MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • IPL 2022: அந்த பையனை பார்க்கும்போது அப்படியே வக்கார் யூனிஸை பார்க்குற மாதிரியே இருக்கு - பிரெட் லீ

IPL 2022: அந்த பையனை பார்க்கும்போது அப்படியே வக்கார் யூனிஸை பார்க்குற மாதிரியே இருக்கு - பிரெட் லீ

உம்ரான் மாலிக்கை பார்க்கும்போது வக்கார் யூனிஸை பார்ப்பதை போலவே இருப்பதாக பிரெட் லீ தெரிவித்துள்ளார். 

2 Min read
Author : karthikeyan V
Published : May 31 2022, 02:58 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

ஐபிஎல் 15வது சீசனில் புதிதாக களமிறங்கிய ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி அறிமுக சீசனிலேயே ஐபிஎல் கோப்பையை வென்றது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

இந்த சீசன் முழுக்க முழுக்க இளம் வீரர்களுக்கான சீசனாக அமைந்தது. குறிப்பாக இளம் ஃபாஸ்ட் பவுலர்களுக்கான சீசனாக அமைந்தது.  உம்ரான் மாலிக், மோசின் கான், யஷ் தயால், முகேஷ் சௌத்ரி, குல்தீப் சென், சிமர்ஜீத் சிங், அர்ஷ்தீப் சிங் ஆகிய இளம் ஃபாஸ்ட் பவுலர்கள் அருமையாக பந்துவீசி எதிரணி வீரர்களை தெறிக்கவிட்டனர்.
 

36

இவர்களில் உம்ரான் மாலிக் அதிவேகமாக பந்துவீசி அசத்தினார். 14 போட்டிகளில் 22 விக்கெட்டுகளை வீழ்த்திய உம்ரான் மாலிக், இந்த சீசனின் 2வது அதிவேக பந்தை வீசினார். 157 கிமீ வேகத்தில் அவர் வீசிய பந்துதான் ஃபைனலுக்கு முன் வரை அதிவேக பந்தாக இருந்தது. ஆனால் ஃபைனலில் 157.3 கிமீ வேகத்தில் ஒருபந்தை வீசி அவரை முந்தினார் ஃபெர்குசன்.  
 

46

இந்தசீசனில் சன்ரைசர்ஸ் அணி ஆடிய 14 லீக் போட்டிகளிலும் அதிவேக பந்தை உம்ரான் மாலிக்கே வீசியிருந்தார். 150 கிமீ வேகத்திற்கு  மேல் அசால்ட்டாக வீசும் உம்ரான் மாலிக், தனதுஅதிவேகமான பவுலிங்கால் எதிரணி வீரர்களை அலறவிட்டார். இந்தசீசனில் அபாரமாக பந்துவீசியதன் விளைவாக இந்திய டி20 அணியில் இடம்பிடித்ததுடன், ஐபிஎல் 15வது சீசனின் முடிவில் வளர்ந்துவரும் வீரருக்கான விருதையும் பெற்றார்.

56

முன்னாள் வீரர்கள் பலரை கவர்ந்துள்ள உம்ரான் மாலிக், ஆஸி., முன்னாள் ஃபாஸ்ட் பவுலிங் ஜாம்பவான் பிரெட் லீயையும் கவர்ந்துள்ளார். உம்ரான் மாலிக் குறித்து பேசிய பிரெட் லீ, உம்ரான் மாலிக்கின் பெரிய ரசிகன் நான். மிரட்டலான வேகத்தில் வீசுகிறார். கடந்த காலங்களில் ஆடிய சிறந்த ஃபாஸ்ட் பவுலர்களை போல உள்ளது, உம்ரான் மாலிக்கின் ரன்னப். உம்ரானை பார்க்கும்போது வக்கார் யூனிஸ்தான் என் நினைவுக்கு வருகிறார் என்று பிரெட் லீ கூறினார்.

66

பாகிஸ்தான் அணிக்காக 1989ம் ஆண்டிலிருந்து2003ம் ஆண்டு வரை ஆடிய வக்கார் யூனிஸ், 87 டெஸ்ட் மற்றும் 262 ஒருநாள் போட்டிகளில் ஆடி முறையே 373 மற்றும் 416 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அப்பேர்ப்பட்ட மிகப்பெரிய ஃபாஸ்ட் பவுலிங் ஜாம்பவனான வக்கார் யூனிஸுடன் உம்ரான் மாலிக்கை ஒப்பிட்டுள்ளார் பிரெட் லீ.

About the Author

KV
karthikeyan V

Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs ENG 1st T20: இந்திய அணியில் 4 வீரர்கள் அதிரடி நீக்கம்! சஞ்சு சாம்சனுமா? பிளேயிங் லெவன்!
Recommended image2
IRE vs IND T20: இந்தியாவின் மோசமான தோல்விக்கு 5 பெரும் காரணங்கள்! இந்த' 2 வீரர்கள் படுமோசம்!
Recommended image3
Women's T20 World Cup: ஆஸ்திரேலியாவிடம் படுதோல்வி அடைந்து வெளியேறிய இந்தியா! ரசிகர்கள் ஷாக்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved