#AUSvsIND ஆஸி.,யின் கொட்டத்தை அடக்கும் இந்தியா..! கடைசி டெஸ்ட்டில் ஆட மறுக்கும் பிசிசிஐ?
First Published Jan 4, 2021, 5:20 PM IST
ஆஸி.,க்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் ஆடுவது குறித்து பிசிசிஐ மறுபரிசீலனை செய்கிறது. பிரிஸ்பேனில் நடத்துவதாக திட்டமிடப்பட்டுள்ள கடைசி டெஸ்ட்டில் இந்திய அணி ஆடுவது சந்தேகமாகியுள்ளது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் ஆஸி., அணியும் 2வது டெஸ்ட்டில் இந்திய அணியும் வெற்றி பெற்ற நிலையில், 3வது டெஸ்ட் வரும் 7ம் தேதி சிட்னியின் தொடங்குகிறது. கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடப்பதாக திட்டமிடப்பட்டுள்ளது.

.சிட்னி டெஸ்ட்டுக்காக இந்திய அணி தீவிரமாக தயாராகிவரும் நிலையில், மெல்போர்ன் ஹோட்டலில் ஒன்றாக இணைந்து சாப்பிட்ட ரோஹித் சர்மா, பிரித்வி ஷா, நவ்தீப் சைனி, ஷுப்மன் கில், ரிஷப் பண்ட் ஆகிய ஐவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?