MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • பித்ரு தோஷம் எதனால் ஏற்படுகிறது? இதனால் என்னென்ன விளைவுகள் ஏற்படும்.. பரிகாரம் என்ன?

பித்ரு தோஷம் எதனால் ஏற்படுகிறது? இதனால் என்னென்ன விளைவுகள் ஏற்படும்.. பரிகாரம் என்ன?

முன்னோர்களை சரிவர வழிபடாதவர்களுக்கு பித்ரு தோஷம் ஏற்படுகிறது. பித்ரு தோஷத்தினால் வாழ்க்கையில் பலவகையான சிக்கல்கள் சந்திக்க நேரிடலாம் என கூறப்படுகிறது. 

2 Min read
Author : vinoth kumar
Published : Jul 21 2023, 08:10 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

தோஷங்களில் பல வகை உண்டு. அதில் இந்த பித்ரு தோஷத்திற்குப் பயப்படாதவர்களே யாரும் இருக்க முடியாது. இது எப்படி ஏற்படுகின்றது என்றால் ஒருவரின் இறுதி காலங்களில் அவர்களது பிள்ளைகள் சரிவர கவனித்து கொள்ளாமல் இருப்பதினால், முன்னோர்களை சரிவர வழிபடாமலும், திதி கொடுப்பது மட்டுமின்றி கயா சென்று கூப சிரார்த்தம் செய்யாமல் இருந்தாலும், கருச்சிதைவு செய்வதனால் பித்ரு தோஷம் வரும் என்று கூறப்படுகிறது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

பித்ரு தோஷத்தின் வலிமை குறித்து அனைவரும் அறிந்து கொள்வது முக்கியம். ஏனென்றால் இந்த தோஷம் கடவுள் நமக்கு கொடுக்கும் வரங்களையே தடுத்து நிறுத்தும் அளவுக்கு சக்தி வாய்ந்தது. அதனால் இதில் கவனமாக இருந்திட வேண்டும். பித்ரு தோஷம் நமது ஜாதகத்தில் இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது என்றால், நம்முடைய ஜாதகத்தில் ராகு அல்லது கேதுவுடன் சூரியன் அல்லது சந்திரன் எந்த இடத்திலாவது சேர்ந்து இருந்தால் பித்ரு தோஷம் இருப்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். 

35

இந்த தோஷம் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அறிந்து நாம் செயல்பட வேண்டும். நமது ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருந்தால் திருமணம் தடைபடும்.  திருமணம் முடிந்திருப்பின் கணவன் மனைவியிடையே அன்னியோன்யம் இல்லாமல் சண்டை சச்சரவுகளுடன் அவர்கள் வாழ்க்கை விவாகரத்து வரை செல்லலாம். இன்னும் சிலருக்கு குழந்தைப் பாக்கியம் இருக்காது என்று கூறப்படுகிறது. 

45

இந்த பித்ரு தோஷத்திற்கு வெறும் பூஜைகளை மட்டுமின்றி அதற்கான பரிகாரமும் செய்து வந்தால் பலன்களை அடைய முடியும். அந்தவகையில் இந்த தோஷத்துக்கான பரிகாரங்களாக ராமேஸ்வரம் சென்று தில ஹோமம் செய்து வரலாம். கயா சிரார்த்தம் செய்யலாம். காசி, அலகாபாத் மற்றும் பத்ரி நாத் சென்று திவசம் செய்வதும், திருவெண்காடு சென்று திதி கொடுக்கலாம் என சொல்லப்படுகிறது. 

55

அந்ததந்த பூஜைகளையும், பரிகாரங்களையும் சரிவர செய்து வந்தால் பித்ரு தோஷத்தால் எந்த பாதிப்பும் வராது. அதேபோன்று நாம் செய்யும் செயல்களை சரிவர செய்து வந்தாலே பித்ரு தோஷம் நமக்கு ஏற்படாமலே நம்மால் காக்க முடியும். மேலும், காக்கைகளுக்கும் பறவைகளுக்கும் தினமும் உணவளிக்க வேண்டும். மாதம் மாதம் வரும் அமாவாசை நாளில் வெள்ளைப் பசுவிற்கு பசும்புல்லை உண்ணக் கொடுக்கவும். இவற்றையெல்லாம் தொடர்ந்து செய்து வந்தால் பித்ரு தோஷம் நீங்கும்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஆன்மீகம்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Rasi Palan : ஜூன் 8-14 வார ராசிபலன் : இந்த வாரம் உங்கள் வாழ்க்கையில் நடக்கப்போகும் அதிரடி மாற்றங்கள் என்ன?
Recommended image2
Chanakya Niti: கணவன்-மனைவிக்கு எவ்வளவு வயசு வித்தியாசம் இருக்கணும்? சாணக்கியர் சொல்றத கேளுங்க!
Recommended image3
Astrology : தடைகள் நீங்கும், மாற்றம் வரும்: சிம்ம ராசிக்கு ஜூன் மாதம் ஒரு பொற்காலம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved