MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • ஆசிய கோப்பையில் இந்திய அணி பிளேயிங் லெவன்..! நன்றாக விளையாடியும் இளம் வீரரை தூக்கி வீசிய பிசிசிஐ!

ஆசிய கோப்பையில் இந்திய அணி பிளேயிங் லெவன்..! நன்றாக விளையாடியும் இளம் வீரரை தூக்கி வீசிய பிசிசிஐ!

ஆசியக்கோப்பையில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன? யார் யாருக்கு அணியில் இடம் கிடைக்கும் என்பது குறித்து பார்ப்போம்.

2 Min read
Author : Rayar A
Published : Sep 07 2025, 10:58 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ஆசிய கோப்பை 2025
Image Credit : BCCI

ஆசிய கோப்பை 2025

ஆசிய கோப்பை கிரிக்கெட் அடுத்த மாதம் 9ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், ஹாங்காங் ஆகிய 8 அணிகள் இந்த தொடரில் விளையாடுகின்றன. டி20 போட்டி வடிவத்தில் நடைபெறும் இந்த தொடரில் உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா-பாகிஸ்தான் போட்டி செப்டம்பர் 14ம் தேதி நடைபெற உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
இந்திய அணி அறிவிப்பு
Image Credit : ANI

இந்திய அணி அறிவிப்பு

ஆசியக்கோப்பையில் விளையாடும் 15 பேர் கொண்ட இந்திய அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். சுப்மன் கில் துணை கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்திய அணியில் அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல், ஜிதேஷ் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன் ஆகியோர் இடம்பெற்றனர். பிரசித் கிருஷ்ணா, வாஷிங்டன் சுந்தர், ரியான் பராக், துருவ் ஜூரல், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆக்யோர் ரிசர்ச் வீரர்கள் பட்டியலில் உள்ளனர்.

இந்திய அணி பிளேயிங் லெவன் என்ன?

இந்திய அணியின் பிளேயிங் லெவனை பொறுத்தவரை சுப்மன் கில் மற்றும் அபிஷேக் சர்மா தொடக்க வீரர்களாக களமிறங்க உள்ளனர், திலக் வர்மா மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்ய உள்ளனர். இதன்பிறகு ஜிதேஷ் சர்மா, ஹர்திக் பாண்ட்யா பின்வரிசையில் அதிரடியாக ஆட ரெடியாக உள்ளனர்.

34
சஞ்சு சாம்சனுக்கு இடம் உண்டா?
Image Credit : X/@BCCI

சஞ்சு சாம்சனுக்கு இடம் உண்டா?

பவுலிங்கை பொறுத்தவரை ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங் பிரதான பவுலர்களாக களம் காண்கின்றனர். ஸ்பின் பவுலிங்கில் குல்தீப் யாதவ்க்கு இடம் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. சஞ்சு சாம்சன் இந்திய அணியில் இடம்பெற்றிருந்தாலும் பிளேயிங் XI அணியில் அவர் இடம்பெற வாய்ப்பில்லை என்றே தகவல்கள் கூறுகின்றன. கேரள கிரிக்கெட் லீக்கில் 380 ரன்கள் குவித்து சஞ்சு சாம்சன் தனது திறமையை நிரூபித்த போதும் அவருக்கு வாய்ப்புகள் கிடைப்பது கஷ்டம் தான்.

44
உத்தேச பிளேயிங் லெவன் இதோ
Image Credit : ANI

உத்தேச பிளேயிங் லெவன் இதோ

இந்திய டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில் மீண்டும் களமிறங்குவதால் அபிஷேக் சர்மாவுடன் அவர் தொடக்க வீரராக களமிறங்குவார் என்று கூறப்படுகிறது. இதனால் சஞ்சு சாம்சனின் இடம் பறிபோகியுள்ளது. ஜிதேஷ் சர்மாவும் விக்கெட் கீப்பராக இருப்பதால் அதிரடியாக விளையாடுவதால் சஞ்சுவுக்கு வாய்ப்பு கிடைப்பதில் சிக்கல் தான். இதேபோல் சிஎஸ்கே வீரர் ஷிபம் துபேவுக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைக்க வாய்ப்பில்லை. 

ஆசியக் கோப்பையில் இந்திய அணி உத்தேச பிளேயிங் லெவன்: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில் ( துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி அல்லது ஹர்ஷித் ராணா.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஆசியக் கோப்பை
ஆசிய கோப்பை
விளையாட்டு
இந்திய கிரிக்கெட் அணி
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Vaibhav Suryavanshi: "சுடு தண்ணி மட்டும் குடிப்பா.." வைபவ் சூர்யவன்ஷிக்கு ரசிகை அட்வைஸ்.. பாலகன் ரியாக்ஷன் வீடியோ பாருங்க!
Recommended image2
Abhishek Sharma: ஐசிசி டி20 ரேங்கிங்கில் மீண்டும் நம்பர் 1 ஆன அபிஷேக் ஷர்மா!
Recommended image3
IND vs NZ 3rd T20: அதிவேக சதம்.. அதிவேக பவர்பிளே ரன்.. ஒரே போட்டியில் பல ரிக்கார்டுகளை உடைத்த இந்தியா!
Related Stories
Recommended image1
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை எந்த டிவியில் பார்க்கலாம்? மேட்ச் தொடங்கும் நேரம் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved