MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • Navratri: நவராத்திரி முதல் நாளில் வணங்கப்படும் அன்னையின் முதல் அவதாரம்.! யார் இந்த ஷைலபுத்ரி? விரிவான தகவல்கள் இதோ.!

Navratri: நவராத்திரி முதல் நாளில் வணங்கப்படும் அன்னையின் முதல் அவதாரம்.! யார் இந்த ஷைலபுத்ரி? விரிவான தகவல்கள் இதோ.!

நவராத்திரியின் முதல் நாளான இன்று அன்னை ஷைலபுத்திரி வணங்கப்படுகிறார். ஷைலபுத்ரி என்பவர் யார்? அவருடைய புராணப் பின்னணி, முக்கியத்துவம், வழிபாடு மற்றும் புராணக் கதைகள் குறித்து இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Ramprasath S
Published : Sep 22 2025, 11:12 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
அன்னையின் முதல் வடிவம்
Image Credit : Asianet News

அன்னையின் முதல் வடிவம்

அன்னை துர்கா தேவியின் 9 அவதாரங்களில் முதன்மையானவராக வணங்கப்படுபவர் ஷைலபுத்ரி. இவர் பார்வதி தேவியாகவும் அறியப்படுகிறார். ‘ஷைல’ என்றால் ‘மலை’, ‘புத்ரி’ என்றால் ‘மகள்’ என்று பொருள். இதனால் இவர் ‘மலையின் மகள்’ என்று அழைக்கப்படுகிறார். இமயமலையை ஆண்ட மன்னன் இமவானின் மகளாகவும், ஈசனின் மனைவியாகவும், பார்வதி தேவியின் வடிவமாகவும் கருதப்படுகிறார். ஷைலபுத்ரியின் கதை புராணங்களில் குறிப்பாக தேவி மஹாத்மியம், சிவபுராணம், ஸ்கந்த புராணம் போன்றவற்றில் விவரிக்கப்பட்டுள்ளது. பார்வதி தேவியின் முதல் அவதாரமாக விளங்கும் ஷைலபுத்ரியின் தோற்றம் மற்றும் பண்புகள் குறித்து இங்கு காணலாம்.

26
தட்சனின் மகள்
Image Credit : AI Generated

தட்சனின் மகள்

புராணங்களின்படி ஷைலபுத்ரி முன்னர் தட்சன் என்கிற மன்னனின் மகளாக சதி என்கிற பெயரில் பிறந்து, சிவபெருமானை மணந்தார். தட்சன் தனது இல்லத்தில் ஒரு யார் யாகத்தை ஏற்பாடு செய்து அனைத்து கடவுள்களையும் அழைத்தார். ஆனால் தனது மருமகனான சிவபெருமானை தட்சன் அழைக்கவில்லை. தனது தந்தை ஏற்பாடு செய்த யாகத்தில் கலந்து கொள்வதற்கு சதி விருப்பம் தெரிவித்தார். சிவபெருமானும் சதிக்கு அனுமதி அளித்தார். ஆனால் சதி யாகத்திற்கு வந்த போது தட்சன் சிவபெருமானை கடுமையாக அவமதித்தார். தந்தையின் வார்த்தைகளால் மனம் உடைந்த சதி, தீயில் குதித்து தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.

Related Articles

Related image1
Navratri 2025: கொலு வைக்க முடியாதவர்கள் என்ன செய்ய வேண்டும்? கலசம் அமைத்தல் மற்றும் வழிபாட்டு முறைகள்.!
Related image2
Astrology: புதன் தோஷம் இருந்தால் வாழ்க்கையே சூனியம் ஆகிடுமாம்.! புதன் தோஷம் நீங்க எளிய பரிகாரங்கள் இதோ.!
36
இமவான் மகளாக மறுபிறவி
Image Credit : AI Generated

இமவான் மகளாக மறுபிறவி

பின்னர் சிவபெருமானை மீண்டும் மணம் முடிக்க வேண்டும் என்கிற நோக்கத்துடன் இமயமலையை ஆண்ட இமவானின் மகளாக ஷைலபுத்ரியாக மறுபிறவி எடுத்தார். சிவனை மணம் முடிக்க வேண்டி அவர் கடும் தவம் புரிந்தார். இவரது தவம் இயற்கையின் சக்திகளையும், தேவர்களையும் கவர்ந்தது. இறுதியில் ஷைலபுத்ரியின் அர்ப்பணிப்பை ஏற்ற சிவபெருமான், பார்வதி தேவியாக அவரை மணந்தார். ஷைலபுத்ரியின் அர்ப்பணிப்பு மற்றும் தவத்தால் மகிழ்ந்த சிவபெருமான் ஷைலபுத்ரியை மீண்டும் தனது மனைவியாக ஏற்றார்.

