அசுரர்களால் உருவாக்கப்பட்ட சிவன் கோயில்: காஞ்சிபுரம் ஸ்ரீ ஓணகாந்தேஸ்வரர் ஆலய வரலாறு!
Sri Onakantheswarar Temple worshipped by Asuras: காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள ஓணகாந்தேஸ்வரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலங்களில் மிக முக்கியமானது. அசுரர்களின் பெயரிலேயே இத்தலம் இன்றும் அழைக்கப்படுவது இதன் தனிச்சிறப்பு.

ஓணகாந்தேஸ்வரர் திருக்கோயில் காஞ்சிபுரம் Onakantheswarar Temple Kanchipuram
அசுரர்களால் உருவாக்கப்பட்ட சிவன் கோயில். பிச்சைக்காரர்களாக கூட இருந்தாலும் கோடீஸ்வரனாக மாற்றும் திருக்கோயில் வரலாற்றுச் சிறப்புகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம். காஞ்சிபுரம் பஞ்சுப்பேட்டையில் அமைந்துள்ள அருள்மிகு ஓணகாந்தேஸ்வரர் ஓணேஸ்வரர், காந்தேஸ்வரர், ஜலந்தரேஸ்வரர் திருக்கோயில், தேவாரப் பாடல் பெற்ற தொண்டை நாட்டு சிவன் ஸ்தலமாகும். ஓணன், காந்தன் எனும் இரு அசுரர்கள் வழிபட்டதால் இத்தலம் ஓணகாந்தன்தளி என்று பெயர் பெற்றது. இக்கோயிலில் உள்ள மூன்று லிங்கங்களும் தனித்தனி சன்னதிகளில் ஒரே நுழைவாயிலுடன் அமைந்துள்ளன. இங்கு ஓணகாந்தேஸ்வரர் லிங்க வடிவில் அமைந்துள்ளார். சுயம்புலிங்கமாகவும் அருள் பாலிக்கின்றார்.
கோயிலின் வரலாறு:
வாணாசுரன் என்னும் அசுரனுடைய படைத் தலைவர்களான ஓணன், காந்தன் என்பவர்கள் புழல் என்ற பகுதியில் உள்ள கோட்டையில் பாதுகாவலராக இருந்தனர் அதில் ஓணன் என்னும் அசுரன் அங்கு சுயம்பு மூர்த்தியாக மண்ணூல் புதைந்திருந்த சுயம்பு மூர்த்தியான லிங்கத்திற்கு தன் ரத்தத்தினால் அபிஷேகம் செய்து கடும் தவம் புரிந்த பல வரங்களையும் பெற்றான். இதேபோல் காந்தனும் மண்ணில் புதைந்திருந்த சுயம்பு மூர்த்தியாக இருந்த லிங்கத்தை எடுத்து பூஜித்து வந்து பல வரங்களைப் பெற்றான். பகுதியில் வசித்த ஜலந்தராசுரன் என்பவனும் ஒரு லிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டான்.
ஓணகாந்தன்தளி Onakanthanthali
பிற்காலத்தில் சிவனின் தோழரான சுந்தரர் இப்பகுதிக்கு வந்தார். இந்த மூன்று லிங்கமும் வெட்ட வெளியில் பூமிக்குள் பதிந்து இருந்தன. அசுரர்களுக்கும் கூட இருந்தது என்று வெளி காட்டவும் லிங்கங்களுக்கு பாதுகாப்பு தரவும் கோவில் எழுப்ப விருப்பம் கொண்டார். அதற்குரிய பொன் பொருள் வேண்டி சிவனை பாடினார். அவரது பாட்டில் மயங்கிய சிவன். இன்னும் சில பாடல்கள் பாடட்டும் என்று தாமதம் காட்டிய சிவன் ஒரு புளிய மரத்தில் மறைந்தார். புளிய மரத்தில் இருந்த காய்கள் எல்லாம் சுந்தரர் பாடலைக் கேட்டு பொன் காய்களாக மாறின. லிங்கங்களை வெளியே எடுத்து பணத்தில் கோவிலை கட்டி லிங்கங்களை வைத்து வழிபட்டு வந்தனர். கோயிலில் மூலவர்கள் மூவர் என்று கூறப்படுகிறது அவர் ஓணன், காந்தன், ஜலந்தராசுரன் ஆகும்.
Shiva temple worshipped by Asuras அசுரர்கள் வழிபட்ட சிவன் கோயில்
மூன்று நிலை ராஜகோபுரத்துடன் இந்த ஆலயம் காட்சி தருகிறது. ஆலயத்தில் மூன்று கருவறைகளும், மூன்று சிவலிங்கங்களும் உள்ள சிறப்புமிக்க ஆலயம் இது. கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன், நேரே பலிபீடமும், நந்தி மண்டபமும் உள்ளன. ஓணன், காந்தன் இருவரும் வழிபட்ட ஓணேஸ்வரர், காந்தேஸ்வரர் ஆகிய இரு சிவலிங்கத் திருமேனிகளும், அடுத்தடுத்து தனித்தனி சன்னதிகளாக உள்ளன.முதல் சன்னதியில், ஓணேஸ்வரர் கிழக்கு நோக்கி சுயம்புலிங்கமாக எழுந்தருளியுள்ளார். மூலவரின் பின்புறம், கருவறைச் சுற்றில் சிவன் - உமையம்மையின் திருமணக் கோலத்தைக் காணலாம். ஓணேஸ்வரர் சன்னதி அர்த்த மண்டபத்தில், சுந்தரர் மற்றும் இறைவனின் திருப்பாத தரிசனம் காணலாம்.
பலன்கள்: Kanchipuram parihara temple for debt relief
இப்பகுதி சிவனையும் பூஜித்தால், பணப் பிரச்சனைகள் மற்றும் கடன் தொல்லைகள் தீரும். மூலவர் மற்றும் அம்பாள் திருமண கோலத்தில் இருப்பதால் இவரை தரிசித்து வந்தால் விரைவில் திருமணத் தடை நீங்கி திருமணம் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.