- Home
- Sports
- Sports Cricket
- IND vs WI: இந்திய அணியின் லக்கி ஸ்டார் துருவ் ஜுரெல்! அட! இப்படி ஒரு சாதனையா?
IND vs WI: இந்திய அணியின் லக்கி ஸ்டார் துருவ் ஜுரெல்! அட! இப்படி ஒரு சாதனையா?
India vs West Indies Test: இந்திய விக்கெட் கீப்பர் துருவ் ஜுரெல் ஒரு அரிய சாதனையை படைத்து அணியின் லக்கி ஸ்டாராக மாறியுள்ளார். இது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

வெஸ்ட் இண்டீஸ் தொடரை கைப்பற்றிய இந்தியா
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது கிரிக்கெட் டெஸ்டிலும் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, 2 0 என்ற கணக்கில் ஓயிட்வாஷ் செய்து தொடரை வென்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய விக்கெட் கீப்பர் துருவ் ஜுரெல் ஒரு அரிய சாதனையை படைத்துள்ளார். அதாவது டெஸ்ட் அறிமுகத்திற்குப் பிறகு தொடர்ச்சியாக அதிக வெற்றிகளில் பங்கெடுத்த வீரர் என்ற சாதனையை துருவ் ஜுரெல் தன்வசமாக்கியுள்ளார்.
துருவ் ஜுரெல் சாதனை
2024ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அறிமுகமான பிறகு, துருவ் ஜுரெல் இதுவரை விளையாடிய ஏழு டெஸ்டுகளிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. அறிமுகப் போட்டிக்குப் பிறகு விளையாடிய ஆறு டெஸ்டுகளில் வென்ற வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமாரின் சாதனையை ஜுரெல் இன்று முறியடித்தார்.
பண்ட் காயத்தால் கிடைத்த வாய்ப்பு
இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது ரிஷப் பண்டுக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டதால், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டு போட்டிகளிலும் ஜுரெலுக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய அவர் முதல் டெஸ்டில் சதம் அடித்து இந்தியாவின் டாப் ஸ்கோரர் ஆனார். 2024-ல் இங்கிலாந்துக்கு எதிராக ராஜ்கோட் டெஸ்டில்தான் ஜுரெல் அறிமுகமானார்.
ஆஸ்திரேலிய தொடரில் நீக்கம்
அந்தப் போட்டியில் 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா, பின்னர் ஜுரெல் விளையாடிய ராஞ்சி மற்றும் தரம்சாலா டெஸ்டுகளிலும் வெற்றி பெற்று இங்கிலாந்துக்கு எதிரான தொடரை 3-1 என கைப்பற்றியது. பும்ரா கேப்டன்சியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பெர்த் டெஸ்டில் ஜுரெல் பின்னர் விளையாடினார். அந்த டெஸ்டில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பின்னர் இரண்டாவது டெஸ்டில் ரோஹித் திரும்பியபோது, ஜுரெல் ஆடும் லெவனில் இருந்து நீக்கப்பட்டார்.
இங்கிலாந்தில் வாய்ப்பு
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மீதமிருந்த நான்கு டெஸ்டுகளில் மூன்றில் இந்தியா தோற்றது, ஒன்று சமனில் முடிந்தது. இதில் ஒன்றில் கூட ஜுரெலுக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்கவில்லை. ரிஷப் பண்டுக்கு காயம் ஏற்பட்டதால், இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா ஆறு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஓவல் டெஸ்டில் ஜுரெலுக்கு மீண்டும் ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைத்தது.
லக்கி ஸ்டார் ஜுரெல்
தற்போது வெஸ்ட் விண்டீஸுக்கு எதிரான இரண்டு டெஸ்டுகளிலும் வெற்றி பெற்றதன் மூலம், விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெறும் இந்தியாவின் லக்கி ஸ்டாராக ஜுரெல் மாறியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஜுரெல் அடுத்து இந்தியாவுக்காக விளையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.