MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • Temple Bell: கோயிலுக்கு போனதும் ஏன் மணி அடிக்கிறோம்? 99% பேருக்கு இந்த உண்மை தெரியாது!

Temple Bell: கோயிலுக்கு போனதும் ஏன் மணி அடிக்கிறோம்? 99% பேருக்கு இந்த உண்மை தெரியாது!

Why Ring Bell In Temple : கோயிலுக்குள் நுழைந்ததும் மணி அடிப்பது வெறும் பழக்கம் மட்டும்தானா? கண்டிப்பா இல்லை. இதுக்கு பின்னாடி ஆன்மீக காரணங்கள் மட்டுமில்லாம, ஆச்சரியப்படுத்தும் அறிவியல் காரணங்களும் இருக்கு.

2 Min read
Author : Ganesh A
Published : Sep 22 2026, 06:42 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Why Ring Bell In Temple?
Image Credit : Chatgpt

Why Ring Bell In Temple?

கோயிலுக்குள்ள நுழையும்போது நம்ம கை தானா போய் மணியை அடிக்கும், கவனிச்சிருக்கீங்களா? 'டங்'னு ஒரு சத்தம் கேட்கலைன்னா சாமி தரிசனமே முழுமையாகாத மாதிரி ஒரு ஃபீல் வரும். சின்ன வயசுல இருந்தே இதை நாம பார்த்துட்டு வரோம். ஆனா, இந்த சின்ன விஷயத்துக்கு பின்னாடி பெரிய பலன்கள் இருக்குன்னு சாஸ்திரங்கள் சொல்லுது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
ஆன்மீக காரணம்
Image Credit : Asianet News

ஆன்மீக காரணம்

இந்து ஆகம விதிகளின்படி, கோயில்ங்கிறது கடவுளோட வீடு. நாம ஒருத்தர் வீட்டுக்கு போகும்போது காலிங் பெல் அடிக்கிற மாதிரி, கோயிலுக்குள் நுழையும்போது மணி அடிச்சு நம்ம வருகையை கடவுளுக்கு தெரியப்படுத்துறோம். மணியோசையில 'ஓம்' அப்படிங்கிற பிரபஞ்சத்தின் ஆதி சத்தம் உருவாகுது. இந்த சத்தம் கேட்டு கடவுள் விழித்தெழுந்து, பக்தர்களின் வேண்டுதல்களை கேட்பார்னு ஒரு நம்பிக்கை இருக்கு.

ஸ்கந்த புராணத்துல இதுபத்தி தெளிவா சொல்லியிருக்காங்க. "மணி அடிச்சு பூஜை செஞ்சா 100 அஸ்வமேத யாகம் செஞ்ச புண்ணியம் கிடைக்கும்" என்பது இதன் அர்த்தம். அதுமட்டுமில்லாம, இந்த மணியோசைக்கு அவ்ளோ சக்தி இருக்கு. இதோட சத்தம் கோயில் வளாகத்துல இருக்கிற பேய், பிசாசு, தீய சக்திகள் மற்றும் நெகட்டிவ் எனர்ஜியை விரட்டிடும். அதனாலதான் கோயிலுக்குள் நுழையும்போது மட்டும் மணி அடிக்கணும், வெளியே வரும்போது அடிக்கக் கூடாது.

34
அறிவியல் காரணம்
Image Credit : bakkiyavathimeena Instagram

அறிவியல் காரணம்

மூளையை ரீசெட் செய்யும்: கோயில் மணியோட சத்தம் சுமார் 1100 முதல் 1200 Hz அதிர்வெண் (Frequency) கொண்டதுன்னு விஞ்ஞானிகள் கண்டுபிடிச்சிருக்காங்க. இதை அடிக்கும்போது அதோட எதிரொலி (Echo) குறைந்தது 7 விநாடிகள் வரை நீடிக்கும். இந்த ஆழமான சத்தம் காதுல விழுந்ததும், நம்ம மூளையோட இடது மற்றும் வலது பக்கங்கள் ஒரே நேரத்துல ஆக்டிவ் ஆகிடும். வெளியுலக சிந்தனைகள், ஆபிஸ் டென்ஷன், டிராஃபிக் சத்தம் எல்லாமே ஒரு செகண்ட்ல மறைஞ்சுடும். மனசு அமைதியாகி, சாமி கும்பிட முழுமையா தயாராகிடும். தியானம் பண்ணும்போது பெல் அடிக்கிறதும் இதே கான்செப்ட்தான்.

