MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
House Construction Cost Ideas
OTT Release This Week
DA Hike
Moon Transit in Scorpio
Venus Retrograde
Train Lower Berth
Mercury Transit
8th Pay Commission
Chanakya Niti
Tamil Nadu Power Cut
FD Vs RD Calculator
Single Door Fridge Tips
Upcoming Hatchback Cars
Bigg Boss Tamil Season 10
  • Home
  • Sports
  • Sports Cricket
  • IPL 2023: சாதனை மன்னன் சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனி 200ஆவது போட்டி: நினைவு பரிசு வழங்கி கௌரவித்த என் சீனிவாசன்!

IPL 2023: சாதனை மன்னன் சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனி 200ஆவது போட்டி: நினைவு பரிசு வழங்கி கௌரவித்த என் சீனிவாசன்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான எம் எஸ் தோனி சிஎஸ்கேயின் கேப்டனாக 200ஆவது போட்டியில் களமிறங்கிய நிலையில், அவருக்கு அணியின் உரிமையாளர் என் சீனிவாசன் நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்துள்ளார்.

2 Min read
Author : Rsiva kumar
Published : Apr 12 2023, 09:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
எம்எஸ் தோனி 200ஆவது போட்டி நினைவுப் பரிசு

எம்எஸ் தோனி 200ஆவது போட்டி நினைவுப் பரிசு

ஐபிஎல் 2023 கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்று நடக்கும் 17ஆவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் என்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம் எஸ் தோனி பீல்டிங் தேர்வு செய்துள்ளார். இதற்கு முன்னதாக நடந்த முதல் போட்டியைப் போன்று இந்தப் போட்டி இருக்காது என்பதற்காக பீல்டிங் தேர்வு செய்துள்ளோம். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
29
எம்எஸ் தோனி 200ஆவது போட்டி நினைவுப் பரிசு

எம்எஸ் தோனி 200ஆவது போட்டி நினைவுப் பரிசு

மேலும், 2ஆவது இன்னிங்ஸ் தான் சரியானதாக இருக்கும் என்று கூறியுள்ளார். இந்தப் போட்டியில் மொயீன் அலி மற்றும் மகேஷ் தீக்‌ஷனா ஆகியோர் களமிறங்குகின்றனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் டிரெண்ட் போல்ட் காயம் காரணமாக இடம் பெறவில்லை. குல்தீப் சென், சந்தீப் சர்மா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

39
எம்எஸ் தோனி 200ஆவது போட்டி நினைவுப் பரிசு

எம்எஸ் தோனி 200ஆவது போட்டி நினைவுப் பரிசு

இரு அணிகளுமே 3 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. இதற்கு முன்னதாக நடந்த டெல்லிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதே போன்று மும்பைக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

49
எம்எஸ் தோனி 200ஆவது போட்டி நினைவுப் பரிசு

எம்எஸ் தோனி 200ஆவது போட்டி நினைவுப் பரிசு

இதன் மூலமாக இரு அணிகளுமே சம பலத்துடன் இருக்கின்றன. இதற்கு முன்னதாக இரு அணிகளும் நேருக்கு நேராக 26 போட்டிகளில் மோதியுள்ளன. இதில், 15 முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. 11 முறை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

59
எம்எஸ் தோனி 200ஆவது போட்டி நினைவுப் பரிசு

எம்எஸ் தோனி 200ஆவது போட்டி நினைவுப் பரிசு

சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி இன்று 200ஆவது போட்டியில் களமிறங்குகிறார். இதுவரையில் 199 போட்டிகளில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி 120 போட்டிகளில் வெற்றி பெற்று கொடுத்துள்ளார். 78 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளார். ஒரு போட்டியில் எந்த முடிவும் எட்டப்படவில்லை

69
எம்எஸ் தோனி 200ஆவது போட்டி நினைவுப் பரிசு

எம்எஸ் தோனி 200ஆவது போட்டி நினைவுப் பரிசு

11 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முன்னேறியுள்ளது. அதோடு 4 முறை சாம்பியன் பட்டமும் வென்றுள்ளது. இதுவரையில் ஐபிஎல் கிரிக்கெட்டில் 17 முறை ஆட்டநாயகன் விருது வென்றுள்ளார். இன்று அவர் 17 ரன்கள் எடுத்தால் 3000 ரன்களை கடப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. 

