MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • வீட்டின் வாசலில் 'இந்த' பொருட்களை வைக்காதீங்க.. ஒரு நல்லதும் நடக்காது!

வீட்டின் வாசலில் 'இந்த' பொருட்களை வைக்காதீங்க.. ஒரு நல்லதும் நடக்காது!

Vastu Tips : வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டின் வாசலில் சில பொருட்களை வைக்கக்கூடாது. அவை என்னவென்று இங்கு பார்க்கலாம்.

2 Min read
Author : Kalai Selvi
Published : Jan 27 2025, 07:41 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
வீட்டின் வாசலில் 'இந்த' பொருட்களை வைக்காதீங்க.. ஒரு நல்லதும் நடக்காது!

வீட்டின் வாசலில் 'இந்த' பொருட்களை வைக்காதீங்க.. ஒரு நல்லதும் நடக்காது!

இந்து மதத்தில் வாஸ்து சாஸ்திரத்திற்கு என தனி சிறப்பு உண்டு. வீடு வாங்குவது, கட்டுவது முதல் வீட்டில் வைக்கும் பொருட்கள் வரை என அனைத்திற்கும் வாஸ்து விதிகள் உள்ளன. அந்த வகையில் வீட்டில் நுழைவாயிலில் சில பொருட்களை வைக்கக்கூடாது. அப்படி வைத்தால் அதனால் வீட்டில் நல்ல காரியங்கள் ஏதும் நடக்காது. ஏனெனில், வீட்டின் நுழைவாயில் தான் ஒட்டுமொத்த வீட்டின் ஆற்றல் மற்றும் அதிர்ஷ்டத்தை தீர்மானிக்கும். இதனால் தான் வீட்டு வாசலில் வாஸ்து மிகவும் முக்கியமானது என்று சொல்லப்படுகிறது. 

25
வீட்டு வாசலில் வைக்க கூடாத பொருட்கள்

வீட்டு வாசலில் வைக்க கூடாத பொருட்கள்

இன்னும் சொல்லப் போனால் வீட்டின் நுழைவாயிலிருந்து தான் நேர்மறை மற்றும் எதிர்மறை ஆற்றல் வீட்டிற்குள் நுழையும். வீட்டின் நுழைவாயில் சரியாக இருந்தால் செழிப்பு, மகிழ்ச்சி, வெற்றி வீட்டில் அதிகரித்துக் கொண்டே இருக்கும் அதே சமயம் வீட்டின் வாசல் மோசமாக இருந்தால் அது கண்ணீர் கவலை, துன்பத்தை தான் கொண்டு வரும். மேலும் வீட்டில் நுழைவாயில் வாஸ்து விதிகளை பயன்படுத்தினால் அந்த வீட்டில் இருப்பவர்களுக்கு மகிழ்ச்சி சூழ்ந்திருக்கும். எனவே வாஸ்து படி வீட்டிற்கு மகிழ்ச்சி மற்றும் செழிப்பிற்காக வீட்டு வாசலில் எந்த மாதிரியான பொருட்களை வைக்கக்கூடாது என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.

இதையும் படிங்க:  தலையணைக்கு கீழே இந்த '7' பொருள் வெச்சு தூங்குங்க.. அதிஷ்டம் பெருகும்!

35
உடைந்த பொருட்கள்:

உடைந்த பொருட்கள்:

வாஸ்துபடி உடைந்த பொருட்கள், ஓடாத கடிகாரங்கள் போன்றவற்றை வீட்டு நுழைவாயிலில் வைக்க கூடாது. அப்படி இருந்தால் உடனே அவற்றை அங்கிருந்து அகற்றிவிடுங்கள். ஏனெனில் இது வீட்டிற்கு எதிர்மறையான ஆற்றலை கொண்டு வரும் மற்றும் வீட்டில் மோசமான நிலையை ஏற்படுத்தும். மேலும் இந்த மாதிரியான பொருட்களை அங்கிருந்து அகற்றினால் வீட்டில் நேர்மறை ஆற்றல் உருவாகும்.

கூர்மையான பொருட்கள்:

வீட்டின் வாசலில் ஒருபோதும் கத்தி, கத்திரிக்கோல் போன்ற கூர்மையான பொருட்களை பார்வையில் படும்படி வைக்கக்கூடாது என்று வாஸ்து சாஸ்திரம் சொல்லுகின்றது. ஏனெனில் இவை வீட்டிற்கு எதிர்மறை ஆற்றலை கொண்டுவரும் மற்றும் வீட்டில் விரும்பத்தகாத நிகழ்வை உருவாக்கும்.  வேண்டுமானால் அவற்றை வீட்டில் ஏதாவது பாதுகாப்பான இடத்தில் வையுங்கள். இப்படி செய்வதன் மூலம் நேர்மறை ஆற்றல் உங்கள் வீட்டில் பாயும்.

45
வாடிய செடிகள்:

வாடிய செடிகள்:

வீட்டில் நுழைவாயிலில் எக்காரணம் கொண்டும் வாடிய செடிகளை வைக்கவே கூடாது. ஏனெனில் அவை வீட்டிற்கு எதிர்மறை ஆற்றலை கொண்டு வருவது மட்டுமின்றி வீட்டில் துரதிஷ்டத்தை உருவாக்கும். மேலும் வீட்டில் உள்ளவர்களுக்கு எதிர்மறையான விளைவுகள் ஏற்படும். அதற்கு மாறாக நல்ல செழிப்பாக இருக்கும் செடிகளை வீட்டு வாசலில் வைக்கலாம். இது உங்களது வீட்டிற்கு நேர்மறை ஆற்றலை உருவாக்கும் மற்றும் வீட்டில் உள்ளவர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கும்.

அடர் பொருட்கள்:

வீட்டு வாசலில் ஒருபோதும் அடர் நிற பொருட்களை வைக்க வேண்டாம். அதாவது கருப்பு நிறத்தில் இருக்கும் மேட், சிலைகள் போன்ற பொருட்களை வைப்பதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இவை எதிர்மறை ஆற்றலை ஈர்க்கும். அதற்கு பதிலாக நேர்மறை ஆற்றலை கொண்டு வரும் பிரகாசமான இடத்தில் இருக்கும் பொருட்களை வீட்டில் நுழைவாயிலில் வைக்கலாம். இவை நேர்மை ஆற்றலை ஈர்க்கும்.

55
குப்பைத்தொட்டி:

குப்பைத்தொட்டி:

வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டின் உள்ள வாய்களில் ஒருபோதும் குப்பை தொட்டி வைக்கவே கூடாது. ஏனெனில் குப்பைத்தொட்டி எதிர்மறை ஆற்றலை ஈர்த்து உங்களது வீட்டிற்கு கொண்டு வரும். இதனால் வீட்டில் அதிர்ஷ்டம் நுழைவது தடுக்கப்படும். எனவே உங்கள் வீட்டிற்குள் நேர்மறை ஆற்றலை கொண்டு வர, குப்பை தொட்டியை வாஸ்துபடி எங்கு வைக்க வேண்டுமோ, வீட்டில் அங்கு வைக்க வேண்டும். இதனால் உங்கள் வீட்டில் மகிழ்ச்சி, செழிப்பு, நல்லிணக்கம் பெருகும்.

இதையும் படிங்க:  உங்க கிச்சன்ல 'எந்த' கலர் பெயிண்ட்? கண்டிப்பா 'செல்வம்' குவியும்!!

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாஸ்து குறிப்புகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Sani Peyarchi 2026: மார்ச் 6 முதல் ருத்ர தாண்டவம் ஆடப்போகும் சனி பகவான்.! 6 ராசிகளுக்கு அள்ளி அள்ளி கொடுக்கப் போறாராம்.!
Recommended image2
சந்திர கிரகணம் முடிந்ததும் இந்த ஒரு விஷயத்தை தவறாமல் செய்யுங்கள்.! இல்லையெனில் தோஷம் பிடிக்கும்.!
Recommended image3
ஒரே வாரத்தில் அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர்.! உடனே வேலை கிடைக்க புதன் பகவானுக்கு செய்ய வேண்டிய எளிய பரிகாரம்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved