IPL 2025: ரோகித் சர்மாவை MI விட்டே கொடுக்காது – கடவுளே, அத நினச்சு கூட பார்க்க முடியாது–ஏபி டிவிலியர்ஸ்!
IPL 2025, Mumbai Indians, Rohit Sharma: ஐபிஎல் 2025 தொடரில் ரோகித் சர்மா ஆர்சிபி அணிக்கு செல்வாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ரோகித் சர்மாவை மும்பை இந்தியன்ஸ் விடுவிக்க வாய்ப்பில்லை என்று ஏபி டிவிலியர்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
Rohit Sharma and Virat Kohli, IPL 2025
ரோகித் சர்மாவை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு மும்பை இந்தியன்ஸ் விட்டே கொடுக்காது. அப்படியொரு தலைப்புச் செய்தியை நினைத்து கூட பார்க்க முடியாது என்று ஆர்சிபி முன்னாள் வீரர் ஏபி டிவிலியர்ஸ் கூறியிருக்கிறார்.
ஐபிஎல் 2025 தொடருக்கான தக்க வைக்கப்படும் வீரர்களின் பட்டியலை வெளியிடுவதற்கான கடைசி தேதி நெருங்க நெருங்க ஒவ்வொரு அணியும் தீவிரமாக ஆலோசனையில் இருந்து வருகின்றன. ஆனால், ஐபிஎல் 2025 கிரிக்கெட் என்றாலே அதிகமாக பேசப்படுவது எம்.எஸ்.தோனி மற்றும் ரோகித் சர்மா இருவர் மட்டுமே.
IPL 2025, Virat Kohli, Royal Challengers Bengaluru
ஏனென்றால் இருவருமே அவர்களது அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து தோனி தான் விலகியிருக்கிறார். அவருக்குப் பதிலாக ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால், மும்பை இந்தியன்ஸ் அணியில் அப்படி இல்லை. 10 ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வந்த ரோகித் சர்மா மும்பை அணியின் எந்த கேப்டனும் படைக்காத சாதனையை தனி ஒருவராக நின்று மும்பைக்கு பெற்று கொடுத்தார்.
அதுதான் 5 முறை டிராபி வென்று கொடுத்தார். முதல் முறையாக ஒரு அணிக்கு 5 முறை ஐபிஎல் டிராபி வென்று கொடுத்த வீரர் என்ற சாதனையும், பெருமையும் ரோகித் சர்மாவை சேரும். அதன் பிறகு தான் தோனி 5ஆவது முறையாக சிஎஸ்கே அணிக்கு டிராபி வென்று கொடுத்தார். இது எல்லாருக்குமே தெரிந்த ஒன்று தான்.
Rohit Sharma, RCB, Mumbai Indians
கடந்த சீசனுக்கு முன்னதாக ஐபிஎல் ஏலத்திற்கு முன் டிரேட் முறையில் குஜராத் டைட்டன்ஸ் அணியிடமிருந்து ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் தட்டி தூக்கியது. அதோடு கேப்டனாகவும் நியமித்தது. இது மும்பை வீரர்களுக்கு மட்டுமின்றி ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. இதன் காரணமாக ரோகித் சர்மா ரசிகர்கள் மும்பையை சமூக வலைதளங்களில் பின் தொடர்வதை நிறுத்தினர்.
இந்த நிலையில் தான் ஒரு முறை கூட டிராபி கைப்பற்றாத ஆர்சிபி அணிக்கு ரோகித் சர்மா வந்தால் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் இணைந்து முதல் முறையாக ஆர்சிபிக்காக ஐபிஎல் டிராபியை முத்தமிடுவார்கள். இது ஒவ்வொரு வீரர்கள், ரசிகர்களின் கனவாகவும் இருக்கிறது. இந்த கனவு நிறைவேற வேண்டுமானால், முதலில் மும்பை இந்தியன்ஸ் ரோகித் சர்மை விடுவிக்க வேண்டும். இதெல்லாம் சாத்தியமா என்றால் இல்லை.
AB de Villiers, MI, RCB, IPL 2025
இது குறித்து ஆர்சிபி முன்னாள் வீரர் மிஸ்டர் 360 டிகிரி என்று அழைக்கப்பட கூடிய ஏபி டிவியர்ஸ் என்ன சொல்லியிருக்கிறார் என்று பார்க்கலாம் வாங்க..ரோகித் சர்மா ஆர்சிபிக்கு சென்றால் அது தான் தலைப்புச் செய்தியாக இருக்கும். ஆனாலும் அது நடக்க வாய்ப்பில்லை.
இது எப்படி ஹர்திக் பாண்டியா குஜராத் அணியிலிருந்து மும்பைக்கு வந்தாரோ அதைவிட பெரிய செய்தியாக இருக்கும். ஆனால், ரோகித் சர்மா மும்பையிலிருந்து விலகி ஆர்சிபியில் சேர்ந்தால் கடவுளே..அப்படி வாய்ப்பு இருப்பதாக நான் நினைக்கவில்லை. அதற்கான வாய்ப்பு 0 சதவிகிதம் முதல் 0.1 சதவிகிதம் தான் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
Rohit Sharma, RCB, Virat Kohli
ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் விளையாடிய 14 போட்டிகளில் 4 வெற்றி, 10 தோல்வியோடு ஐபிஎல் 2024 புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் பிடித்து வெளியேறியது. ஹர்திக் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக 2022 ஆம் ஆண்டு சீசனில் டிராபி வென்று கொடுத்துள்ளார்.
2023 ஆம் ஆண்டு குஜராத் அணி இறுதிப் போட்டி வரை சென்று சிஎஸ்கேயிடம் தோல்வி அடைந்து வெற்றி வாய்ப்பை தவறவிட்டது. 2024 ஆம் ஆண்டு விளையாடிய 14 போட்டிகளில் 5 வெற்றி 7 தோல்வி 2 போட்டிக்கு முடிவு இல்லை. 7ஆவது இடம் பிடித்து வெளியேறியது. இந்த தொடரில் குஜராத் அணிக்கு சுப்மன் கில் கேப்டனாக இருந்தார்.
Rohit Sharma, IPL 2025
ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் விராட் கோலி மட்டுமே ஒரே அணிக்காக இதுவரையில் விளையாடியிருக்கிறார். ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரையில் கோலி விளையாடிய 252 போட்டிகளில் 55 அரைசதங்கள், 8 சதங்கள் உள்பட மொத்தமாக 8004 ரன்கள் எடுத்துள்ளார்.
இதே போன்று ரோகித் சர்மா 257 போட்டிகளில் விளையாடி 43 அரைசதங்கள், 2 சதங்கள் உள்பட மொத்தமாக 6628 ரன்கள் எடுத்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட்டில் ரூ.15 கோடிக்கு விராட் கோலி விளையாடி வரும் நிலையில் ரோகித் சர்மா ரூ.16 கோடிக்கு விளையாடி வருகிறார்.
ஒரு கேப்டனாக ரோகித் சர்மா விளையாடிய 158 போட்டிகளில் 87 போட்டிகளில் வெற்றி பெற்று கொடுத்துள்ளார். அதோடு 67 போட்டிகளில் தோல்வி அடைந்ததோடு, 4 போட்டிகளை டிராவும் செய்துள்ளார். வெற்றி சதவிகிதம் 55.06 ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.