- Home
- Spiritual
- South Facing Home : தெற்கு பார்த்த வீடு துரதிர்ஷ்டமா? இந்த 4 பரிகாரங்களை செய்தால் நிம்மதியும், அதிர்ஷ்டமும் பெருகும்.!
South Facing Home : தெற்கு பார்த்த வீடு துரதிர்ஷ்டமா? இந்த 4 பரிகாரங்களை செய்தால் நிம்மதியும், அதிர்ஷ்டமும் பெருகும்.!
Therku Partha Veedu Vastu in Tamil : வாஸ்து சாஸ்திரங்களின்படி தெற்கு திசை நோக்கிய வீடு துஷ்டத்தை தரும் என்று கூறப்படுகிறது. ஆனால் சில பரிகாரங்களையும், வாஸ்து குறிப்புகளையும் பின்பற்றினால் தெற்கு நோக்கிய வீடும் அதிர்ஷ்டத்தைத் தரும்.

தெற்கு பார்த்த வீடு நல்லதா? கெட்டதா?
தெற்கு திசை யமன், சனி பகவான், செவ்வாய் கிரகத்தோடு தொடர்புபடுத்தப்படுகிறது. இந்த திசை கட்டுப்பாடு, சக்தி, நிலைத்தன்மைக்கான அடையாளமாக இருக்கிறது. எனவே, இந்த திசையை வாஸ்துப்படி சரியாக பயன்படுத்த வேண்டியது அவசியம். இதைப்பற்றி அனுபவமிக்க ஜோதிடர்கள் கூறும் விளக்கத்தைப் பார்க்கலாம்.
தெற்கு பார்த்த வீட்டின் தன பிரவேசம்
தெற்கு பார்த்த வீட்டின் பிரதான வாசல், தெற்கு திசையின் தென்கிழக்கு பகுதியில் (South-East Quadrant) இருப்பது நல்லது. இந்த இடத்தை 'தன பிரவேசம்' அதாவது செல்வம் நுழையும் இடம் என அழைப்பர். பிரதான வாசலை அழகாகவும், சுத்தமாகவும் வெத்துக் கொள்ள வேண்டியது அவசியம். வாசலில் ஸ்வஸ்திக், சுப-லாபம், விநாயகர் படம் வைப்பது நன்மை தரும்.
சமையலறை, படுக்கையறை எங்கு இருக்க வேண்டும்?
சமையலறை, நெருப்புக்கான திசையான தென்கிழக்கில் இருக்க வேண்டும். சமைக்கும்போது கிழக்கு திசையை பார்த்து சமைப்பது நல்லது. படுக்கையறை தென்மேற்கு திசையில் இருக்க வேண்டும். தூங்கும்போது தலை தெற்கு அல்லது மேற்கு திசையை நோக்கி இருக்க வேண்டும். பூஜை அறை வடகிழக்கு திசையில் (ஈசான மூலை) இருப்பது மிகச் சிறந்தது. சுவாமி சிலைகள் மேற்கு அல்லது வடக்கு திசையை பார்த்திருக்க வேண்டும்.
நீர் ஆதாரங்கள் இருக்கும் திசை முக்கியம்
தண்ணீர் தொட்டி, நீரூற்று அல்லது எந்தவொரு நீர் ஆதாரமும் வடக்கு அல்லது வடகிழக்கு திசையில்தான் இருக்க வேண்டும். தெற்கு திசையில் தண்ணீர் தொடர்பான பொருட்களை வைத்தால், அது பண இழப்பை ஏற்படுத்தலாம். படிக்கட்டுகள் தெற்கு, தென்மேற்கு அல்லது மேற்கு திசையில் கடிகாரச் சுற்று முறையில் ஏறுவது போல அமைக்க வேண்டும். தெற்கு திசையை சமநிலைப்படுத்த, அங்கே கனமான பொருட்கள், ஸ்டோர் ரூம் அல்லது உறுதியான சுவர்களை அமைக்கலாம். தெற்கு திசையில் துளசி செடி அல்லது திறந்தவெளி தோட்டம் அமைக்க வேண்டாம்.
பரிகாரம் என்ன?
ஒருவேளை தெற்கு திசையில் வாஸ்து தோஷம் இருந்தால், பரிகாரமாக பிரதான வாசலில் வெளிப்பக்கம் பார்த்த மாதிரி பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலையை வைக்க வேண்டும். ஒவ்வொரு சனிக்கிழமையும் நல்லெண்ணெயில் தீபம் ஏற்றி, சனி மந்திரங்களை சொல்வது நல்ல பலனைத் தரும். இப்படி சரியான வாஸ்து விதிகளைப் பின்பற்றினால், தெற்கு பார்த்த வீடும் அதிர்ஷ்டத்தையும், வாழ்க்கையில் நிலைத்தன்மையையும் கொடுக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

