- Home
- Spiritual
- ராமாயண காலத்து சிவலிங்கம்! வாலி பூஜித்த கோடம்பாக்கம் சிவன் கோயிலின் சிறப்புகளும் பலன்களும்!
ராமாயண காலத்து சிவலிங்கம்! வாலி பூஜித்த கோடம்பாக்கம் சிவன் கோயிலின் சிறப்புகளும் பலன்களும்!
Kodambakkam Bharadwajeswarar Temple History : ராமாயண காலத்தில் வாலி மற்றும் அவரது வம்சத்தினர் வழிபட்ட கோடம்பாக்கம் பரத்வாஜேஸ்வரர் கோயிலின் மகிமை தெரியுமா?

வாலி பூஜித்த கோடம்பாக்கம் சிவன் கோயில்
வாலி மற்றும் வாலி குடும்ப வம்சத்தினர் கோடம்பாக்கம் சிவன் கோயிலில் பரம்பரை பரம்பரையாக வழிபட்டதாக கூறப்படுகிறது யாருக்கும் தெரியாத கோடம்பாக்கத்தில் இப்படி ஒரு சிவன் கோயிலா என்று அதிசயத்தில் உள்ளனர் இதன் வரலாறை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சென்னை கோடம்பாக்கத்தில் புலியூர் என்னும் பகுதியில் அமைந்துள்ள பழமையான சிவாலயம், பாரத்வாஜ முனிவரால் வழிபடப்பட்ட அருள்மிகு பாரத்வாஜேஸ்வரர் திருக்கோயில் ஆகும். இக்கோயில் வாலீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறது. இது பல்லவர் காலத்தில் சோழர்களால் மேம்படுத்தப்பட்ட சிறப்புடையது. இறைவன் பெயர் பாரத்வாஜேஸ்வரர், வாலீஸ்வரர் மற்றும் இறைவி பெயர் சொர்ணாம்பிகை.
கோயிலின் அமைப்பு:
சோழ மன்னன் மற்றும் பல்லவ மன்னர்கள் கோயிலுக்கு திருப்பணி செய்துள்ளார்கள் தொண்டை நாடி 24 கோட்டங்களில் இரண்டாவது கோட்டமான புலியூர் கோட்டத்தை சேர்ந்த கோவிலில் ஆகும் கோயிலின் சுற்றுப் பிரகாரங்களை நாம் சுற்றும்போது நம் கண்களை கவரும் வண்ணம் கோயிலின் பல இடங்களில் அழகிய வண்ண சுதே சிற்பங்களை நிறுவியுள்ளார்கள் சப்த கன்னிமார்கள் கோசலை மற்றும் நவ துவாரங்கள் ரம்பை ஊர்வசி மேனகை உஷா தேவ நடன மங்கைகள் ஆகிய வரும் உருவாக்கிய சிலை வைத்துள்ளார் கோயில் இறைவன் மற்றும் இரவின் கருவறை ஒரு தேர் அமைப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இறைவன் லிங்கமாக காட்சி தருகிறார்
வரலாறு:
பாரத்வாஜ முனிவர் இத்தலத்தில் சிவலிங்கத்தை நிறுவி, தீவிர சிவ வழிபாடு செய்ததால், இறைவன் ஸ்ரீ பாரத்வாஜேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்கோவில் வளாகத்தில் வாலி மற்றும் பாரத்வாஜ முனிவரின் சிலைகள் உள்ளன.
பலன்கள்:
கோயிலில் வந்து சிவபெருமானை வேண்டிக் கொண்டால் தோஷங்களில் இருந்து தீர்வு பெறலாம் என்று கூறப்படுகிறது கல்வி அறிவு இதழில் முதன்மையாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.