- Home
- Spiritual
- வீட்டில் பணம் சேர! இந்த திசையில் 1 சிலந்தி செடி வைங்க! Spider Plant வைத்தால் இவ்வளவு நன்மைகள்!
வீட்டில் பணம் சேர! இந்த திசையில் 1 சிலந்தி செடி வைங்க! Spider Plant வைத்தால் இவ்வளவு நன்மைகள்!
Spider Plant Vastu Remedy: சிலந்தி செடியை வீட்டில் வளர்ப்பதால் எண்ணற்ற நன்மைகளை பெற முடியும்.

சிலந்தி செடியை ஸ்பைடர் செடி, பாம்பு செடி என்றும் சொல்வார்கள். இந்தச் செடியை நம்முடைய வீட்டில் அல்லது பணியிடத்தில் வளர்ப்பதால் நிதி சார்ந்த விஷயங்களில் எப்போதும் ஆதாயங்கள் அதிகமாக இருக்கும். நம்முடைய ஆரோக்கியம் மேம்படும். ஆனால் வாஸ்து சாஸ்திரம் இந்தச் செடியை குறிப்பிட்ட திசைகளில் மட்டுமே வைத்து வளர்க்க வேண்டும் என பரிந்துரைக்கிறது.
சிலந்தி செடியை நம் வீட்டில் உள்ள ஹால், சமையலறை, மேல்மாடம் படிக்கும் அறை ஆகிய இடங்களில் வைத்து வளர்க்கலாம். இதனால் நம் வீட்டில் நேர்மறை சக்தி அதிகரிக்கும். கெட்ட எண்ணங்கள் முற்றிலும் நீங்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் அன்பும் பெருகும். வீட்டில் தடைபட்ட காரியங்கள் நடக்கும்.
சிலந்தி செடியை வீட்டில் அல்லது அலுவலகத்தில் வளர்ப்பதால் காற்று சுத்திகரிக்கப்படும். இந்த செடியை சுற்றியுள்ள கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சி, ஆக்சிஜனை வெளியிடும். இதனால் வீட்டில் நல்ல சுவாசத்துடன் புத்துணர்வோடு இருக்கலாம். வாஸ்துவின் படி வடக்கு வடகிழக்கு வடமேற்கு ஆகிய திசைகளில் சிலந்து செடியை நடலாம் இது வீட்டிற்கு மங்களகரமான வளங்களை தரும். வீட்டில் இருந்து எதிர்மறை ஆற்றலையும் முற்றிலும் நீக்கும். வீட்டில் நேர்மறை ஆற்றல் பெருகுவதால் பணப்புழக்கம் அதிகரிக்கும்.
இந்த செடியை வளர்ப்பதால் வீட்டில் உள்ள வாஸ்து தோஷம் நீங்கும் தெற்கு மேற்கு ஆகிய திசைகளில் மட்டும் இந்த செடியை நடவே கூடாது இந்த செடிக்கு முறையாக நீர் ஊற்றி வளர்க்க வேண்டும் வாட விடக்கூடாது ஒருவேளை இந்த செடி காய்ந்து போனால் உடனே அகற்ற வேண்டும்.
இதையும் படிங்க: கருப்பு கயிறு அணிபவர்கள் செய்யக்கூடாத தவறு என்ன? அதுவும் இந்த ராசியினருக்கு ரொம்ப டேஞ்சர்!!
சிலந்தி செடி வளர்ப்பதால் பலன்கள்
சிலந்தி செடியை வீட்டில் வளர்ப்பதால் மனநிலை மேம்படும். வீண் மன அழுத்தங்கள் நீங்கி, வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். ஒருவருடைய மனநிலை சரியாக இருந்தாலே அவருடைய உடல் நலமும் மேம்படும். சிலந்தியைச் செடியை வீட்டின் சரியான திசையில், சரியான இடத்தில் வைத்து வளர்த்தால் சுபிட்சமாக வாழலாம்.
இதையும் படிங்க: ஆண்டியும் அரசனாகும் சனி யோகம்.. இந்த 5 ராசிகளுக்கு நல்ல நேரம்.. பண மழை கொட்டப் போகுது!!