MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • செலவே இல்லாமல் காசிக்கு போக ஆசையா? அறநிலையத்துறையின் அட்டகாசமான அழைப்பை மிஸ் பண்ணாதீங்க

செலவே இல்லாமல் காசிக்கு போக ஆசையா? அறநிலையத்துறையின் அட்டகாசமான அழைப்பை மிஸ் பண்ணாதீங்க

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இந்த ஆண்டு 420 நபர்களை காசிக்கு அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ள நிலையில் ஆர்வம் உள்ளவர்கள் வருகின்ற டிசம்பர் 16ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

1 Min read
Author : Velmurugan s
| Updated : Nov 03 2024, 02:20 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Kashi Free Trip

Kashi Free Trip

கடந்த 2022 - 23ம் ஆண்டுக்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கை மீது ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் இருந்து காசியில் உள்ள விஸ்வநாத சுவாமி கோவிலுக்கு தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட பக்தர்கள் ஆன்மீகப் பயணமக அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும், இதற்கான முழு செலவையும் அரசே ஏற்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Kashi Free Trip

Kashi Free Trip

அதன் அடிப்படையில் கடந்த 2022 - 23ம் ஆண்டில் 200 நபர்களும், 2023 - 24ம் ஆண்டு 300 நபர்களும் ராமேஸ்வரத்தில் இருந்து காசிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்நிலையில் நடப்பு நிதியாண்டான 2024 - 25ம் ஆண்டுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் இருந்து காசி விஸ்வநாதசுவாமி கோவிலுக்கு ஆன்மீகப் பயணம் செல்ல தமிழகத்தைச் சேர்ந்த இந்து சமய அறநிலையத்துறையின் 20 இணை ஆணையர் மண்டலங்களில் இருந்து தலா 21 நபர்கள் வீதம் 420 நபர்களை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

34
Kashi Free Trip

Kashi Free Trip

தகுதி

விண்ணப்பிக்கும் நபர் இந்து மதத்தைச் சேர்ந்தவராகவும், இறை நம்பிக்கை உடையவராகவும் இருக்க வேண்டும். மேலும் 60 வயது முதல் 70 வயதுக்கு உட்பட்டவர்கள், ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்ப படிவங்களை மண்டல இணை ஆணையர் அலுவலகங்களில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். இந்து சமய அறநிலையத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

44
Kashi Free Trip

Kashi Free Trip

விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளின் அடிப்படையில் விண்ணப்பம் பூர்த்தி செய்யப்பட வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள் வருகின்ற டிசம்பர் 16ம் தேதிக்குள் மண்டல இணை ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆன்மீகப் பயணமானது ராமேஸ்வரத்தில் தொடங்கி காசிக்கு சென்று பின்னர் காசியில் இருந்து ராமேஸ்வரத்தை வந்தடைகிறது.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சேகர்பாபு
தமிழ் செய்திகள்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Rama Ekadashi : ரமா ஏகாதசி 2026.. பெருமாள் வழிபாடு, விரத நேரம், பாரணை செய்யும் முறை!
Recommended image2
New Year Calendar: 2027 புத்தாண்டுக்கு புதிய காலண்டர் எப்போது வாங்க வேண்டும்?! பஞ்சாங்கம் இருந்தா இவ்ளோ நல்லதா?!
Recommended image3
Kanda Sashti Vratam date : கந்த சஷ்டி விரதம் எப்போது தொடங்குகிறது? 6 நாட்கள் விரத முறை, சூரசம்ஹாரம் தேதி முழு விவரம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved