ஐபிஎல் 2020: சீசனின் பாதியில் கேப்டன்சி கை மாறிடும்.. உறுதியாக நம்பும் கவாஸ்கர்

First Published 19, Sep 2020, 3:56 PM

ஐபிஎல் 13வது சீசன் இன்று தொடங்கவுள்ள நிலையில், சீசனின் பாதியில் கேகேஆர் அணியின் கேப்டன்சி கை மாற வாய்ப்புள்ளதாக முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 13வது சீசன் இன்று தொடங்குகிறது. அபுதாபியில் நடக்கும் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸும் சிஎஸ்கேவும் மோதுகின்றன. ஐபிஎல்லில் அதிக முறை கோப்பையை வென்ற டாப் 2 அணிகளும் முதல் போட்டியில் மோதுவதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கேவிற்கு அடுத்த வெற்றிகரமான அணி கேகேஆர். கேகேஆர் அணி 2012 மற்றும் 2014 ஆகிய 2 சீசன்களிலும் கோப்பையை வென்றது. 2 முறை கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் கம்பீர், 2017 சீசனுடன் கேகேஆர் அணியிலிருந்து விலகினார்.

இதையடுத்து 2018 சீசனில் கேகேஆர் அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டார். அவர் தான் இப்போதுவரை அந்த அணியின் கேப்டனாக செயல்பட்டுவருகிறார். அவரது தலைமையில், 2018ல் பிளே ஆஃபிற்கு சென்ற கேகேஆர் அணி, கடந்த சீசனில் பிளே ஆஃபிற்கே தகுதிபெறாமல் லீக் சுற்றிலேயே வெளியேறியது.

தினேஷ் கார்த்திக்கின் கேப்டன்சி, களவியூகம், திட்டமிடல் ஆகியவை சர்ச்சைக்குள்ளானது. அதிரடி மன்னன் ஆண்ட்ரே ரசல் நல்ல ஃபார்மில் தெறிக்கவிட்ட நிலையில், அவரை கடந்த சீசனில் முன்வரிசையில் இறக்காதது பெரும் சர்ச்சையை கிளப்பியதுடன், விமர்சனத்துக்கும் வழிவகுத்தது.

இந்நிலையில், இந்த சீசனிலும் தினேஷ் கார்த்திக் தான் கேப்டனாக செயல்படவுள்ளார். பிரெண்டன் மெக்கல்லம் அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ளார். ரசல், ஷுப்மன் கில், சுனில் நரைன், நிதிஷ் ராணா, இயன் மோர்கன், பாட் கம்மின்ஸ், குல்தீப் யாதவ் என சிறந்த வீரர்களை கொண்ட அணியாக கேகேஆர் திகழ்வதால், அந்த அணியின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவுள்ளது.

கடந்த 2 சீசன்களிலும் தினேஷ் கார்த்திக்கிற்கு களத்தில் வியூக ரீதியாக உதவுதற்கு சரியான வீரர் இல்லாமல் இருந்த நிலையில், இங்கிலாந்து உலக கோப்பை வின்னிங் கேப்டன் இயன் மோர்கன், இந்த சீசனில் கேகேஆர் அணியில் உள்ளார். எனவே அவர் கேப்டன்சியில் தினேஷ் கார்த்திக்கிற்கு உதவிகரமாக இருப்பார் என்பதால், அந்த அணி மேலும் வலுப்பெற்றுள்ளது.

இந்நிலையில், இந்த சீசனின் இடையிலேயே இயன் மோர்கனே கேப்டன்சி பொறுப்பை ஏற்கக்கூடிய வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கவாஸ்கர், இயன் மோர்கன் டாப் ஆர்டர் பேட்டிங்கிற்கு வலு சேர்ப்பதுடன், அவரது கேப்டன்சி திறன், கேகேஆர் அணிக்கு மிகவும் உதவிகரமாகவும் வலு சேர்ப்பதாகவும் அமையும். சீசனின் பாதியிலேயே மோர்கன் கேகேஆர் அணியின் கேப்டன்சி பொறுப்பை ஏற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று கவாஸ்கர் தெரிவித்தார்.

கேகேஆர் அணி:

தினேஷ் கார்த்திக்(கேப்டன்), ஆண்ட்ரே ரசல், ஷுப்மன் கில், சுனில் நரைன், கமலேஷ் நாகர்கோடி, குல்தீப் யாதவ், லாக்கி ஃபெர்குசன், நிதிஷ் ராணா, பிரசித் கிருஷ்ணா, ரிங்கு சிங், சந்தீப் வாரியர், ஷிவம் மாவி, சித்தேஷ் லத், பாட் கம்மின்ஸ், இயன் மோர்கன், வருண் சக்கரவர்த்தி, டாம் பாண்ட்டன், அலி கான், ராகுல் திரிபாதி, கிறிஸ் கிரீன், நிகில் ஷங்கர் நாயக், சித்தார்த் மணிமாறன்.

loader