அலுவலகத்தில் வெற்றிக்கு மேல் வெற்றி உங்கள தேடி வரணுமா? அப்ப இந்த 5 பொருட்களில் 1 உங்க மேசையில் வைச்சிக்கோங்க!!
அலுவலகத்தில் நேர்மறையான ஆற்றல் உங்களை சுற்றி இருக்கவும், நீங்கள் செய்யும் வேலைகளிக் தொடர்ந்து வெற்றி கிடைக்கவும் உங்களுடன் வைத்துக் கொள்ள வேண்டிய பொருள்கள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.
வேலை செய்யும் போது நம்முடைய மனநிலை மிகவும் முக்கியம். அலுவலகத்தின் சூழல் என்பது நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் பிரதிபலிக்கக் கூடியது. அலுவலகத்தில் நேர்மறையான சூழல் நிலவாமல் எப்போதும் அழுத்தமாக இருந்தால் நாம் மகிழ்ச்சியாக இருக்க முடியாதும். நம் வாழ்வில் பெரும்பான்மையான நேரத்தை அலுவலகத்தில் தான் செலவிடுகிறோம். அப்படிப்பட்ட சூழலில் உங்களுடைய அலுவலகத்தில் எவ்வித அழுத்தமும் இன்றி வேலை செய்ய சில விஷயங்களை பின்பற்றுங்கள்.
Mental Health-Don't let the office become tense
வெள்ளி:
வெள்ளிப் பொருள்களை மேசையில் வைத்தால் நேர்மறை ஆற்றல் பரவும். ஆகவே வீட்டின் சாவி கொத்தில் நாம் வெள்ளி சேர்க்கிறோம். அலுவலகத்திற்கும் இது பொருந்தும். மேசையில் வெள்ளிப் பொருள்களை வைத்திருப்பதால் நேர்மறை ஆற்றல் பெருகி நீங்கள் முன்னேற்றப் பாதையில் போவீர்கள். உங்கள் அலுவலகத்தில் உங்களுக்கான வளர்ச்சியை உறுதிப்படுத்தும்.
உண்டியல்:
பணத்தை சேமிக்கும் உண்டியல் வாங்கி அலுவக மேசையில் வைகக்லாம். இதனுள் நாள்தோறும் ஒரு நாணயம் சேமித்தால் தொடர்ச்சியான முன்னேற்றம். த்தையும், அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும். பிளாஸ்டிக் உண்டியலுக்குப் பதிலாக உலோகத்தால் செய்யப்பட்ட உண்டியலை வைப்பது நல்ல பலன்களை அளிக்கும். உண்டியலை மேஜையின் மேற்கு, வடமேற்கு அல்லது வடக்கு திசையில் வைக்க வேண்டும்.
செடிகள்:
உங்களுடைய பணியிடத்தில் இருக்கும் மேசையில் ஏதேனும் ஒரு செடியை வளர்ப்பது உங்களுடைய மன அழுத்தத்தை குறைக்கும். குறிப்பாக வாஸ்து விதிகள் கூறும் சில செடிகளை வாங்கி வைப்பது நேர்மறை ஆற்றலையும், அதிர்ஷ்டத்தையும் உங்களிடம் கொண்டு வரும். உங்களுடைய அலுவலகத்தில் நீங்கள் மென்மேலும் வளர நினைக்கும் போது அதற்கு என்ன மாதிரியான வாஸ்து செடிகளை வளர்க்க வேண்டும் என்பது குறித்து தெளிவு பெறுங்கள். இதற்காக நீங்கள் வாஸ்து நிபுணரை அணுகலாம்.
இதையும் படிங்க: கேஸ் அடுப்பை கிச்சன்ல இந்த திசையில் வைத்தால் பண பிரச்சனைகள் நீங்கும்!! நிதி பெருகும்!!
நீரூற்று
உங்களுடைய அலுவலக மேசையில் சிறிய நீரூற்று போன்ற அமைப்பு, அருவி மாதிரியான ஓவியம் அல்லது புகைப்படங்கள், குட்டி மீந்தொட்டி ஆகியவை வைக்கலாம். நீரின் சமநிலை நேர்மறை ஆற்றலையும், செல்வத்தையும் குறிக்கும். ஆகவே இதனை அலுவலக மேசையில் வைக்கும் போது உங்களுக்கு நேர்மறையான சிந்தனைகள் பெருகும். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டம் ஏற்படும்.
கண்ணாடி:
அலுவலக மேசையில் கண்ணாடி சூரிய ஒளியை பிரதிபலிக்கும் இடத்தில் தான் வைக்க வேண்டும். இதனால் நேர்மறை ஆற்றல் பிரதிபலித்து நீங்கள் முன்னேறமுடியும். இதற்கு பதிலாக வைக்கக் கூடாத இடத்தில் கண்ணாடி வைத்திருந்தால் வாழ்க்கையில் எதிர்மறை ஆற்றலின் விளைவுகள் இரண்டு மடங்காகும். கவனம்.
இதையும் படிங்க: வீட்டுல எத்தனை ஊதுபத்தி ஏத்தி வைக்கணும் தெரியுமா?