#AUSvsIND இதெல்லாம் கொஞ்சம்கூட சரியில்ல.. கிரிக்கெட் ஆஸி.,யிடம் அதிருப்தியை தெரிவித்த பிசிசிஐ..!
First Published Jan 7, 2021, 3:44 PM IST
இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான கடைசி டெஸ்ட் நடத்துவதாக திட்டமிடப்பட்டுள்ள பிரிஸ்பேனில் இந்திய வீரர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்த அதிருப்தியை கிரிக்கெட் ஆஸ்திரேலியாவிடம் கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளது பிசிசிஐ.

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்ற நிலையில், 3வது டெஸ்ட் சிட்னியில் இன்று(7ம்தேதி) தொடங்கி நடந்துவருகிறது. கடைசி டெஸ்ட் பிரிஸ்பேனில் நடப்பதாக திட்டமிடப்பட்டுள்ளது.

ஆனால் பிரிஸ்பேன் அமைந்திருக்கும் குயின்ஸ்லாந்து மாகாண அரசு, இந்திய வீரர்களுக்கு கொரோனா விதிகள் என்று மீண்டும் குவாரண்டினில் இருக்க வலியுறுத்துகிறது. ஆஸி.,க்கு வருவதற்கு முன் ஐக்கிய அரபு அமீரகத்தில் 2 வாரம் குவாரண்டினில் இருந்து, பின்னர் ஆஸி.,க்கு வந்த பின்னர் 2 வாரம் குவாரண்டினில் இருந்த இந்திய வீரர்கள், பிரிஸ்பேனில் மீண்டும் குவாரண்டினில் இருக்க வேண்டும் என்ற குயின்ஸ்லாந்து நிர்வாகம் வலியுறுத்துவதால் அதிருப்தியில் உள்ளனர்.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?