46
அமைதியின் சின்னம்
Image Credit : Pinterest

அமைதியின் சின்னம்

ஷைலபுத்ரி வெள்ளை உடை அணிந்து மலையில் அமர்ந்திருக்கும் தோற்றத்தில் சித்தரிக்கப்படுகிறார். இவர் இரு கைகளை கொண்டவர். வலது கையில் தாமரை மலரையும், இடதுகையில் ஜெபமாலையையும் ஏந்தி இருக்கிறார். இவரது வாகனம் வெள்ளை எருதாகும். இவர் கையில் இருக்கும் தாமரை தூய்மை, அறிவு மற்றும் ஆன்மீகத்தை குறிக்கிறது. ஜெபமாலை தவம், பக்தி மற்றும் மன ஒருமைப்பாட்டை குறிக்கிறது. வெள்ளை எருது நீதி, உறுதி மற்றும் புனிதத்தை குறிக்கிறது. ஷைலபுத்ரி மூலாதார சக்கரத்துடன் (முதல் சக்கரம்) தொடர்புடையவர். முதல் சக்கரம் என்பது உடலின் அடித்தளமாகவும், ஆன்மீகப் பயணத்தின் தொடக்கமாகவும் கருதப்படுகிறது.

56
அன்னையின் ஆன்மீக பண்புகள்
Image Credit : Asianet News

அன்னையின் ஆன்மீக பண்புகள்

ஆன்மீகப் பயணத்தின் தொடக்கத்தை குறிக்கும் வகையில் நவராத்திரியின் முதல் நாளில் ஷைலபுத்ரி வணங்கப்படுகிறார். இவரை வணங்குவது மனதை ஒருமுகப்படுத்தவும், உடல் ஆன்மாவை தூய்மைப்படுத்தவும் உதவுகிறது. இவர் சிவனை அடைய மேற்கொண்ட கடுமையான தவமானது, பக்தர்களுக்கு அர்ப்பணிப்பு மற்றும் உறுதியின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. மலையின் மகளாக இருப்பதால் இயற்கையுடன் ஆழமான தொடர்பையும் குறிக்கிறார். இயற்கையின் நிலைத்தன்மை, வலிமை மற்றும் தூய்மையை இவர் பிரதிபலிக்கிறார். நவராத்திரியின் முதல் நாளான இவருக்கு பக்தர்கள் பால், பழங்கள், மலர்கள் மற்றும் இனிப்புகளை படைத்து வழிபடுகின்றனர். வெள்ளை மலர்கள், குறிப்பாக மல்லிகை இவருக்கு மிகவும் பிடித்தது.

66
ஆன்மீக உயர்வு தரும் ஷைலபுத்ரி வழிபாடு
Image Credit : Pinterest

ஆன்மீக உயர்வு தரும் ஷைலபுத்ரி வழிபாடு

“ஓம் தேவி ஷைலபுத்ரயை நமஹ:” என்கிற மந்திரத்தை உச்சரிப்பது பக்தர்களுக்கு மன அமைதியை தருவதாக நம்பப்படுகிறது. ஷைலலபுத்ரியை வணங்குபவர்களுக்கு மனதில் தெளிவு, உடல் ஆரோக்கியம் மற்றும் ஆன்மீக வளர்ச்சியை தருவதாக கருதப்படுகிறது. இவர் முதல் சக்கரமான மூலாதார சக்கரத்தை செயல்படுத்தி, ஆன்மீகப் பயணத்திற்கு அடித்தளம் அமைக்கிறார். ஷைலபுத்ரி தன்னை உள்ளன்போடு வணங்கும் பக்தர்களுக்கு மனதில் தெளிவு, நீண்ட உடல் ஆரோக்கியம், ஆன்மீக உயர்வைத் தருகிறார். நவராத்திரியின் முதல் நாளில் நீங்களும் அன்னை ஷைலபுத்திரையை வணங்கி அன்னையின் அருளாசியை பரிபூரணமாகப் பெறுங்கள்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஆன்மீகம்
ஜோதிடம்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved