குலதெய்வத்தை மாசி மகம் அன்று வழிபடலாமா? எப்படி வழிபட்டால் கோடி நன்மைகள் கிடைக்கும்..!
Masi Magam 2023: பெளர்ணமியுடன் சேர்ந்து வரும் மாசி மகம் அன்று குலதெய்வத்தை வழிபட்டால் பல நன்மைகள் கிடைக்கும்.
முருகன் என்றால் பங்குனி உத்திரம், தைப்பூச வழிபாடு.. சிவபெருமானுக்கு சிவராத்திரி வழிபாடு.. நவராத்திரி வந்தால் அம்மன், ஏகாதசிக்கு விஷ்ணு என்பதை போலவே மாசி மகம் என்றால் எந்த தெய்வம் என இயல்பாகவே மனதில் கேள்வி எழும். அதனால் பலரும் மாசி மகத்தின் மகிமை தெரியாமலே இருந்துவிடுகின்றனர். மார்ச் மாதம் 6ஆம் தேதி வரும் மாசி மகம் நாளில் எந்த கடவுளை வழிபட்டால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் முழுமையாக அறியலாம்.
மாசி மகம் புனித நீராடல்
மாசி மகம் நாளில் கும்பகோணம் மகாமகம் குளத்தில் நீராடினால் ஏழு ஜென்ம பாவங்கள் தீரும். அப்படி செல்ல முடியாதவர்கள் வீட்டு அருகில் இருக்கும் நீர் நிலைகளில் நீராடி வேண்டினாலும் பலன் கிடைக்கும். அன்றைய தினம் முன்னோருக்கு தர்ப்பணம் அளித்தால் பித்ரு சாபம் நீங்கி ஏழு தலைமுறை பாவங்கள் தீரும்.
அம்மன் வழிபாடு
மாசி மாதம் மக நட்சத்திரத்தில்தான் தட்சனின் மகளாக உமா தேவியார் அவதரித்தார் என்கிறது புராணம். அந்த தினம் புண்ணிய நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் பெண்கள் விரதமிருந்து வழிபட்டால் சக்தி அருளை பெறலாம்.
பெருமாள் வழிபாடு
பாதாளத்தின் உள் இருந்து பூமியை பெருமாள் வராக அவதாரம் எடுத்து வெளியே கொண்டு வந்த நாளும் மாசி மகம் தான். இந்த நாள் பெருமாளை வணங்க ஏற்ற நாள். எல்லா தெய்வங்களையும் வழிபட ஏற்ற நாளாக மாசி மகம் உள்ளது. மாசி மகம் தோஷம் தீர்க்கும் புண்ணிய நாளாகவும் கருதப்படுகிறது.
முருகன் வழிபாடு
சிவனுக்கு முருகன் மந்திர உபதேசம் கொடுத்த நாளும் மாசிமகம் என்பார்கள். அதனால் அன்று முருகனை வழிபடுவதற்கும் சிறப்பான நாளே. முருகபெருமான் அருளை பெறுங்கள்.
இதையும் படிங்க: மாசி மகம் நாளில் வீட்டிலேயே புனித நீராடி முழுபலனை அடைவது எப்படி ?
சிவன் வழிபாடு
மாசி மக நாளில் எல்லா திருக்கோயில்களிலும், தீர்த்தவாரி விசேஷமாக நடைபெறும். மாசி மகம் நாளில் தான் சிவன் வருணனுக்கு சாப விமோசனம் அளித்தார் என புராணம் சொல்கிறது. ஆகவே சிவனை வழிபட்டாலும் நன்மை கிடைக்கும்.
கேது பகவான் வழிபாடு
கேது பகவான் மகம் நட்சத்திர அதிபதி. இந்த நாளில் கேது பகவானை வழிபாடு செய்தால் ஞானம் சிறக்கும். ஆகவே மாசி மகம் அன்று குழந்தைகளும், பெரியவர்களும் நவகிரக சந்நிதியில் உள்ள கேது பகவானுக்கு வஸ்திரம் சார்த்தி வழிபடுங்கள்.
இதையும் படிங்க: நீலகிரியில் கை மீறி போகும் அழிவு.. வனவிலங்குகளும் உலகுக்கு முக்கியம்.. உலக வன உயிரின தினம் இன்று!
குல தெய்வ வழிபாடு
குலதெய்வ வழிபாடு குலத்தை தளைக்க செய்யும். எந்த பிரச்சனையும் தீர்க்க குலதெய்வ அருள் வேண்டும். மாசி மகம் அன்று குல தெய்வத்தை வழிபாடு செய்வதாலும், நேரில் சென்று தரிசிப்பதாலும் பலன்கள் ஏராளமாக கிடைக்கும்.
இதையும் படிங்க: மாசி மகம் எப்போது? மகிழ்ச்சி தரும் அதன் மகத்துவம்.. ஏழு ஜென்ம பாவம் போக்கும் விரதம்..!
விஷ்ணு பகவான், உமாமகேசுவரர், முருகப்பெருமான் ஆகிய மூன்று கடவுள்களையும் வழிபட்டால் இந்தப் பிறப்பு மட்டுமல்லாமல் முன்ஜென்ம பாவங்கள் தீரும். மாசி மகம் அன்று எல்லா தெய்வங்களையும் வழிபடலாம். இந்த ஆண்டு மாசி மகம் மார்ச் 06ஆம் தேதி திங்கள் கிழமையன்று வருவது குறிப்பிடத்தக்கது.