அதிக பவுண்டரிகளுக்கான விருது: ஜோஸ் பட்லர் - 83 பவுண்டரிகள்

About the Author

KV
karthikeyan V

Latest Videos
Recommended Stories
Recommended image1
IPL 2026: RCB vs GT மேட்ச் மழையால் ரத்தானால் பைனலுக்கு யாருக்கு வாய்ப்பு! ரிசர்வ் டே உண்டா?
Recommended image2
IPL 2026 Winner : இந்த வருஷம் ஐபிஎல் கப் இந்த டீமுக்கு தான்...! ஹர்திக் பாண்டியாவுக்குள் இப்படி ஒரு பவரா?
Recommended image3
IPL 2026: பிளேஆஃப்-க்குள் நுழைந்தது ராஜஸ்தான்! 'டாப் 4' அணிகளின் பிளேஆஃப் அட்டவணை இதோ!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved