- Home
- Spiritual
- ஏழு முனிவர்கள் வழிபட்ட மகா தலம்! திருத்தலையூர் சப்தரிஷீஸ்வரர் கோயிலின் ஆன்மீக அதிசயங்களும் பலன்களும்
ஏழு முனிவர்கள் வழிபட்ட மகா தலம்! திருத்தலையூர் சப்தரிஷீஸ்வரர் கோயிலின் ஆன்மீக அதிசயங்களும் பலன்களும்
Thiruthalaiyur Saptharishiswarar Temple History in Tamil : திருச்சி மாவட்டம் திருத்தலையூரில் உள்ள சப்தரிஷீஸ்வரர் கோயிலின் மகிமை, தல வரலாறு மற்றும் அங்கு வழிபடுவதால் கிடைக்கும் பலன்களைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.

Thiruthalaiyur temple architecture and history, திருத்தலையூர் சிவன் கோயில் பரிகாரங்கள்,
திருத்தலையூர் சப்தரிஷீஸ்வரர் கோயில், திருச்சிக்கு அருகே உள்ள பழமையான சிவன் கோயிலாகும், இது சப்த ரிஷிகளால் வழிபடப்பட்டதாக நம்பப்படுகிறது, இங்கு இறைவன் சப்தரிஷீஸ்வரர், இறைவி குங்குமவல்லி அருள்பாலிக்கின்றனர்; இது திருத்தலையூர் குளித்தலைக்கு கிழக்கே என்னும் ஊரில் அமைந்துள்ளது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பழமையான சிவன் கோவில். சிவபெருமான் நமது நெற்றிக்கண்ணை திறந்து ராவணனுக்கு காட்சியளித்த வரலாறும் இந்த கோயிலுக்கு உண்டு. சப்தரிஷிகள் வழிபட்டதாகவும் கூறப்படுகிறது. புரூரவச் சக்கரவர்த்தி என்பவருக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டதாகவும் இ கோயிலுக்கு வந்து சிவனை வழிபட்டதால் தோஷம் நீங்கியதாக கூறப்படுகிறது. ராமாயண காலத்துக்கு முந்திய கோயில் என்று இந்த கோயிலுக்கு வரலாறு ஒன்று.
Saptha Rishi worshiped Lingam
ராவணன் தனது தலைகளைத் திருகி யாகத்தில் வீசியதால் ஆதியில் திருகுதலையூர் என்றழைக்கப்பட்டு வந்த இந்த ஊர், காலப்போக்கில் மருவி திருத்தலையூர் என்றானது. இலங்கையிலிருந்து ராவணன் கயிலாயம் நோக்கி கிளம்பி வரும் வழியில், இப்பகுதி வனாந்திரமாக இருப்பதைக் கண்டு, இங்கேயே தங்கி விட்டார். இப்பகுதியில் யாகம் வளர்த்து, சிவபெருமானை வழிபட்டுக் கொண்டிருந்த சப்தரிஷிகள், பத்துத்தலை ராவணனைக் கண்டவுடன் பயந்து நடுங்கி, மருதமரத்தில் ஐக்கியமாகிவிடுகின்றனர். அந்த மரமே இத்திருக்கோயிலின் தலவிருட்சமாக மாறியது.ரிஷிகள் வழிபட்ட லிங்கத்தை நான் வழிபடுவதா என எண்ணிய ராவணன், உடனடியாக புற்று மண்ணெடுத்துப் புதிதாக அவன் கைகளாலேயே ஒரு பெரிய சிவலிங்கத்தை உருவாக்கி வழிபடத் தொடங்கினான்.
Ancient Shiva temple near Musiri
தனக்குசிவபெருமான்நேரில் தரிசனம் தர வேண்டும் என்று யாகங்கள் வளர்த்துத் தொடர்ந்து வழிபட்டான் ராவணன். ஆனால், சிவபெருமான் தரிசனம் தரவில்லை. நாள்கள் கடந்தும் யாகங்கள் தொடர்ந்தன. மிகவும் வெறுத்துப் போன ராவணன், ஒரு கட்டத்தில் தனது பத்துத் தலைகளில் ஒவ்வொன்றாகத் திருகி யாகத்தில் வீசினான். அப்படி ஒன்பது தலைகளையும் திருகி வீசி, ஒரு தலை மட்டுமே மிஞ்சியது. அப்போதும் சிவபெருமான் காட்சித் தரவில்லை, தனது பத்தாவது தலையையும் திருகி யாகத்தில் வீச முயற்சித்தான் ராவணன்.மனம் கசிந்து போன சிவபெருமான் தனது நெற்றிக்கண்ணைத் திறந்தபடி ராவணனுக்கு காட்சியளித்தார். அதோடு ராவணனால் திருகி வீசப்பட்ட ஒன்பது தலைகளையும் சிவபெருமானே வரமளித்து ராவணனுக்கு ஒட்டவைத்து, மீண்டும் அவனைப் பத்துத் தலை ராவணனாக உருவாக்கினர்.தான் பிடித்து வைத்த புற்றுமண்ணினால் ஆன சிவலிங்கத்தை வணங்கி வழிபட்டு கயிலாயம் புறப்பட்டுச் சென்றான் ராவணன். இத்தகையை சிறப்புகளைக் கொண்டது. ராவணனால் உருவாக்கப்பட்டது தான் திருத்தலையூர் சப்தரிஷீசுவரர் திருக்கோயில்.
திருத்தலையூர் சப்தரிஷீஸ்வரர் கோயில்
சப்தரிஷிகள் வழிபட்ட தலம்: ஏழு ரிஷிகள் தான் சப்தரிஷிகள் என்று கூறப்படுகிறது. இவர்கள் சிவலிங்கத்தை வழிபட்டதால் சப்தரிஷீஸ்வரர் என்ற பெயர் வந்தது. புரூரவச் சக்கரவர்த்தி மன்னனின் சாபம் நீங்கிய கதை: புரூரவச் சக்கரவர்த்தி மன்னனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. அந்த மன்னன் திருவண்ணாமலையில் நீராடி விட்டு இறைவனை வேண்டும்பொழுது திருத்தலையூர் சென்று பிரம்ம குளத்தில் நீராடினால் அங்கு மூலவரை தரிசித்தால் உன் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்று கூறப்பட்டது அதன் வழியில் மன்னனும் இக்கோவிலுக்கு வந்து நீராடியதால் இவர் தோஷம் நீங்கபட்டது.
Thiruthalaiyur Saptharishiswarar Temple
பலன்கள்: இந்தக் கோயிலுக்கு வந்து பிரம்ம குளத்தில் நீராடினால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். திருமணத்தில் தடை இருப்பவர்களுக்கு இந்த கோயிலுக்கு வந்து சென்றால் விரைவில் திருமணம் நடக்கும் என்றும் கூறப்படுகிறது குழந்தை பாக்கியமும் கோயில் வந்து சென்றாள் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.