சனிக்கிழமையில் இத்தனை விஷயம் இருக்கா? இதுக்கு தான் அன்றைய தினம் அசைவம் சாப்பிடக் கூடாதுனு சொல்றாங்களா!!
சனிக்கிழமை அசைவம் சாப்பிடலாமா? சனிக்கிழமை விரதமிருந்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.
சனிபகவான் கர்ம வினைகளை வைத்து செயல்படுபவர். அவருடைய ஆதிக்கத்தால் ஒருவரின் ஆயுள் காலம் அமையும். விஷ்ணுவின் கட்டுப்பாட்டில் தான் சனிபகவான் இருக்கிறார். ஆகவே தான் மகா விஷ்ணு சனிபகவானின் அதிபதி என்று சொல்லப்படுகிறார். பெருமாளுக்கு ஏற்ற நாளாக சனிக்கிழமையை சொல்ல காரணமும் இது தான்.
சனிக்கிழமை மகாவிஷ்ணுவுக்கு விரதம் இருப்பவர்களுக்கு நினைத்த காரியம் நிறைவேறும். சனி கிரகத்தினால் உண்டாகும் பிரச்சனைகளை கூட விஷ்ணு விரதம் நிவர்த்தி செய்யும். சனி அன்று விரதம் இருப்பவர்கள் எல்லா செல்வமும் பெற்று வளமாக வாழ்வார்கள்.
எப்படி விரதம் இருக்க வேண்டும்?
நீங்கள் சனிக்கிழமை விரதம் இருக்கும்போது பகலில் பழச்சாறு, தண்ணீர் ஆகியவை குடிக்கலாம். வயிறார உணவு சாப்பிடக் கூடாது. மனமுருகி அன்றைய தினம் விஷ்ணுவை வேண்டி கொள்ள வேண்டும். மாலை வேளையில் விஷ்ணு பகவானின் ஆலயம் சென்று நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும். திருமாலை வணங்கிய பிறகு இரவுக்கு சாப்பாடு எடுக்கலாம். அப்படியே விரதத்தை நிறைவு செய்யலாம்.
சனிக்கிழமை செய்ய வேண்டியவை!
எல்லாம் சனிக்கிழமைகளிலும் மகாவிஷ்ணுவுக்கு விரதம் இருந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும் பெருமாளுக்கு ஏற்ற மாதமான புரட்டாசியில் சனிக்கிழமை விரதம் இருப்பது சிறப்பு வாய்ந்தது என ஆன்மீகப் பெரியோர் கூறுகின்றனர். புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருப்பது அந்த ஆண்டு முழுவதும் சனிக்கிழமை விரதம் இருப்பதற்கு ஈடான பலன்களை தரும் என நம்பப்படுகிறது.
இழுபறியாக கிடக்கும் நீதிமன்ற வழக்குகள் தொடர்பான பிரச்சனைகளை மகா விஷ்ணுவை வணங்கி விட்டு சனிக்கிழமை செய்யலாம். நல்ல தீர்வு கிடைக்கும். அரசியல் தொடர்பான காரியங்களில் வெற்றி கிடைக்கவும் சனிக்கிழமை சாதகமாக இருக்கும் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: வீட்டில் வலம்புரி சங்கு வைத்து இப்படி வழிபட்டால், நீங்க கடவுளிடம் கேட்கும் வரம் எல்லாம் இரட்டிப்பா கிடைக்கும்!
சனிக்கிழமை செய்யக்கூடாதவை!
ரொம்ப அவசியமோ, அவசரமோ இல்லாமல் சனிக்கிழமை அன்று மருத்துவமனைக்கு போவதை தவிர்க்க வேண்டும். விவசாயம் சார்ந்த செயல்கள் சனிக்கிழமை செய்யாமல் இருப்பது நல்லது. சனிக்கிழமைகளில் சுப காரியங்கள் செய்ய வேண்டாம் என்கிறது ஆன்மீகம். சனிக்கிழமை அன்று விரதம் கடைபிடிப்பவர்கள், பெருமாளை வழிபடக் கூடிய நபர்கள் அன்றைய தினத்தில் அசைவ உணவுகள் சாப்பிட கூடாது என்கிறது ஆன்மீகம்.
இப்போது சனிக்கிழமையின் மகிமையை முழுவதும் அறிந்திருப்பீர்கள். முறையாக விரதம் இருந்து முழு பலன்களையும் அனுபவியுங்கள்.
இதையும் படிங்க: பெண்ணின் தோலுக்கடியில் நெளிந்த புழுக்கள்.. அவரின் மூளைக்குள் எப்படி நுழைந்தன! மருத்துவர்கள் சொன்ன காரணம்?!