தம்பி கொஞ்சம் அடக்கி வாசிங்க; இல்லைனா அடி வாங்கிருவீங்க..! ஸ்மித்துக்கு கவாஸ்கர் எச்சரிக்கை

First Published Nov 23, 2020, 4:13 PM IST

முகமது ஷமியிடம் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் உள்ளது. 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் முடிந்த பின்னர் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் நடக்கவுள்ளது. கடந்த முறை இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றபோது ஸ்மித்தும் வார்னரும் அந்த அணியில் ஆடாத நிலையில், முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்தது இந்திய அணி.

ஆனால் இம்முறை ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர்களான ஸ்மித்தும் வார்னரும் ஆடுவதால் இந்த தொடர் விறுவிறுப்பானதாகவும் மிகக்கடுமையாகவும் அமையும். இரு அணிகளுமே பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சமபலம் வாய்ந்த அணிகளாக திகழ்கின்றன.

ஃபாஸ்ட் பவுலிங்கிற்கு சாதகமான ஆடுகளங்களை கொண்ட ஆஸ்திரேலியாவில் ஆதிக்கம் செலுத்துமளவிற்கான சிறந்த ஃபாஸ்ட் பவுலிங்கை இந்திய அணி கொண்டுள்ளது. பும்ரா, ஷமி, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் என பெரும் படையே உள்ளது.

ஸ்மித்தை நியூசிலாந்தின் நீல் வாக்னர் ஒரே தொடரில் 4 முறை ஷார்ட் பிட்ச் பந்தில் வீழ்த்த, மற்ற அணிகளும் அவருக்கெதிராக அந்த உத்தியை கையாண்டன. ஸ்மித்தின் பலவீனமாக ஷார்ட் பிட்ச் பந்துகள் திகழ்வதாக அனைவரும் கருதும் நிலையில், தனக்கு எதிராக ஷார்ட் பிட்ச் பந்துகளை வீசி வாக்னர் வெற்றிகண்ட அளவிற்கு, மற்ற அணிகளின் ஷார்ட் பிட்ச் பந்து பருப்பு தன்னிடம் வேகவில்லை எனவும், இந்தியாவுக்கு எதிராக ஷார்ட் பிட்ச் பந்துகளையும் பவுன்ஸர்களையும் எதிர்கொள்ள தான் தயார் எனவும் ஸ்மித் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் கவாஸ்கர்,  எந்த பேட்ஸ்மேனுமே ஷார்ட் பாலுக்கு தயாராக இருக்க முடியாது. ஒரு நல்ல ஷார்ட் பிட்ச் பந்து எப்பேர்ப்பட்ட பேட்ஸ்மேனுக்கும் மிகப்பெரிய தொல்லையாக இருக்கும். எனவே யாருமே ஷார்ட் பிட்ச் பந்துக்கு நான் தயார் என்று சொல்ல முடியாது. அதுவும் பவுன்ஸர்களை அருமையாக வீசக்கூடிய முகமது ஷமி மாதிரியான பவுலர், திட்டமிட்டபடி சரியாக பவுன்ஸர் வீசினால் அதை எதிர்கொள்வது எந்த பேட்ஸ்மேனுக்குமே கடினம்.

ஷமி அவ்வளவு பெரிய உயரமெல்லாம் இல்லை. ஆனால் அவரது பவுன்ஸர் பேட்ஸ்மேனின் தோள்பட்டை மற்றும் தலைக்கு வரும். அதை ஆடுவது கடினம். ஷமி சரியான ரிதமில் இருந்தால், அவரது பவுலிங்கை ஆடுவது மிகக்கடினம் என்று கவாஸ்கர் தெரிவித்தார்.

Today's Poll

எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?