டெஸ்ட் ஃபேர்வெல்லுக்கு முன்னதாக ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த டெவிட் வார்னர்!
ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரரான டேவிட் வார்னர் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
David Warner
ஆஸ்திரேலியாவின் பேடிங்டன், நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் கடந்த 1986 ஆம் ஆண்டு அக்டோபர் 27 ஆம் தேதி பிறந்தவர் டேவிட் வார்னர். கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் ஆஸ்திரேலியா அணியில் இடம் பெற்று விளையாடி வருகிறார். இதுவரையில், வார்னர், 110 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில், 26 சதங்கள், 36 அரைசதங்கள் உள்பட 8651 ரன்கள் குவித்துள்ளார்.
David Warner ODI Retirement
இதே போன்று 161 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 22 சதங்கள், 33 அரைசதங்கள் உள்பட 6932 ரன்கள் குவித்துள்ளார். மேலும், 99 டி20 போட்டிகளில் விளையாடிய வார்னர் ஒரு சதம் மற்றும் 24 அரைசதங்கள் உள்பட 2894 ரன்கள் குவித்துள்ளார்.
David Warner Test Farewell
ஏற்கனவே சர்வதேச டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக டேவிட் வார்னர் அறிவித்திருந்தார். வரும் 3 ஆம் தேதி சிட்னியில் நடக்கும் 3ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியுடன் டேவிட் வார்னர் சர்வதேச டெஸ்ட் தொடரிலிருந்து ஓய்வு பெறுகிறார்.
Warner ODI Retirement
சிட்னியில் நடக்கும் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தான் வார்னரின் டெஸ்ட் ஃபேர்வெல். ஆனால், அதற்கு முன்னதாக மற்றொரு அதிர்ச்சியை தெரிவித்துள்ளார்.
David Warner
அதாவது, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக டேவிட் வார்னர் கூறியிருப்பதாவது: உலகம் முழுவதும் நடக்கும் டி20 லீக் தொடர்களில் விளையாடுவதற்காக ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளேன்.
David Warner ODI Retirement
எனினும், 2025 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலியா அணி தன்னை தேர்வு செய்தால், கண்டிப்பாக விளையாடுவேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
David Warner
தென் ஆப்பிரிக்கா இடது கை பேட்ஸ்மேன் குயீண்டன் டி காக் டி20 லீக் தொடரில் விளையாடுவதற்காக சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த நிலையில், தற்போது வார்னரும் தனது ஓய்வு முடிவை அறிவித்திருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
David Warner ODI Retirement
இந்த நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் வார்னர் ஓய்வு முடிவை அறிவித்த சில நிமிடங்களிலேயே டெல்லி அணியானது அவருக்கு புதிய வாய்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்டு வரு ஐஎல்டி20 லீக் தொடரில் துபாய் கேபிடல்ஸ் அணியை வாங்கியது. இந்த நிலையில் தான் இந்த அணியின் கேப்டனாக டேவிட் வார்னர் நியமிக்கப்பட்டுள்ளார்.
David Warner
இதற்கு முன்னதாக கடந்த ஆண்டு நடந்த ஐஎல்டி20 லீக் தொடரில் துபாய் கேபிடல்ஸ் அணியானது எலிமினேட்டரில் தோல்வி அடைந்து வெளியேறியது என்பது குறிப்பிடத்தக்கது.