79
எம்எஸ் தோனி 200ஆவது போட்டி நினைவுப் பரிசு

எம்எஸ் தோனி 200ஆவது போட்டி நினைவுப் பரிசு

டாஸ் போடுவதற்கு முன்னதாக தோனிக்கு 200 ஆவது போட்டிக்கான நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. பிசிசிஐயின் முன்னாள் தலைவரும், சென்னை அணியின் உரிமையாளருமான என் சீனிவாசன், தோனிக்கு நினைவுப் பரிசு கேடயத்தை வழங்கி கௌரவித்துள்ளார். ஐபிஎல்லில் ஒரு கேப்டனாக தோனி 4482 ரன்கள் எடுத்துள்ளார். ஆனால், ஒரு வீரராக ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 5000 ரன்களை கடந்துள்ளார். இதுவரையில் 9 முறை ஐபிஎல்லில் சிஎஸ்கே அணி இறுதிப் போட்டியில் விளையாடியுள்ளது.

89
எம்எஸ் தோனி 200

எம்எஸ் தோனி 200

மைதானம் எப்படி?

சேப்பாக்கம் மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். இங்கு 160 முதல் 180 ரன்கள் அடித்தாலே அது சவாலாக ஸ்கோராக இருக்கும். ஆனால், இதற்கு முன்னதாக லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் முதலில் ஆடிய சென்னை அணி 217 ரன்கள் எடுத்தது. 2ஆவதாக ஆடிய லக்னோ அணி 205 ரன்கள் எடுத்து 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதில், சென்னை அணியில் மொயீன் அலி அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளும், சான்ட்னெர் ஒரு விக்கெட்டும் கைப்பறினர். இந்தப் போட்டியில் டாஸ் வென்ற அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்யலாம் என்று கூறியிருந்தோம். அதன்படியே டாஸ் வென்ற சிஎஸ்கே அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.

99
எம்எஸ் தோனி

எம்எஸ் தோனி

சென்னை சூப்பர் கிங்ஸ்:

டெவான் கான்வே, ருத்துராஜ் கெய்க்வாட், அஜிங்க்ய ரஹானே, மொயீன் அலி, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம் எஸ் தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), சிசாண்டா மகாளா, மகேஷ் தீக்‌ஷனா, துஷார் தேஷ்பாண்டே மற்றும் ஆகாஷ் சிங். 

ராஜஸ்தான் ராயல்ஸ்: 

ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), தேவ்தத் படிக்கல், ஷிம்ரான் ஹெட்மையர், த்ருவ் ஜூரெல், ரவிச்சந்திரன் அஸ்வின், ஜேசன் ஹோல்டன், குல்தீப் சென்,, சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சகால்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
சென்னை சூப்பர் கிங்ஸ்
ராஜஸ்தான் ராயல்ஸ்
ரவிச்சந்திரன் அஸ்வின்
சஞ்சு சாம்சன்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs AFG 2nd T20: தமிழக வீரர் விலகல்.. சஞ்சு சாம்சன் நீக்கம்.. இளம் வீரருக்கு இடம்.. பிளேயிங் லெவன்!
Recommended image2
Trophy Controversy: துபாயில் உச்சக்கட்ட டிராமா.. கோப்பையை வாங்க மறுத்த இந்திய மகளிர் அணி!
Recommended image3
Abhishek Sharma Record: சுனாமியாக கொந்தளித்த அபிஷேக் சர்மா... T20-ல் புதிய உலக சாதனை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved