கேப்டன் பதவிக்காக ஹர்திக் பாண்டியா தனது காயத்தை மறைக்கிறாரா? சைமன் டவுல் விமர்சனம்!
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவிக்காக ஹர்திக் பாண்டியா தனது காயத்தை மறைப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.
Mumbai Indians Captain Hardik Pandya
ஐபிஎல் 2024 கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டார். இவரது தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியானது தொடர்ந்து 3 போட்டிகளில் தோல்வி அடைந்தது. இதையடுத்து டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதல் வெற்றியை பெற்றது.
MI, IPL 2024
கடைசியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக நடந்த 25ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் தான் குறைவான ஓவர்கள் மட்டுமே ஹர்திக் பாண்டியா பந்து வீசி வருவதால் அவர் மீதான சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
Hardik Pandya, Mumbai Indians
இது குறித்து நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் சைமன் டவுல் கூறியிருப்பதாவது: ஹர்திக் பாண்டியாவின் அதிகம் மற்றும் குறைவான ஓவர்கள் குறித்து கவலை தெரிவித்துள்ளார். ஆர்சிபி அணிக்கு எதிராக ஒரு ஓவர்கள் வீசி 13 ரன்கள் கொடுத்தார். ஒரு கேப்டனாக ஹர்திக் பாண்டியா குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக முதல் ஓவரை வீசினார். இந்த போட்டியில் 3 ஓவர்கள் வீசி 30 ரன்கள் கொடுத்தார்.
IPL 2024, Mumbai Indians
ஆனால், அதன் பிறகு நடந்த ஹைதராபாத் அணிக்கு எதிராக 4 ஓவர்கள் வீசி 46 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றினார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக பந்து வீசவில்லை. டெல்லிக்கு எதிரான போட்டியிலும் பந்து வீசவில்லை. இப்படி ஒரு போட்டியில் அதிக ஓவர் வீசிவிட்டு, அடுத்த போட்டியில் பந்து வீசவில்லை என்றால், அவர் காயம் அடைந்துள்ளார். அவரிடம் ஏதோ தவறு இருக்கிறது என்று கிரிக்பஸ்ஸில் கூறியிருக்கிறார்.
Mumbai Indians, Hardik Pandya
டெல்லிக்கு எதிரான போட்டியில் ஏன் பந்து வீசவில்லை என்பது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பிய போது சரியான நேரம் காரணத்தை மறைமுகமாக பாண்டியா குறிப்பிட்டுள்ளார். ஆனால், உண்மையில், அடுத்து டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடைபெற இருக்கும் நிலையில், அவர் கடுமையான காயம் ஏற்படாமல் தடுப்பதற்கு பந்து வீசுவதை குறைக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
Hardik Pandya, Mumbai Indians
ஏற்கனவே ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் பந்து வீசும் போது காலில் காயம் ஏற்பட்ட நிலையில், உலகக் கோப்பை தொடரிலிருந்து விலகினார். அதன் பிறகு ஆஸ்திரேலியா டி20 தொடர், தென் ஆப்பிரிக்கா டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி20 தொடர், ஆப்கானிஸ்தான் டி20 தொடர், இங்கிலாந்து டெஸ்ட் தொடர் என்று எந்த தொடரிலும் இடம் பெறவில்லை.