பீரோவில் மறந்தும் இதை மட்டும் வச்சிராதீங்க.. மீறி வச்சா கடன் சுமை குறையாது.. பணம் சுத்தமா சேராது
கடன் இல்லாமல் வாழ உங்கள் வீட்டு பீரோவில் மறந்தும் வைக்கவே கூடாத பொருள்களை குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.
கையில் கொஞ்சம் பணம் சேர வேண்டும் என நினைத்து தினமும் மாடாக உழைக்கிறோம். அதற்காக வழிபாடு, பரிகாரம் என ஒவ்வொரு விஷயத்தையும் கண்ணும்கருத்துமாக செய்கிறோம். ஆனால் நாம் செய்யும் சிறுதவறுகளினால் லட்சுமி தேவியின் அருளை இழக்கிறோம். வீட்டில் வாஸ்து பிரச்சனை இல்லாமல் இருக்கலாம்; ஆனால் வீட்டு பீரோவில் கவனிக்காமல் வைக்கும் சில பொருள்களால் தான் பண பிரச்சனைகளை சந்தித்து கடன் சுமையில் மூழ்கி போகிறோம். பீரோவில் என்னென்ன பொருள்களை வைக்க வேண்டும், எதை தவிர்க்க வேண்டும் என்பதை இந்த பதிவில் காணலாம்.
பீரோ வைக்கும் திசை
பீரோவை தென் மேற்கு பகுதியில் குறிப்பாக சொன்னால் நிருதி மூலையில் வைக்க வேண்டும். அப்போது வீட்டின் நேர்மறை ஆற்றல் அதிகமாக இருக்கும். பீரோ தெற்கு பகுதியை ஒட்டியபடி, வடக்கு நோக்கி கிழக்கு திசை பார்த்து பீரோ கதவு திறக்கும் மாதிரி வைக்க வேண்டும்.
தெற்கு மூலையில் வைக்க முடியாத நபர்கள் வடமேற்கு மூலையில் பீரோவை வைக்கலாம். அதாவது மேற்கு பக்கமாக இருக்கும் சுவர் பக்கமாக கிழக்கு பார்த்து பீரோவை வைக்கலாம். இப்படி வைத்தால் வீட்டில் நேர்மறை சக்தி கூடும். உங்களுக்கு ஏற்படும் வீண் செலவு குறையும். செலவம் கூடும்.
பீரோ லட்சுமி கடாட்சத்துடன் இருப்பது ரொம்ப முக்கியம். அங்கு தான் பணம் வைத்து புழங்கி வருவோம். அதனால் பீரோவை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். சிலர் கொஞ்ச நேரம் அணிந்திருந்ததாகக் கூறி அழுக்கு ஆடையை கூட பீரோவில் வைப்பார்கள். இது தவறு. ஒருமுறை உடுத்தினாலும் அழுக்கு துணி தான். ஆனால் இன்னொரு முறை அணிந்துவிட்டு துவைக்கலாம் என நினைத்து அழுக்காக பீரோவில் வைக்கும் போது, அந்த அழுக்குத் துணி நம் பீரோவில் எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கும். இதனால் பணவரவு தடைபடும். அதுமட்மில்லை வீட்டில் கண்ட இடங்களில் துணிகளை போட்டு வைப்பது தரித்திரத்தை கொண்டு வரும். அப்படிதான் வீட்டு பீரோவில் அழுக்கு துணி தரித்திரம் கொண்டு வரும்.
பீரோவில் துணிகளை சுத்தமாக வைத்தால் மட்டுன்போதாது. அதை நேர்த்தியாகவும் மடித்து வைக்க வேண்டும். நறுமணத்திற்காக ஏதேனும் வாசனை திரவியங்களை பயன்படுத்தலாம். பணத்தை வைப்பதற்கு தனி இடம் வைக்க வேண்டும். பீரோ லாக்கரில் சிகப்பு நிற துணி விரித்து அதன் மீது பணம் வைத்து புழங்கலாம். அதன் கூடவே பச்சை கற்பூரம், மல்லிகை பூ, ஏலக்காய், கிராம்பு ஆகியவை வைத்து அதன் மேல் பணத்தை வைக்கலாம்.
பீரோவில் பணத்தை எப்போதும் அடுக்கி வைக்க வேண்டும். பணத்தை கண்டபடி போட்டு வைக்கக் கூடாது. ஒரு ரூபாயாக இருந்தாலும் 100 ரூபாயாக இருந்தாலும் அடுக்கி வைத்து பயன்படுத்த வேண்டும். பணத்தில் கொஞ்சம் புனுகு தடவி வைத்து பயன்படுத்தினால் பணவரவு அதிகமாகும்.
பீரோவை பராமரிக்கும்போது வெறுமனே உட்புறம் மட்டும் பார்த்து கொண்டால் போதாது. வெளிப்புற சுத்தமும் முக்கியம். பீரோவின் மீது தூசி படியவிடக் கூடாது. அப்படி தூசியும் ஒட்டடையுமாக இருந்தால் எதிர்மறை ஆற்றல் வந்து பணவரவை குறைக்கும். அதன் பராமரிப்பு ஒழுங்காக இருந்தால் பணம் கூரையை பிய்த்து கொண்டு வரும்.
இதையும் படிங்க: வாரம் இருமுறை இந்த கீரை சாப்பிட்டால்.. வாழ்க்கை முழுக்க கல்லீரல், சிறுநீரகம் பிரச்சனையே கிட்ட வராது..!
அதுமட்டும் இல்லாமல், பிடித்து வைத்த பிள்ளையார் போல பீரோவை அசைக்காமல் ஒரே இடத்தில் வைத்திருக்கக் கூடாது. மாதம் ஒரு முறை பீரோவை அசைத்து விட வேண்டும். அப்படி செய்தால் நேர்மறை ஆற்றல் உருவாகி பணத்தை ஈர்க்கும். இல்லையென்றால் எதிர்மறை ஆற்றல் உருவாகி பணம் குறையும். உங்களிடம் 10 ரூபாய் இருந்தாலும் அதை பத்திரமாக பயன்படுத்தி பாருங்கள், அதுவே பல மடங்காக பெருகிவரும். இந்தப் பதிவில் சொன்ன தவறுகளை திருத்தி கொள்ளுங்கள். கடன் சுமை குறைந்து பணம் பெருகும்.
இதையும் படிங்க: உங்க வீட்டில் பணம் இல்லை என்ற பேச்சுக்கே இடம் இருக்காது.. வெள்ளிக்கிழமை இதை செய்தாலே போதும்..