நீலகிரியில் கை மீறி போகும் அழிவு.. வனவிலங்குகளும் உலகுக்கு முக்கியம்.. உலக வன உயிரின தினம் இன்று!
World Wildlife day 2023: வனத்தின் பாதுகாப்பு மட்டும் அல்ல, பல்லுயிர் பல்லுயிர் பெருக்கத்திலும் முக்கிய அங்கமாக வன விலங்குகள் உள்ளன.
உலகில் அருகி வரும் வன விலங்குகள், தாவரங்களை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் கொண்டு வரப்பட்டதே உலக வன உயிரின தினம். இன்று (மார்ச்.3) அந்த நாள் உலகம் எங்கும் நினைவு கூரப்பட்டு வருகிறது.
வனவிலங்குகளுக்கு எதிராக நிகழும் குற்றங்கள், மனிதனால் உயிரினங்களுக்கு ஏற்படும் இடையூறு ஆகியவற்றிலிருந்து உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதை வலியுறுத்தும்விதமாக இந்நாள் அனுசரிக்கப்படுகிறது. வன விலங்குகளின் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளை உடனடியாக நிறுத்தாவிட்டால் மிகப் பெரிய அளவிலான பொருளாதார, சுற்றுச்சூழல் மற்றும் சமூக தாக்கங்களை ஏற்படுத்தும். உலக வனவிலங்கு தினம் பல்லுயிர் இழப்பை நிறுத்துவதில் கவனம் செலுத்துகிறது.
ஒவ்வொரு ஆண்டும் உலக வனவிலங்கு தினம் (worldlife day) மார்ச் 3 அன்று கொண்டாடப்படுவதன் நோக்கமே அழியும் விலங்குகளை காப்பாற்றும் நடவடிக்கையை துரிதப்படுத்தவும், அழிந்த விலங்குகளை நினைவுகூரவும் தான். இந்தாண்டு 'வனவிலங்கு பாதுகாப்ப்பின் கூட்டு' என்ற மையக்கருத்துதான் கருப்பொருள். பல்லுயிர் பெருக்கத்திற்கு முக்கிய பங்காற்றும் தாவரங்கள் விலங்குகளை சொந்த லாபத்திற்காக சட்டத்தை மீறி வேட்டையாடுதல் குற்றம். வனவிலங்குகளை பாதுகாக்காமல் போனால் நம்முடைய எதிர்கால சந்ததியினர் பல விளைவுகளை சந்திக்க நேரிடும். அழிந்து வரும் விலங்குகளில் சிலவற்றின் பட்டியல் இதோ...
இதையும் படிங்க: உங்க வீட்டின் ஏதோ ஒரு மூலையில் இந்த ஒரு அற்புத பொருளை வைத்தாலும் கூட போதும்.. கண்டிப்பா பணம் வந்து சேரும்
Image: Getty Images
வங்கப்புலி: கடந்த 30 வருடங்களில் இந்த புலி இனம் 50% அழிவை கண்டுள்ளது. பிற புலி இனத்தை விட, வங்க புலிகள் தனித்துவமான எழிலை கொண்டிருப்பதால் எளிதில் அடையாளம் காணலாம். ஒவ்வொரு வங்க புலிக்கும் வேறுபாடு உண்டு.
இந்திய காட்டு நாய்: இந்த இன நாய்கள் இந்தியா, மியான்மர், இந்தோசீனா, இந்தோனேசியா, சீனாவின் ஆல்பைன் வனங்களில் அரிதாக காணப்படுகின்றன.
கடந்தாண்டு வந்த தகவலின்படி, 1 மில்லியன் உயிரினங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டன. கிட்டத்தட்ட 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிரினங்கள் இடன் தெரியாமல் அழிந்து வருகின்றன. 8 ஆயிரம் வகை உயிரினங்கள் அழியும் ஆபத்தை எதிர்நோக்கி உள்ளன எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
நீலகிரி மலை வாழ் விலங்குகள்
• இந்திய பாங்கோலின் என்ற செதில் எறும்பு மெல்ல நகரும் இரவு நேர பாலூட்டி. இதனுடைய இறைச்சிக்காவும், செதில்காகவும் வேட்டையாடப்படுவதால் அந்த இனமே அருகிவருகிறது.
• நீலகிரி தஹ்ர்: இது நீலகிரியின் மலைகள், மேற்கு, கிழக்கு தொடர்ச்சி மலைகளில் திரியும் விலங்கு. இந்த விலங்கும் அழிந்து வரும் விலங்கு பட்டியலில் உள்ளது.
• நீலகிரி லங்கூர், மலைகளில் காணப்படும் நீலகிரி லங்கூர் மருத்துவ குணங்கள் காரணமாகவும் அதன் தோலுக்காகவும் வேட்டையாடப்படுகிறது.
இதையும் படிங்க: மார்ச் மாதம் சர்வதேச மகளிர் தினம்.. பெண்களுக்காக ஏன் ஒரு தினம் கொண்டாடப்படுகிறது தெரியுமா?