MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • டெஸ்ட் தொடர் கை மீறிவிட்டது: பேட் கம்மின்ஸ் ஆஸ்திரேலியாவில் இருந்தால் போதும்: ஜேசன் கில்லெஸ்பி!

டெஸ்ட் தொடர் கை மீறிவிட்டது: பேட் கம்மின்ஸ் ஆஸ்திரேலியாவில் இருந்தால் போதும்: ஜேசன் கில்லெஸ்பி!

இந்தியாவுக்கு எதிரான எஞ்சிய போட்டிகளில் விளையாடாமல் பேட் கம்மின்ஸ் ஆஸ்திரேலியாவிலேயே இருக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் ஜேசன் கில்லெஸ்பி கூறியுள்ளார்.

2 Min read
Author : Rsiva kumar
Published : Feb 26 2023, 02:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
பேட் கம்மின்ஸ்

பேட் கம்மின்ஸ்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது. இதில், இந்தியா முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்திலும் 2ஆவது டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது.
 

29
பேட் கம்மின்ஸ்

பேட் கம்மின்ஸ்

இதன் மூலம் இந்தியா 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இதையடுத்து வரும் மார்ச் 1 ஆம் தேதி 3ஆவது டெஸ்ட் போட்டியும், 9ஆம் தேதி 4ஆவது டெஸ்ட் போட்டியும் நடக்கிறது.

39
பேட் கம்மின்ஸ்

பேட் கம்மின்ஸ்

ஆனால், அடுத்தடுத்த போட்டிகளில் ஆஸ்திரேலியா ஜெயிக்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவில் டேவிட் வார்னர், ஜோஷ் ஹசல்வுட் ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளனர். மிட்செல் ஸ்டார்க் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கவில்லை. 

49
பேட் கம்மின்ஸ்

பேட் கம்மின்ஸ்

மிட்செல் ஸ்வீப்சனும் முதல் குழந்தை பிறந்ததைத் தொடர்ந்து நாடு திரும்பினார். இப்படி ஆஸ்திரேலியாவுக்கு அடுத்தடுத்து சோதனைகள் நடந்த நிலையில், பேட் கம்மின்ஸூம் கடந்த 20 ஆம் தேதி நாடு திரும்பினார்.

59
பேட் கம்மின்ஸ்

பேட் கம்மின்ஸ்

ஆம், 2வது டெஸ்ட் போட்டி முடிந்ததும், ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் குடும்ப விவகாரம் காரணமாக ஆஸ்திரேலியாவிற்கு திரும்பினார். அவர் 3வது டெஸ்ட்டுக்கு முன் இந்தியா திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது தாய்க்கு உடம்பு சரியில்லை என்பதால் அவர் இந்தியாவிற்கு திரும்புவதில்லை என்று முடிவு எடுத்துள்ளார்.

69
பேட் கம்மின்ஸ்

பேட் கம்மின்ஸ்

ஆனால், 4ஆவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் தான் ஆஸ்திரேலியாவின் முன்னாள் பந்து வீச்சாளர் ஜேசன் கில்லெஸ்பி, பேட் கம்மின்ஸ் ஆஸ்திரேலியாவிலேயே இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
 

79
பேட் கம்மின்ஸ்

பேட் கம்மின்ஸ்

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: ஏற்கனவே டெஸ்ட் தொடரி கை மீறி சென்றுவிட்டது. அப்படியிருக்கும் போது இந்த சூழ்நிலையில், பேட் கம்மின்ஸ் அவரது வீட்டில் தான் இருக்க வேண்டும்.

89
பேட் கம்மின்ஸ்

பேட் கம்மின்ஸ்

இந்த ஆண்டுக்குப் பிறகு இன்னும் முக்கியமான தொடர்கள் ஆஸ்திரேலிய கேப்டனுக்கு கிடைக்கும். ஆனால்,  அவரது குடும்பத்துடன் இருப்பதற்கு இதுதான் சரியான சமயம். ஒரு மகனாக உங்களது குடும்பத்தைச் சுற்றியே இருங்கள். 

99
பேட் கம்மின்ஸ்

பேட் கம்மின்ஸ்

குடும்பம் தான் முதலிடம். ஏற்கனவே 2 போட்டிகளில் வெற்றி பெற்று, 3ஆவது போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் நோக்கத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா எஞ்சிய போட்டிகளில் வெற்றி பெற்று ஒயிட்வாஷ் ஆவதை தவிர்க்கும் என்று அவர் கூறியுள்ளார்.
 

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
WI vs SA T20 World Cup 2026: Wi, SA போட்டியில் கவனம் செலுத்தும் இந்தியர்கள்..! சாதிக்கப்போவது யார்?
Recommended image2
Ind Vs ZIM: இந்திய அணிக்கு ஆபத் பாண்டவராக மாறும் சேட்டன்..! மிடில் ஆர்டரில் களம் இறக்கப்படும் சஞ்சு
Recommended image3
அரையிறுதிக்கு முன்னேறுமா இந்தியா..? ஜிப்பாப்வே உடன் இன்று வாழ்வா.. சாவா.. போட்டி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved