- Home
- Spiritual
- பக்திக் கடலில் நனைந்த அறுபடை வீடுகள்! விண்ணதிரும் ‘அரோகரா’ முழக்கத்துடன் கோலாகலமாக நடந்த தைப்பூசம் 2026!
பக்திக் கடலில் நனைந்த அறுபடை வீடுகள்! விண்ணதிரும் ‘அரோகரா’ முழக்கத்துடன் கோலாகலமாக நடந்த தைப்பூசம் 2026!
Thaipusam Festival 2026 Murugan Devotees Celebration: சென்னையில் உள்ள முருகன் கோயில்களில் தைப்பூசத் திருவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. பக்தர்கள் அதிகாலை முதல் பால்காவடி, பால்குடம் எடுத்து வந்து தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தினர்.

Palani Thaipusam 2026,
பிப்ரவரி 1 ஆன இன்று தைப்பூச திருவிழா சென்னையில் உள்ள முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் கூட்டமாகச் முருகனுக்கு படையெடுத்து சாமி தரிசனம் செய்துள்ளனர். தைப்பூசம் என்றால் என்ன? ஏன் கொண்டாடப்படுகிறது? தை மாதத்தில் பௌர்ணமி திதியும் பூச நட்சத்திரமும் ஒன்றாக இணைந்து வரும் நாள் தைப்பூசம். முருகப் பெருமான் அசுரர்களை அழித்து தேவர்களை காக்க அன்னை பராசக்தியிடம் ஞானவேலை பெற்ற தினமே தைப்பூச நாளாக கொண்டாடுகிறோம்.
தைப்பூச விரதம்:
இந்த தைப்பூச நாளில் விரதமிருந்தால் கேட்ட வரத்தை முருகன் தந்தருள்வார் என்பது ஐதீகம். எனவே வாழ்வில் வெற்றியும், முன்னேற்றமும், ஞானமும் கிடைக்க வேண்டும் என்று நினைக்கும் நபர்கள் தைப்பூச நாளில் விரதம் மேற்கொள்வது நல்லது. தைப்பூச விழா தமிழகம் முழுவதும் கோலாகலமாக நடைபெற்றது. குறிப்பாக வடபழனியில் உள்ள வடபழனி முருகன் கோயில் பக்தர்களின் கூட்டம் வெள்ளத்தைப் போல் அழகோவியன என்று கூறலாம் வடபழனி கோயிலில் இருந்து கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரி வரை வரிசையாக காத்துக் கொண்டிருக்கின்றனர் வடபழனி முருகர் பக்தர்கள். வரலாறு காணாத அளவு பக்தர்களின் கூட்டம் காத்துக் கொண்டிருக்கின்றன.
Thaipusam worship procedures
அதிகாலை 3 மணி முதலே கூட்டம் நிற்க தொடங்கலாம் ஆனால் கோயில் நடை அதிகாலை 4 மணிக்கு தான் திறக்கப்படும். முருகனின் தீவிர பக்தர்கள் வடபழனி முருகனை பக்தர்கள் தரிசனம் செய்து வந்தனர்.வடபழனியைச் சுற்றியுள்ள பகுதிகளான விருகம்பாக்கம், அசோக் நகர், கோடம்பாக்கம், கே.கே.நகர் என பல பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் காவடிஎடுத்து வந்தனர். பெரும்பாலான பக்தர்கள் பால் காவடி எடுத்து வந்த நிலையில் மற்ற பக்தர்கள் புஷ்ப அலங்காரம், பன்னீர் மற்றும் அலகு காவடிகளை எடுத்து வந்தனர். அதனை தொடர்ந்து மதியம் 1 மணி முதல் மாலை 4 மணி வரை பக்தர்கள் கொண்டு வரும் பாலால், முருகனுக்கு அபிஷேகம் செய்தும் பக்தர்கள் வழிபட்டுச் சென்றனர்.
Murugan Thaipusam fasting rules
சென்னை கேகே நகர் அருகில் எம்ஜிஆர் நகரில் உள்ள திருச்செந்தூர் முருகன் கோயில்: திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக திரண்டு முருகனை தரிசித்து வருகின்றனர். அதிகாலை முதல் கூட்டம் வரத் தொடங்கிய நிலையில் காவல்துறையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை என்று சொல்லப்படுகிறது அந்த அளவிற்கு முருகனின் பக்தர்கள் படையெடுத்துள்ளனர். பால் காவடி பன்னீர் காவடி புஷ்பக் காவடி அழகு குத்துதல் போன்ற நேர்த்திக்கடன் மூலம் முருகனை தரிசித்து அருளை பெற்று வருகின்றனர் பக்தர்கள் கூட்டம்.
பெசன்ட் நகர் ஆறுபடை முருகன் கோயில்:
பெசன்ட் நகர் ஆறுபடை முருகன் கோயிலில் ஆறுபடை முருகனும் ஒரே ஸ்தளத்தில் இருப்பதால் இங்கு தைப்பூசத்தின் அன்று பெரும் திருவிழா ஆகவே நடைபெறும். மக்கள் முருகனை தரிசித்து அருளை பெறுவதற்கு இன்று கூட்டம் கூட்டமாக படையெடுத்தனர் கோயில் முழுவதும் பக்தர்கள் கூட்டமே நிறைந்திருந்தது.இக்கோயிலில் முருகப்பெருமான் தெய்வானை மற்றும் வள்ளியுடன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார். மலர் அலங்காரம், தங்கக் கவசம், வேல் வழிபாடு, மற்றும் காவடி தூக்குதல் போன்ற நிகழ்வுகள் பெசன்ட் நகர் அறுபடை கோவிலில் நடைபெற்றது. வேல் வழிபாடு: தைப்பூசத்தின் முக்கிய அம்சமாக முருகனின் அறுபடை வேல்ஆயுதத்திற்கு சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. சிறப்பு அலங்காரம்: முருகப்பெருமான், தெய்வானை மற்றும் வள்ளியுடன் விசேஷ மலர் அலங்காரங்களிலும், தங்கக் கவசத்திலும் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.
குன்றத்தூர் முருகன் கோயில்:
குன்றத்தூரில் பிரசித்தி பெற்ற முருகன் கோயிலில் இன்று தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் பலமணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். குன்றத்தூர் முருகன் கோயிலில் இன்று அதிகாலை முருகன், வள்ளி, தெய்வானைக்கு பல்வேறு அபிஷேக, அலங்காரங்களுடன் தீபாராதனை நடைபெற்றது. அனைத்து பக்தர்களும் முருகனை தரிசித்து மனம் நெகிழ்ந்து மனநிறைவுடன் சென்றனர். கோவிலின் படிகள் நிரம்ப மக்கள் கூட்டம் அலைபாய்தது. அரோகரா அரோகரா என்ற கோஷத்துடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர் பால் காவடி அழகு குத்துதல் போன்றவை எடுத்துச் சென்று முருகனை நேத்திக்கடன் செலுத்தினர்.