பஞ்சலோகமும் கிருமி நாசினியும்:

கோயில்ல இருக்கிற மணி சாதாரண உலோகத்துல செஞ்சது கிடையாது. தாமிரம், துத்தநாகம், இரும்பு, நிக்கல், குரோமியம் ஆகிய அஞ்சும் கலந்த பஞ்சலோகத்துல ஒரு குறிப்பிட்ட விகிதத்துல இதை உருவாக்குவாங்க. இந்த மணியை அடிக்கும்போது உருவாகுற அதிர்வுகள், காத்துல இருக்கிற கெட்ட பாக்டீரியாக்கள் மற்றும் கிருமிகளை அழிக்க உதவுது. பழங்காலத்துல செம்பு பாத்திரத்துல தண்ணி வெச்சு குடிக்கிற அதே அறிவியல் தான் இதுவும்.

44
உடலின் 7 சக்கரங்கள்
Image Credit : our own

உடலின் 7 சக்கரங்கள்

யோக சாஸ்திரத்தின்படி, மணியோட ஆழமான சத்தம் நம்ம உடம்புல இருக்கிற மூலாதாரம் முதல் சகஸ்ராரம் வரையிலான ஏழு சக்கரங்களையும் தூண்டி, எனர்ஜியை பேலன்ஸ் பண்ணுது.

அப்போ சரியான முறை என்ன? நிறைய பேர் மணியை சும்மா தொட்டுட்டு போயிடுவாங்க. ஆனா, குறைஞ்சது 7 விநாடிகள் அதோட சத்தம் ரீங்காரமிடுற மாதிரி மணியை அடிக்கணும்னு சாஸ்திரம் சொல்லுது. அடிக்கும்போது கண்ணை மூடி இஷ்ட தெய்வத்தை நினைச்சுக்கோங்க. ரெண்டு கையாலயும் மணி அடிக்கக் கூடாது. ஒரு கையில மணி அடிச்சுட்டு, மறுகையால சாமி கும்பிடணும்.

அதனால, அடுத்த முறை கோயிலுக்குப் போனா வெறும் பழக்கத்துக்காக இல்லாம, இந்த அறிவியலையும் பக்தியையும் மனசுல வெச்சுட்டு மணி அடிங்க. சாமி கும்பிடுற அந்த ஃபீல் கண்டிப்பா மாறும், நீங்களே உணர்வீங்க!

Madurai Meenakshi Temple: தேவாரப் பாடல்கள் முழங்க... 17 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கோவில்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Anantha Viratham: அனந்த விரதம் எப்போது? 14 முடிச்சு கயிற்றின் ரகசியம் என்ன? புராணக் கதை முதல் பலன்கள் வரை!
Recommended image2
Astrology: சிம்மத்தில் நுழையும் குரு! அற்புத அதிர்ஷ்டத்தை பெறும் 5 ராசிகள்! இனி வேற லெவல் வாழ்க்கை இவர்களுக்கு!
Recommended image3
Variety Rice: புரட்டாசி மாதம் வந்தாச்சு...வெங்காயம், பூண்டு இல்லாத சுவையான 5 வெரைட்டி ரைஸ் ரெசிபி இதோ
Related Stories
Recommended image1
Temple: கோவில் பாசிட்டிவ் எனர்ஜி அப்படியே வீட்டிற்கு வரணுமா? தரிசனத்திற்கு பின் 'இதை' பண்ணுங்க!
Recommended image2
Palani Murugan Temple: பழனி முருகன் கோவில் செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு! கோயில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved