Most Searched Cricketer: கூகுளின் 25 ஆண்டுகால வரலாற்றில் அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட் வீரராக விராட் கோலி சாதனை!
25 ஆண்டு கால வரலாற்றில் அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட் வீரர் விராட் கோலி என கூகுள் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Virat Kohli
2023 ஆம் ஆண்டு விளையாட்டுகளுக்கு ஒரு அதிரடியான வருடமாகும். இந்த ஆண்டு முழுவதும் பல்வேறு நிகழ்வுகளில் தேசம் அனைத்து விளையாட்டுகளிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை எடுத்துள்ளது, மேலும் உலகெங்கிலும் உள்ள விளையாட்டு வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி மூவர்ணக் கொடியை உயர்த்துவதை காண முடிந்தது. In 2023 Virat Kohli Most Searched Cricketer in Google
Virat Kohli
ஹாங்ஷோவில் நடந்த 19ஆவது ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா முதல் முறையாக 100க்கும் அதிகமான பதக்கங்களை வென்று வரலாறு படைத்தது. 28 தங்கம், 38 வெள்ளி மற்றும் 41 வெண்கலம் என்று மொத்தமாக 107 பதக்கங்களை வென்றது.
most searched cricketer
இந்திய அணி ஆசிய கோப்பையை வென்று சாதனை படைத்தது. ஆனால், இந்தியாவில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்து 2ஆவது இடம் பிடித்தது. இதில், ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி எப்போதும் போன்று சிறந்து விளங்கினார்கள்.
most searched cricketer 2023
இந்த நிலையில் தான், 25 ஆண்டுகால வரலாற்றில் அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட் வீரர் விராட் கோலி என்று கூகுள் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணிக்கு கேப்டனாக செயல்பட்ட விராட் கோலி, அதன் பிறகு இந்திய அணிக்கு கேப்டனாக பல சாதனைகளை சொந்தமாக்கினார். ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக 16 ஆண்டுகளாக விளையாடியுள்ளார்.
Google: most searched cricketer in 2023
கடந்த 2008 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் மூலமாக இந்திய அணியில் அறிமுகமானார். தற்போது வரையில், 292 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 13,848 ரன்கள் குவித்துள்ளார். இதில், 50 சதமும், 72 அரைசதமும் அடங்கும்.
Virat Kohli
நடந்து முடிந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் 50ஆவது சதம் அடித்து சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார். அதுமட்டுமின்றி, இந்த தொடரில் 765 ரன்கள் குவித்து ஒரு தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையையும் தனதாக்கினார்.
Indian Cricket Team
ஒரு கிரிக்கெட் வீரராக மட்டுமின்றி, அவரது ஃபேஷன், தனிப்பட்ட வாழ்க்கை முறை, டாட்டூக்கள் மீதான அவரது காதல் உள்ளிட்ட அவரது ஆளுமை உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளது. கடந்த சில வருடங்களாக கிரிக்கெட் வீரருடன் இணைந்து பணியாற்ற பல பிராண்டுகள் ஆர்வம் காட்டியுள்ளதால், கூகுளிடமிருந்து சமீபத்திய அங்கீகாரம் அவரது உலகளாவிய ஈர்ப்புக்கு ஒரு சான்றாக அமைநதுள்ளது.
Virat Kohli
விராட் கோலியைத் தொடர்ந்து கூகுளால் அதிகம் தேடப்பட்ட கால்பந்து வீரராக கிறிஸ்டியானோ ரொனால்டோ தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐந்து முறை பலோன் டி'ஓர் வெற்றியாளருடன் திரையைப் பகிர்ந்து கொள்ளாவிட்டாலும், கோலி முன்பு போர்த்துகீசிய நட்சத்திரத்துடன் அதே விளம்பரத்தின் ஒரு பகுதியாக இருந்தார். இருப்பினும், 2022 இல் தனது அணி FIFA உலகக் கோப்பையில் இருந்து வெளியேற்றப்பட்டபோது கோலி ஒரு சிந்தனைமிக்க செய்தியை Instagram இல் வெளியிட்டார்.