பும்ராவை பார்த்தாலே பயந்து நடுங்கும் ஆஸ்திரேலியா – உஷாரா இருக்கணும் என்று வார்னிங் கொடுத்த மேக்ஸ்வெல்!
ஆஸ்திரேலிய அணிக்கு ஜஸ்ப்ரித் பும்ராவின் பந்துவீச்சு பயத்தை ஏற்படுத்தும் என்று கிளென் மேக்ஸ்வெல் கூறியுள்ளார். பும்ரா, அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோரை சமாளிப்பது சவாலாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
IND vs AUS, Border Gavaskar Trophy 2024
ஜஸ்ப்ரித் பும்ராவின் அட்டாக்கிங் பவுலிங்கை கண்டாலே ஆஸ்திரேலியாவிற்கு பயமாக இருக்கும் என்று கிளென் மேக்ஸ்வெல் கூறியிருக்கிறார். அதாவது, இந்திய அணியின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா என்று பாராட்டு தெரிவித்திருக்கிறார். நவம்பர் மாதம் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர் தொடங்குகிறது.
5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. 2016 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரையில் கடைசியாக நடைபெற்ற 4 தொடர்களையும் இந்தியா வென்றிருக்கிறது. அதற்கு முன்னதாக 2015 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற தொடரை ஆஸி கைப்பற்றியிருக்கிறது.
Jasprit Bumrah
இந்த நிலையில் தான் கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்கு பிறகு பார்டர் கவாஸ்கர் டிராபியை கைப்பற்றியாக வேண்டும் என்ற வெறியோடு ஆஸி நவம்பரில் இந்தியாவை எதிர்கொள்கிறது. அப்படி களமிறங்கும் ஆஸிக்கு சிம்ம சொப்பனமாக இருப்பது இந்திய அணியின் அட்டாக்கிங் பவுலரான ஜஸ்ப்ரித் பும்ரா தான். இந்த தொடருக்கு முன்னதாக ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டரான கிளென் மேக்ஸ்வெல் ஆஸ்திரேலியாவிற்கு பயத்தை ஏற்படுத்தக் கூடிய ஒரே ஒரு பவுலர் பும்ரா தான் என்று கூறியுள்ளார்.
IND vs AUS, BGT 2024
டி20, டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் சிறந்த பந்து வீச்சாளர் பும்ரா என்று அவருக்கு பாராட்டு தெரிவித்திருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டைப் பொறுத்த வரையில் ஆஸி பேட்ஸ்மேன்களுக்கு வேகப்பந்து வீச்சாளர்கள் அச்சுறுத்தலாக இருப்பார்கள். கடந்த 2013 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த ஜஸ்ப்ரித் பும்ராவுடன் நானும் இருந்தேன். வலை பயிற்சியில் அவர் பந்து வீசுவதை கண்டு மிரண்டுவிட்டேன். அப்போது பார்த்தது போன்று இப்போதும் மிரள வைக்கிறார். டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் ஒரு சிறந்த பந்து வீச்சாளர் என்று கூறியுள்ளார்.
Glenn Maxwell
ஜஸ்ப்ரித் பும்ரா மட்டுமின்றி ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவருமே ஆட்டத்தின் போக்கை மாற்றக் கூடியவர்கள். நீண்ட காலமாக ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு எதிராக விளையாடியதால், அவர்களைப் பற்றி நன்கு தெரியும். 2013 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான மேக்ஸ்வெல் கடைசியாக 2017 ஆம் ஆண்டு வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடினார்.
அஸ்வின் மற்றும் ஜடேஜா இருவரும் இணைந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் 330 இன்னிங்ஸ் விளையாடி 50 முறை 5 விக்கெட்டுகள் உள்பட மொத்தமாக 821 விக்கெட்டுகள் கைப்பற்றி உள்ளனர். அவர்கள் இருவருக்கும் எதிராக நாங்கள் சிறப்பாக விளையாடினால் தான் எங்களால் சிறந்த நிலையை அடைய முடியும் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.