பக்தி பாடல்களை பாடும்போது ஏன் கைத்தட்டுறோம் தெரியுமா? முக்கியமான பின்னணி!!
Clapping During Devotional Singing : தெய்வத்தினை நினைந்து பக்தி பாடல்களை மனமுருகி பாடும்போது ஏன் கைகளை தட்டுகிறோம் என்பதை இங்கு காணலாம்.
Clapping During Devotional Singing In Tamil
பக்தி பாடல்கள் (பஜனை) பாடும்போது கைகளை தட்டும் பழக்கம் இன்றளவிலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கைகளை தட்டாத சிலர் கூட தங்களுடைய தொடையில் கைகளை தாளம் இசைப்பது கால்களில் தட்டுவார்கள். இந்த சத்தத்திற்கு ஏற்றவாறு உடலையும் தலையும் அசைக்கும் போக்கு இயல்பாகவே மக்களிடத்தில் உள்ளது. பஜனையின் போது கைகளை தட்டுவதற்கு பின்னால் பலரும் அறியாத சுவாரசியமான பின்னணி உள்ளது. இதனை ஆன்மீக சான்றோர் விளக்குகின்றனர்.
clap hands while singing devotional in tamil
கடவுளுடன் இணைப்பு:
பஜனை பாடல்களின் போது உற்சாகமாக கைகளை தட்டி மேலே உயர்த்தும்போது பெரும் ஆற்றல் வெளிப்படுகிறது. கடவுளை ஆராதிக்க கைதட்டுதல் உள்ளங்கையில் இருக்கும் கோடுகளை மாற்றுவதாக சொல்லப்படுகிறது. பஜனை பாடல்களை மெய் மறந்து கேட்டுக் கொண்டிருக்கும்போது நம்முடைய கைகளில் இசைக்கருவிகள் ஏதும் இருக்காது.
இந்த காரணத்தால் தாளத்தை தன்னியல்பாகக் கொண்டுவர கைகளை தட்ட தொடங்குகிறோம். இந்த மாதிரி செய்யும்போது மனிதர்களுக்குள் இருக்கும் மன அழுத்தம், பதற்றம், கோபம், விரக்தி, கவலை போன்ற பல விஷயங்கள் அகன்று உற்சாகமும், மகிழ்ச்சியும் வந்து சேருகிறது.
இதையும் படிங்க: கருவில் உள்ள குழந்தை கைதட்டிய அதிசயம்...! தாயின் பாடலை ரசித்த உன்னதம்...!
clapping health benefits in tamil
மன அமைதி:
கை தட்டுவதால் அசம்பந்தமான ஒரு நபர் கூட உற்சாகமாக உணர முடியும். பஜனையில் கைகளை தட்டுவது மனதை பாரங்களின்றி இலகுவாக மாற்றுகிறது. மனதிற்கு அமைதியும் ஏற்படுகிறது. நம்மை சுற்றியுள்ளவர்கள் கைகளைத் தட்டும் ஓசையும், நமது கைத்தட்டலின் ஓசையும் ஒன்றாக கலந்து கடவுளுடன் நாம் இணைந்திருக்கும் பந்தத்தை உணர்த்துகிறது.
கைகளை தட்டினால் மனம் அலைபாயாமல் ஒருநிலைப்படுகிறது. பக்தியோடு உள்ளங்கைகளை நன்கு திறந்து கைகளை தட்டி ஆர்ப்பரிப்பது மூலமாக கைகளில் இருக்கும் புள்ளிகள் ஒன்றிணைகின்றன. இதனால் நரம்புகள் திறம்பட இயங்கி மகிழ்ச்சியாக உணர்வீர்கள். கைகளில் உள்ள உணர்ச்சியின்மை, கூச்ச உணர்வு ஆகியவை நீங்க கைகளை தட்டுவது உதவிகரமாக இருக்கும்.
Why Clapping During Devotional Singing In Tamil
புராண பின்னணி:
பக்தியில் மனம் உருகி பாடும் போது பிரகலாதன் கைகளை தட்டினார் என பழங்கால கதைகள் நமக்கு கூறுகின்றன. இது முந்தைய காலங்களிலே பஜனையில் கைத்தட்டும் வழக்கம் இருந்ததை காட்டுகிறது. பகவான் மகாவிஷ்ணுவின் பக்தராக இருந்த பிரகலாதன் கைத்தட்டும் பழக்கத்தை கொண்டிருந்தார்.
இதற்கு அவருடைய தந்தை ஹிரண்யகஷ்யப் தான் காரணம். பிரகலாதன் பக்தியை பொறுக்காத தந்தை ஹிரண்யகஷ்யப் அவருடைய இசைக்கருவிகளை மொத்தமாக அழித்துவிட்டார். ஆனாலும் பிரகலாதன் பின்வாங்காமல் விஷ்ணுவை வணங்க பஜனை கீர்த்தனைகளை செய்யும் போது கைகளைத் தட்டி தாளம் போட்டார். இப்படிதான் கைத்தட்டும் பழக்கம் தொடங்கியிருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: என்னங்க சொல்றீங்க..! கை தட்டுவதில் இவ்வளவு நன்மைகள் இருக்கா? தெரிஞ்சா ஷாக் ஆவிங்க!!
Clapping in tamil
கைத்தட்டல் ஒரு உடற்பயிற்சி:
கைதட்டல் ஒரு உடற்பயிற்சி போன்றது. கைகளை தட்டும் போது பல நோய்களிலிருந்து நிவாரணம் கிடைப்பதாக சொல்லப்படுகிறது. கைதட்டுவது அக்குபிரஷராக செயல்படுவதாக கூறப்படுகிறது. இதனால் உடலில் வெப்பம் உருவாகுகிறது. உடற்பயிற்சிக்கு முன்பு கைத்தட்டினால் அது வார்ம்-அப் போன்று இருக்கும். கைத்தட்டுவதால் இரத்த ஓட்டம் சீராகிறது.
உள்ளங்கைகளில் உள்ள அக்குபிரஷர் புள்ளிகள் கைத்தட்டும்போது ஆக்டிவேட் ஆகும். உள்ளங்கைகள், கை விரல்களில் காணப்படும் நரம்புகள் மூளையுடன் இணைந்தவை. ஒருவர் கைத்தட்டினால் அப்போது நரம்புகள் துரிதமாக செயல்படுகின்றன. இதனால் அவர்களின் இரத்த ஓட்டம் மேம்படுகிறது. உடலுடைய ஆரோக்கியமும் மேம்படுகிறது.