ICC T20 Ranking: முதல் இடம் பிடித்த ஹர்திக், அதிரடியாக வரலாறு படைத்த திலக் வர்மா
ICC T20I தரவரிசை: ஐசிசி வெளியிட்டுள்ள புதிய தரவரிசையில், T20 ஆல்ரவுண்டர்களில் ஹர்திக் பாண்டியா முதலிடத்தைப் பிடித்துள்ளார். டாப் 10 T20 பேட்ஸ்மேன்களில் திலக் வர்மா இடம் பிடித்துள்ளார்.
ICC T20I தரவரிசை: சமீபத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் திலக் வர்மா அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதேபோல், ஹர்திக் பாண்டியாவும் தனது திறமையால் அசத்தினார். இதனால் இருவரும் ஐசிசி புதிய தரவரிசையில் சாதனை படைத்துள்ளனர். ஐசிசி வெளியிட்டுள்ள புதிய தரவரிசையில், T20 ஆல்ரவுண்டர்களில் ஹர்திக் பாண்டியா முதலிடத்தைப் பிடித்துள்ளார். T20 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் திலக் வர்மா டாப் 10ல் இடம் பிடித்துள்ளார்.
திலக் வர்மா
T20 பார்மட்டில் குறிப்பிடத்தக்க வெற்றிகளுடன், வொயிட் பால் கிரிக்கெட்டில் ஐசிசி வெளியிட்டுள்ள புதிய தரவரிசையில் இந்திய அணி வீரர்கள் சிறப்பான இடங்களை பிடித்துள்ளனர். ஐசிசி T20 ஆல்ரவுண்டர் தரவரிசையில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
சமீபத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான T20 தொடரை இந்தியா 3-1 என்ற கணக்கில் வென்றதில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாண்டியா, பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் முக்கிய பங்கு வகித்தார்.
அர்ஷ்தீப் சிங்
அதேபோல், இந்திய அணியின் இளம் பேட்டிங் நட்சத்திரம் திலக் வர்மா இரண்டு சதங்களுடன் 280 ரன்கள் சேர்த்து ஐசிசி ஆண்கள் T20 பேட்டிங் தரவரிசையில் 69 இடங்கள் முன்னேறி டாப்-10ல் இடம் பிடித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான T20 தொடரில் திலக் வர்மாவின் அற்புதமான ஆட்டத்தால், கேப்டன் சூர்யகுமார் யாதவை (நான்காவது இடம்) பின்னுக்குத் தள்ளி T20யில் அதிக புள்ளிகள் பெற்ற இந்திய பேட்ஸ்மேனாக உயர்ந்துள்ளார். திலக் வர்மாவுடன் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தனது பேட்டிங் திறமையை வெளிப்படுத்திய இந்திய விக்கெட் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் T20 பேட்டிங் தரவரிசையில் 22வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 23வது இடத்தில் உள்ளார். T20 பேட்டிங் தரவரிசையில் ஹென்ரிச் கிளாசென் (59வது இடம்) முன்னேற்றம் கண்டுள்ளார். ஐசிசி T20 பந்துவீச்சு தரவரிசையில் இந்திய இடதுகை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் தனது சிறந்த தரவரிசையான ஒன்பதாவது இடத்தைப் பிடித்துள்ளார். ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் ஆடம் ஜம்பா, நாதன் எல்லிஸ் ஆகியோரும் T20 பந்துவீச்சு தரவரிசையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளனர்.
சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிரான தொடர் வெற்றிக்குப் பிறகு, இலங்கை கிரிக்கெட் வீரர்கள் T20, ஒருநாள் தரவரிசையில் தங்கள் இருப்பை உறுதிப்படுத்தியுள்ளனர். T20 பேட்டிங் தரவரிசையில் குசல் மெண்டிஸ் 12வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஒருநாள் பந்துவீச்சு தரவரிசையில் மஹீஷ் தீக்ஷனா ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இலங்கை பேட்ஸ்மேன்கள் மெண்டிஸ், அவிஷ்கா பெர்னாண்டோ ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளனர். நியூசிலாந்தைச் சேர்ந்த வில் யங்கும் இலங்கைக்கு எதிரான தொடர்ச்சியான ஆட்டத்தால் 22வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.