புதன்கிழமை விநாயகரை மட்டும் நினைத்து பாருங்கள்.. நீங்கள் எடுத்த காரியம் எப்படி வெற்றி அடையும் தெரியுமா?
புதன்கிழமைகளில் விநாயகரை வணங்குவதால் கிடைக்கும் பலன்கள்.. விநாயகருக்கு புதன் ஏன் உகந்தது தெரியுமா? இங்கு காணலாம்.
புதனுடன் விநாயகரின் தொடர்பு
இந்து புராணத்தின் படி, விநாயகப் பெருமான் தன் தாயார் பார்வதிக்கு பிறந்தபோது, புதன் பகவானும் கயிலாய மலையில் தான் இருந்தாராம். ஆகவே விநாயகப் பெருமானுக்கு ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை வழிபாடு செய்ய வேண்டும் என்ற விதிக்கப்பட்டுள்ளது. அப்படி வழிபட்டால் புதன் தோஷங்கள் குறையும். அதுமட்டுமில்லை, ஐயன் சிவன் திரிபுராசுரனை அழிக்காமல் விட்டபோது, தன் தோல்வி குறித்து யோசித்தாராம். சண்டைக்கு முன் விநாயகப் பெருமானை வழிபடாததுதான் அதற்கு காரணம் எனத் தெரிய வந்தது. பின் விநாயகனை வழிபட்டு செய்த போரில் திரிபுராசுரன் தோற்கடிக்கப்பட்டான் என்பது புராண கதை. ஒவ்வொரு வேலைக்கும் முன் விநாயகரை வழிபட்டால், காரியம் தடையின்றி நிறைவேறும் என்பது ஐதீகம்.
விநாயகர் அனைத்து கடவுள்களிலும் முதன்மையான கடவுளாக கருதப்படுகிறார். அவர் சித்தி புத்தியின் கடவுள். பக்தர்களின் வலியை நீக்கும் ஆனைமுகன் இவர். வாரத்தின் மூன்றாவது நாளான புதன் அன்று விநாயகப் பெருமானை வழிபடுவதற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்து சாஸ்திரத்தின்படி, வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒரு தெய்வத்தை வணங்குவதற்கான நாள். புதன் விநாயகப் பெருமானுக்கு மிகவும் பிரியமானது. இந்த நாளில் செய்யப்படும் வழிபாட்டால் அவர் மகிழ்ச்சியடைந்து பக்தர்களின் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றுவார் என்பது ஐதீகம்.
புதன்கிழமை விநாயகர் வழிபாடு
புதன் கிழமைகளில் விநாயகருடன் சேர்ந்து புதனையும் வழிபடலாம். இதனால் விநாயகப் பெருமானின் அருளை பெறலாம். புதன் கிழமை விநாயக வழிபாட்டில் வன்னி மர இலைகளை வைத்து வழிபட்டால் புத்திசாலித்தனத்தையும், விவேகத்தையும் அதிகரிக்கிறது.
புதன்கிழமை விநாயகரை வணங்கி விட்டு கீரை சாப்பிட்டு வெளியே சென்றால் வேலையில் வெற்றி கிடைக்கும். திருமணமாகாதவர்கள் விநாயகருக்கு மஞ்சள் இனிப்பு வகைகளை வழங்க வேண்டும். இதனால் திருமண தடை விலகும். நினைத்த காரியம் நிறைவேற புதன்கிழமை அன்று விநாயகர் கோயிலுக்குச் சென்று வெல்லம் காணிக்கையாக கொடுங்கள். இதன் மூலம் உங்கள் விருப்பங்கள் நிச்சயம் நிறைவேறும்.
இதையும் படிங்க: இந்த சுடுகாட்டு செடியா அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.. நித்திய கல்யாணியின் அதிசய தகவல்கள் தெரியுமா?
பணியிடத்திலும், தொழில் முன்னேற இருக்கும் தடைகள் நீங்கவும் விநாயகர் ருத்ராட்சம் அணியுங்கள். இது சவால்கள் எல்லாவற்றையும் அகற்றும். மாணவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற நினைப்பவர்கள், புதன்கிழமை அன்று விநாயகருக்கு லட்டு காணிக்கையாக வைக்கலாம். உங்கள் வாழ்க்கையில் வெற்றி காண புதன்கிழமை அன்று பசுவிற்கு பசுந்தீவனம் அளியுங்கள். இந்த நாளில் ஆதரவற்றோர், திருநங்கைகளுக்கு தானம் செய்வதும் நல்ல பலனைத் தரும்.
இதையும் படிங்க: கடன் பிரச்சனைகள் தீர உங்க கையால் வாராஹி அம்மனுக்கு இந்த மாலையை போட்டாலே போதும்.. பணவரவு சில நாளில் உயரும்!