#AUSvsIND சீட்டுக்கட்டாய் சரிந்த இந்திய பேட்டிங் ஆர்டர்..! வலுவான நிலையில் ஆஸி.,
First Published Jan 9, 2021, 1:57 PM IST
3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 244 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, 94 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை தொடங்கி ஆடிவரும் ஆஸி., அணி வலுவான நிலையில் உள்ளது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையே சிட்னியில் நடந்துவரும் 3வது டெஸ்ட்டில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸி., அணி முதல் இன்னிங்ஸில் 338 ரன்கள் அடித்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, 2ம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 96 ரன்கள் அடித்திருந்தது.

3ம் நாளான இன்றைய ஆட்டத்தை ரஹானேவும் புஜாராவும் தொடர்ந்தனர். இன்றைய ஆட்டத்தில் ரஹானே நீடிக்கவில்லை. ரஹானே 22 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஹனுமா விஹாரி வெறும் 4 ரன்களுக்கு நடையை கட்டினார். அதன்பின்னர் புஜாராவுடன் ஜோடி சேர்ந்த ரிஷப் பண்ட், சரசரவென அடித்து ஆடி 67 பந்தில் 36 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து ஆடிய புஜாரா, அரைசதம் அடித்தார். ஆனால் அதை பெரிய இன்னிங்ஸாக மாற்றாமல் சரியாக ஐம்பது ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?