MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • முதல் மனைவியின் துரோகத்தால் தற்கொலை முயற்சி!தீபிகாவின் காதலால் 2வது இன்னிங்ஸில் அடித்துஆடும் தினேஷ் கார்த்திக்

முதல் மனைவியின் துரோகத்தால் தற்கொலை முயற்சி!தீபிகாவின் காதலால் 2வது இன்னிங்ஸில் அடித்துஆடும் தினேஷ் கார்த்திக்

தினேஷ் கார்த்திக்கின் கிரிக்கெட் கெரியரும் சரி, தனிப்பட்ட வாழ்க்கையும் சரி, இரண்டுமே கடும் போராட்டங்களும் வலி வேதனைகளும் நிறைந்தது. இன்றைக்கு ஆர்சிபி அணியின் ஃபினிஷராக பட்டைய கிளப்பிவரும் தினேஷ் கார்த்திக்கின் போராட்டங்களை பார்ப்போம். 

2 Min read
Author : karthikeyan V
| Updated : May 16 2022, 05:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

இந்திய கிரிக்கெட் அணியில் 2004ம் ஆண்டு இளம் வயதிலேயே அறிமுகமான தினேஷ் கார்த்திக், தோனியிடம் தனது இடத்தை இழந்தார். தோனியின் அதிரடியான பேட்டிங், அருமையான விக்கெட் கீப்பிங் ஆகியவற்றின் விளைவாக அவர் இந்திய அணியில் நிரந்தர இடம்பிடிக்க, தினேஷ் கார்த்திக் அவரிடம் தனக்கான நிரந்தர இடத்தை இழந்தார். தோனிக்கு அடுத்து 2வது விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனாகவே தினேஷ் கார்த்திக் பார்க்கப்பட்டார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
28

இப்போது ஐபிஎல்லில் 200 என்ற ஸ்டிரைக் ரேட்டுடன் ஆர்சிபி அணியின் ஃபினிஷராக ஜொலித்துவரும் தினேஷ் கார்த்திக்கின் இந்த வளர்ச்சிக்கு பின் கடுமையான போராட்டங்கள் நிறைந்திருக்கிறது. 
 

38

கிரிக்கெட் கெரியரில் இந்திய அணியில் தனக்கான நிரந்தர இடத்தை பிடிக்க போராடிவந்த தினேஷ் கார்த்திக்கிற்கு, ஆதரவாக இருந்து அவருக்கு ஊக்குமும் உத்வேகமும் அளித்து வளர்த்துவிட வேண்டிய மனைவியே அவருக்கு துரோகமும் செய்தார். தினேஷ் கார்த்திக்கின் முதல் மனைவி நிகிதா, அவரது சக வீரரான முரளி விஜயுடன் தொடர்பில் இருந்தார். இது தமிழ்நாடு ரஞ்சி அணியில் ஆடிய அனைவருக்குமே தெரியும்.

48

திடீரென ஒரு நாள், தான் முரளி விஜயால் கர்ப்படமைந்திருப்பதாகவும், அதனால் விவாகரத்து செய்வதாகவும் தினேஷ் கார்த்திக்கிடம் கூட, மனிதன் மனம் உடைந்து போய்விட்டார். தன் மனைவி செய்த துரோகத்தை சகித்துக்கொள்ளவும், தாங்கிக்கொள்ளவும் முடியாமல் தற்கொலை செய்யக்கூட முயற்சித்துள்ளார் தினேஷ் கார்த்திக்.
 

58

தன் மனைவி செய்த துரோகம் கொடுத்த வலியால் கிரிக்கெட்டில் கவனம் செலுத்த முடியாமல், இந்திய அணியில் தனக்கான இடத்தை இழந்ததுடன், ரஞ்சிக்கான தமிழ்நாடு அணியின் கேப்டன்சியையும் முரளி விஜயிடம் இழந்தார். 
 

68

துவண்டு போயிருந்த தினேஷ் கார்த்திக்கை அவரது பயிற்சியாளர், தீபிகா பல்லிக்கல்(தினேஷ் கார்த்திக்கின் இப்போதைய மனைவி) பயிற்சி செய்துகொண்டிருந்த ஜிம்மில் சேர்த்துவிட, அங்கு தினேஷ் கார்த்திக்கின் நிலையை கண்டு வருத்தப்பட்ட தீபிகா, அவருக்கு ஊக்கமும் உத்வேகமும் அளித்தார். அவர்கள் இருவருக்கும் காதல் மலர, அவரை 2015ம் ஆண்டு மணந்தார்.
 

78

தீபிகாவை மணந்தபின்னர் தினேஷ் கார்த்திக் வளர்ச்சிப்பாதையை நோக்கி நகர்ந்ததுடன், தோல்விகளால் துவளாமல் தொடர்ந்து எழுந்துகொண்டே இருந்தார். அவ்வப்போது இந்தியாவிற்காக ஆட கிடைத்த வாய்ப்புகளை நன்கு பயன்படுத்திக்கொண்டார். ஆனால் தோனிக்கு பின் ரிஷப் பண்ட் இந்திய அணியில் விக்கெட் கீப்பர் இடத்தை பிடித்துவிட்டதால், இப்போதும் அணியில் நிரந்தர இடம் கிடைக்காமல் தவித்துவருகிறார். ஆனாலும் தொடர்ந்து கிரிக்கெட் ஆடி அசத்திவருகிறார்.

88

இப்போது ஆர்சிபி அணியின் ஃபினிஷராக ஜொலித்துவருகிறார். ஆனால் தினேஷ் கார்த்திக்கிற்கு துரோகம் செய்த முரளி விஜய், தினேஷ் கார்த்திக்கின் முதல் மனைவி நிகிதாவை திருமணம் செய்தபின்னர் வீழ்ச்சியை சந்தித்தார்.

About the Author

KV
karthikeyan V
தினேஷ் கார்த்திக்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
இந்திய கிரிக்கெட் அணி

Latest Videos
Recommended Stories
Recommended image1
15 வயசு சிறுவனின் அசுர வேட்டை.. பும்ராவின் வீழ்ச்சி.. PBKSன் சோக கதை.. செம ட்விஸ்ட் கொடுத்த IPL 2026
Recommended image2
IPL 2026: RCB vs GT மேட்ச் மழையால் ரத்தானால் பைனலுக்கு யாருக்கு வாய்ப்பு! ரிசர்வ் டே உண்டா?
Recommended image3
IPL 2026 Winner : இந்த வருஷம் ஐபிஎல் கப் இந்த டீமுக்கு தான்...! ஹர்திக் பாண்டியாவுக்குள் இப்படி ஒரு பவரா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved