MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் 2025: ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்.. எப்படி செய்வது? முழு விவரங்கள்

மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் 2025: ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்.. எப்படி செய்வது? முழு விவரங்கள்

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் எப்போது, எப்படி முன்பதிவு செய்ய வேண்டும், கட்டண விபரங்கள், தரிசன நேரம் போன்ற முக்கிய தகவல்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.

2 Min read
Author : Kalai Selvi
| Updated : Apr 16 2025, 02:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

Thirukalyanam: 2025 Ticket Booking Full Details : மதுரை மீனாட்சி அம்மன் கோவில்  சித்திரை பெருவிழா வரும் ஏப்ரல் 24ஆம் தேதி வியாழன் அன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவில் முக்கிய நிகழ்வுகளாக மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் மே 6ஆம் தேதியும், மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் மே 8ஆம் தேதியும், மீனாட்சி அம்மன் கோவில் திருத்தேரோட்டம் மே 9ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Meenakshi Sundareswarar Thirukalyanam 2025

Meenakshi Sundareswarar Thirukalyanam 2025

மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் 2025:

மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் 2025 மே 8ஆம் தேதி வியாழன் கிழமை அன்று வடகாடு வீதியில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் காலை 8:30 மணி முதல் 8:51 மணிக்குள் நடைபெறும். இந்த திருக்கல்யாணத்தை நேரில் தரிசிக்க விரும்பும் பக்தர்களுக்காக ஆன்லைன் கட்டணம் கோவில் நிர்வாகம் சார்பில் வெளியாகியுள்ளது. 

இதையும் படிங்க:  சங்கடஹர சதுர்த்தி 2025 : வேண்டிய வரம் கிடைக்க விநாயகரை இந்த மந்திரம் சொல்லி வழிபடுங்க!!

36
Meenakshi Sundareswarar Thirukalyanam 2025 : Ticket

Meenakshi Sundareswarar Thirukalyanam 2025 : Ticket

இரண்டு வகையான கட்டண டிக்கெட்:

மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை பார்க்க விரும்பும் பக்தர்களுக்காக இரண்டு விதமான டிக்கெட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன.  அதாவது ரூபாய் 200 மற்றும் ரூபாய் 500 என்று நிர்ணயக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு விதமான டிக்கெட் உள்ள பக்தர்கள் வடக்கு கோபுரம் வழியாக திருக்கல்யாணத்தை பார்க்க திருக்கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். டிக்கெட் இல்லாதவர்களோ தெற்கு கோபுரம் வழியாக அதுவும் இட வசதிக்கு ஏற்ப தான் அனுமதிக்கப்படுவார்கள். 

இதையும் படிங்க:  மேஷம் முதல் மீனம் வரை; 12 ராசிகளுக்கான தமிழ் புத்தாண்டு விசுவாவசு ராசி பலன்!

46
Meenakshi Sundareswarar Thirukalyanam 2025: Ticket Booking

Meenakshi Sundareswarar Thirukalyanam 2025: Ticket Booking

முன்பதிவு செய்வது எப்படி?

மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை பார்க்க https://maduraimeenakshi.hrce.tn.gov.in/ என்ற இணையத்தில் ஏப்ரல் 29ஆம் தேதி முதல் மே 2ம் தேதி வரை பக்தர்கள் டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம். அதுவும் இரவு 9 மணி வரை மட்டுமே கட்டண சீட்டு முன்பதிவு செய்வதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

56
Meenakshi Sundareswarar Thirukalyanam 2025

Meenakshi Sundareswarar Thirukalyanam 2025

ஒருவர் எத்தனை டிக்கெட் புக் செய்யலாம்?

ரூபாய் 500 டிக்கெட்டை ஒருவர் இரண்டு வரை புக் செய்யலாம். அதுபோல ரூபாய் 200 டிக்கெட்டை ஒருவர் 3 வரை புக் செய்யலாம். ஒரே நபர் ரூ.500 மற்றும் ரூ. 200 டிக்கெட்டை பதிவு செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. இணையத்தில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு மொபைல் நம்பர், ஆதார் கார்டு போன்ற விவரங்கள் கேட்கப்பட்டுள்ளது. ஒருவேளை உங்களால் ஆன்லைனில் டிக்கெட் புக் செய்ய முடியவில்லை என்றால், சித்திரை வீதியில் உள்ள பிர்லா விஷ்ரம் தங்கும் விடுதியில் நேரடியாக சென்று டிக்கெட் வாங்கிக் கொள்ளலாம். இது தொடர்பான அறிவிப்பும் கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

66
Meenakshi Sundareswarar Thirukalyanam 2025

Meenakshi Sundareswarar Thirukalyanam 2025

பக்தர்களுக்காக...

திருக்கல்யாண நாள் அதாவது மே 8ம் தேதி காலை 8:30 மணி முதல் 8:53 மணிக்குள் நடைபெறும். எனவே டிக்கெட் உள்ளவர்கள் அன்று காலை 5 மணி முதல் 7:00 மணி வரை மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். ரூபாய் 500 டிக்கெட் பெற்றவர்கள் கோயிலின் வடக்கு முனீஸ்வர் சன்னதி வழியிலும், ரூபாய் 200 டிக்கெட் பெற்றவர்கள் கோயிலின் வடக்கு மற்றும் கிழக்கு சித்திரை வீதி வழியாக தான் திருக்கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். டிக்கெட் இல்லாதவர்கள் காலை 7:00 மணிக்குள் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களில் அமர வேண்டும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சித்திரை திருவிழாவில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் ரொம்பவே முக்கியமான நிகழ்வு என்பதால் இந்த திருமணத்திற்கான நிறைய பக்தர்கள் வருவார்கள் என கோவில் நிர்வாகம் சார்பில் எதிர்பார்க்கப்படுகின்றது.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
ஆன்மீகம்
மதுரை சித்திரைத் திருவிழா
மதுரை மீனாட்சி அம்மன் கோயில்
மதுரை
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Rama Ekadashi : ரமா ஏகாதசி 2026.. பெருமாள் வழிபாடு, விரத நேரம், பாரணை செய்யும் முறை!
Recommended image2
New Year Calendar: 2027 புத்தாண்டுக்கு புதிய காலண்டர் எப்போது வாங்க வேண்டும்?! பஞ்சாங்கம் இருந்தா இவ்ளோ நல்லதா?!
Recommended image3
Kanda Sashti Vratam date : கந்த சஷ்டி விரதம் எப்போது தொடங்குகிறது? 6 நாட்கள் விரத முறை, சூரசம்ஹாரம் தேதி முழு விவரம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved