MS Dhoni: சச்சின் ஜெர்சி நம்பர் 10 போன்று தோனியின் ஜெர்சி நம்பர் 7க்கு ஓய்வு - இனி யாரும் பயன்படுத்த முடியாது!
சச்சின் டெண்டுல்கரின் ஜெர்சி நம்பர் 10க்கு ஓய்வு அளித்தது போன்று தோனியின் ஜெர்சி நம்பர் 7க்கு பிசிசிஐ ஓய்வு அளித்துள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
MS Dhoni Jersey Number 7 Retirement
கபில் தேவ் மற்றும் தோனியைத் தவிர எந்த இந்திய கேப்டனும் இதுவரையில் உலகக் கோப்பையை கைப்பற்றவில்லை. நடந்து முடிந்த கிரிக்கெட் உலகக் கோப்பையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து 2ஆவது இடம் பிடித்தது.
MSD Jersey Number 7
இந்திய அணிக்கு டி20, ஒரு நாள் கிரிக்கெட், சாம்பியன்ஸ் டிராபி, ஆசிய கோப்பையை வென்று கொடுத்த முன்னாள் கேப்டன் தோனி, தனது ஓய்வு நேரத்தை சிறப்பாக பயன்படுத்தி வருகிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் 5 முறை சாம்பியன் டைட்டில் வென்று கொடுத்துள்ளார்.
Dhoni Jersey Number 7
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற தோனி, முன்னாள் அணி வீரர்களுக்கு விருந்து கொடுப்பது முதல் நண்பர்கள், குடும்பத்தினருடன் நாடு முழுவதும் சுற்று பயணம் என்று ஓய்விற்கு பிறகான தனது பொன்னான நேரத்தை அனுபவித்து வருகிறார்.
MS Dhoni Jersey Number 7
இந்த நிலையில், இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் ஜெர்சி நம்பர் 10க்கு ஓய்வு அறிவிக்கப்பட்டது போன்று தோனியின் ஜெர்சி நம்பர் 7க்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலமாக ஜெர்சி நம்பர் 7ஐ இனி இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகள் யாரும் பயன்படுத்த முடியாது என்று கூறப்படுகிறது. எனினும், இது குறித்து பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
Dhoni Jersey Number 7
கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி தோனி அனைத்து வடிவ கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதையடுத்து தோனியின் ஜெர்சி நம்பர் 7க்கு ஓய்வு அறிவிக்க வேண்டும் பலரும் குரல் எழுப்பி வந்தனர். தற்போதும் இது தொடர்பாக தகவல் வெளியாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.