வீட்டின் இந்த திசைல மட்டும் பீரோவை வைக்காதீங்க! காசு காத்தா கரையும்.. பணம் பெருக பீரோ எங்க வைக்கணும் தெரியுமா?
பீரோவை வைக்கும் திசை, பணம் பெருக பீரோவுக்குள் என்னென்ன பொருள்களை வைக்க வேண்டும் போன்ற பீரோ தொடர்பான அனைத்து வாஸ்து டிப்ஸ்களும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
நம்முடைய வீடு அதிர்ஷ்டம் நிறைந்து இருந்தால் தான் வளமான வாழ்க்கை வாழ முடியும். வெறும் கடின உழைப்பு மட்டும் நம்மை மேலே உயர்த்துவதில்லை. கூடவே அதிர்ஷ்டமும் இருந்தால் தான் முன்னேற முடியும். சிலருக்கு தொடர்ந்து வீட்டில் கடன்கள் மட்டுமே பெருகும், தேவையில்லாத செலவுகள் ஏற்படும். இந்த மாதிரி நடப்பதற்கு வாஸ்து குறைபாடுதான் முக்கிய காரணமாக இருக்கும். ஆனால் சிலரின் பீரோவில் வைக்கும் பணம் செலவே ஆகாமல் பெருகி கொண்டே இருக்கும். சிலருக்கு பணத்தை வைத்த அடுத்த கணமே மொத்த பணமும் தீர்ந்துவிடும். இதற்கு வீட்டில் பீரோ வைத்திருக்கும் திசை கூட காரணமாக இருக்கலாம். எந்த திசையில் பிரோவை வைத்தால் பணம் பெருகும் என்பதை இங்கு காணலாம்.
குபேரன் அனுகிரகம்:
வீட்டில் நடு வடக்கு நன்றாக இருந்தால் தான் பணம் வற்றாமல் கிடைக்கும். எப்போதும் பண பற்றாக்குறையின்றி வளமாக கிடைக்க வீட்டின் நடு வடக்கு திசையில் இடையூறே இருக்க கூடாது. குறிப்பாக இந்த திசையில் சமையலறை, படிக்கட்டு வைக்கக் கூடாது. அப்படி வைத்தால் பணம் வராமல் போய்விடும். குபேரன் பார்வை விழும் அந்த பகுதியை தெளிவாக வைக்க வேண்டும். அங்கு ஏதேனும் பொருள்களால் இடையூறு வந்தால் தெளிவாக விழும் பகுதி அதுதான். அந்த பகுதி அடைபட்டால் வீட்டிற்கு பணம் வருவது தடைபடும். அதைப் போலவே வீட்டின் ஈசான்யம் என்னும் வடகிழக்கு மூலைப்பகுதியில் வெளிச்சமும், காற்றும் இருக்கும் வகையில் அமைக்க வேண்டும். ஏனென்றால் இந்த திசை அதிர்ஷ்டம் தரும் திசை. இங்கு படிக்கட்டு வேறு ஏதேனும் பொருள்களை வைக்க வேண்டாம். தென்மேற்கு மூலையில் ஒருபோதும் வாசல் வைக்காதீர்கள்.
பணம் குவிய டிப்ஸ்!!
வடக்கு தான் குபேர மூலையாகும். தென்மேற்கு திசை கன்னி மூலையாகும். கன்னி மூலையை பொறுத்தவரை பாரமான பொருள்களுக்கு ஏற்ற இடம். குபேர மூலை என்பது வடக்கு மூலையாகும். வடக்கில் இருந்து குபேரன் பார்வையிடுவார் எனதால் இங்கு பீரோவை வைத்து பணத்தை புழங்குங்கள். மேலும் செல்வம் பெருகும்.
பீரோ வைக்க வேண்டிய இடம்:
பணத்தை வைக்கும் பீரோவை வீட்டின் வடக்கு திசை அல்லது கிழக்கு திசை பார்த்து தான் வைக்க வேண்டும். வடக்கு/ கிழக்கு ஆகிய திசைகளை நோக்கிய பீரோவில் நகை, பணம் ஆகிவற்றை வைக்கலாம். இதனால் அவை மேலும் மேலும் பெருகும். வடக்கு திசையில் மத்திய பகுதியில் வடக்கை நோக்கி பீரோவை வைத்தால் பணவரவு அதிகமாக இருக்கும் உங்கள் வீடு தெற்கு பார்த்த வீடாக இருந்தால் கிழக்கே ஒட்டி இருக்கும் வடக்கு பகுதியில் பீரோ வைக்கலாம். வடக்கு திசை அதிர்ஷ்டம் தரக்கூடிய திசை. மேற்கு பார்த்த வீட்டுக்கும், கிழக்கு பார்த்த வீட்டுக்கும் கிழக்கு ஒட்டிய பகுதியில் பீரோவை வைப்பது நல்லது.
பணம் சேர டிப்ஸ்:
பீரோவினுள் தங்கத்தகடு கலந்த பிரமிடு, வெள்ளி பிரமிடு ஆகியவற்றை புதன், வியாழன் வெள்ளி ஆகிய கிழமைகளில் வைக்கலாம். இதனால் நிறைய அதிர்ஷ்டம், நேர்மறை ஆற்றல் பீரோவில் நிலவும். மகாலட்சுமி படம் பொறித்த தங்க நாணயங்களை பீரோவில் வைக்கலாம். இதனால் பணம் பெருகும். குபேரனின் சிலையை பணப்பெட்டிக்குள் வைத்தால் வீட்டில் பணம் தங்கும்.
இதையும் படிங்க: உங்கள் வீட்டில் பணம் கொட்ட வேண்டுமா? மகாலட்சுமி மனங்குளிர தினமும் இதை செய்யுங்க!!!
மறந்தும் பீரோ வைக்கக் கூடாத இடம்!!
உங்கள் வீட்டு தென்மேற்கு படுக்கை அறையில் இருக்கும் பீரோவில் ஆடைகளை வைக்கலாம். ஆனால் பணம் வைக்கக் கூடாது. தெற்கு பகுதியில் பீரோ வைத்தால் வீட்டில் பணம் சேரும். வடமேற்கு பகுதியில் ஒருபோதும் பீரோவை வைக்காதீர்கள். இந்த திசையில் பீரோவை வைத்தால் பணமே சேராது. காற்று போல பணம் கரைந்து விடும். வீட்டில் சமைக்கும் அக்னி மூலையில் ஒருபோதும் பீரோவை வைக்காதீர்கள். இங்கு வைத்தால் செலவு வந்து கொண்டே இருக்கும். ஒருபோதும் சமையல் செய்யும் இடத்தில் பீரோவை வைக்கக்கூடாது. பணம் வீட்டில் தங்காது.
இதையும் படிங்க: ராகு பெயர்ச்சியால் அடிக்கப் போகும் ஜாக்பாட்.. இந்த 4 ராசிகளுக்கு ஒரே இரவில் அதிர்ஷ்டம் மாறப் போகுது!!