MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • குரு பெயர்ச்சி 2023 - குரு பெயர்ச்சி பலன்கள் கடகம் : 10ல் குரு பதவி பறிபோகும் மிகுந்த கவனம் தேவை!

குரு பெயர்ச்சி 2023 - குரு பெயர்ச்சி பலன்கள் கடகம் : 10ல் குரு பதவி பறிபோகும் மிகுந்த கவனம் தேவை!

நிகழவிருக்கும் குருபெயர்ச்சியால் கடக ராசியினருக்கு என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் காணலாம்.

2 Min read
Author : Web Team
| Updated : Apr 06 2023, 10:18 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13

குரு பெயர்ச்சி 2023 :

குரு பெயர்ச்சியானது வருகிற சித்திரை மாதம் 9 ஆம் தேதி அதாவது ஏப்ரல் 22ம் தேதி அன்று குரு மீனத்திலிருந்து மேஷ ராசிக்கு செல்வார் . இந்த பெயர்ச்சியால் குரு பகவான் உங்கள் ராசிக்கு 10 ஆம் இடத்தில் சஞ்சரிக்க இருக்கிறார்.

இதனால் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு நன்மை இல்லையென்றாலும் மோசமான பலனை தராது. இருந்தாலும் சற்று மன அழுத்தத்தினை தரும். மேலும் சற்று கலவையான பலனை தரும் என்பதையும் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

குரு பகவான் மட்டுமல்லாமல், உங்கள் ராசிக்கு அஷ்டம சனியாக சனி பகவானும் அமர்ந்து இருப்பதால் இந்த வருடம் முழுவதும் அதிக கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருத்தல் வேண்டும்.

 

குருவின் பார்வை :

சந்திரனை அதிபதியாக கொண்ட கடக ராசிக்கு, குரு பகவான் 10ம் இடமான வேலை, தொழில் மற்றும் வியாபாரத்தை குறிக்கும் கர்ம ஸ்தானத்தில் சஞ்சரிக்க இருக்கிறார்.

குரு தனது 5ம் பார்வையாக கடக ராசியினருக்கு 2ம் வீடான குடும்ப மற்றும் வாக்கு ஸ்தானத்தை பார்ப்பார்.

குரு தனது 7ம் பார்வையாக கடக ராசியினருக்கு 4ம் வீடான சுக மற்றும் தாய் ஸ்தானத்தைப் பார்ப்பார்.

குரு தனது 9ம் பார்வையாக ராசிக்கு 6ம் வீடான நோய், சத்ரு ஸ்தானத்தைப் பார்ப்பார்.

தவிர கடக ராசியில் குரு உச்சம் பெறவார் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23

குரு பகவான் 10ல் இருப்பதால் பதவியில் அதிக கவனம் தேவை :

ஜாதகத்தில் 10ம் இடத்திற்கு குரு வரும் போது ஜாதகர் பார்க்கக்கூடிய வேலையில் அல்லது தொழிலில் பதவியை இறக்க செய்யும்.

ஆகவே 10ல் குரு இருககும் போது சில கஷ்டங்களைச் சந்திக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளன. பலருக்கு தான் பார்க்கின்ற வேலையில் பதவி பறி போகும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்.

தொழில்:

சொந்த தொழில் / வியாபாரம் செய்பவர்கள் பெரிய அளவில் முன்னேற்றம் இருக்காது. வெளிநாட்டுத் தொழில் சேர்ந்த விஷயங்களில் முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும். மேலும் தொழில் செய்பவர்கள் அவர்களுடைய சகப் போட்டியாளர்களின் பொறாமையின் காரணமாக நஷ்டம் அல்லது வருவாய் இழப்பு ஏற்படலாம். ஆகவே பெரிய அளவிலான முதலீடுகளை செய்யும் முன் சிந்தித்து செயலாற்ற வேண்டும்.

உத்தியோகம்:

வேலை செய்யும் கடக ராசியினர் பணிபுரியும் இடத்தில் மறைமுக எதிரிகள் உண்டாக வாய்ப்புகள் இருக்கிறது. சற்று நிதானமாக செயல்பட்டால் எதையும் சமாளித்து விடலாம்.

குடும்பம்:

குடும்பத்தில் சின்ன சின்ன சச்சரவுகள் ஏற்பட்டாலும் , உடனே சமாதானம் அடைந்து விடும் தன்மை கிடைக்கும். மனது நிம்மதியான சூலில் இருக்கும். சுப காரியங்கள் அனைத்தும் கைகூடும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மன சஞ்சலம் ஏற்பட்டாலும் அது உங்களின் உறவை மேம்படுத்ததி, நெருக்கத்தை அதிகரிக்க செய்யும். குழந்தை பாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சி கிட்டும் .

நீங்கள் இந்த ராசியா? அப்போ உங்களுக்கு இந்த மாதிரி நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு! பார்த்து நடந்துக்கோங்க!

33

ஆரோக்கியம்:

குரு மேஷத்தில் சஞ்சரிக்கக்கூடிய காலத்தில் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. உங்களின் வயிறு தொடர்பான பிரச்னைகள், உணவு குழாய் போன்ற பிரச்னை ஏற்படலாம். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவர்களின் ஆலோசனையைப் பின்பற்றுவது நலம்.

அரசியல் :

அரசியலில் உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றமான நேரம் ஆகும். சிக்கல்கள் ஏற்பட்டாலும் அதை கடந்து வளர்ச்சிப் பாதையில் செல்வீர்கள். இந்த காலத்தில் எந்த ஒரு புதிய திட்டங்களையும் நிதானமாக செய்தல் அவசியம்.

மாணவர்களுக்கு :

மாணவர்களுக்கு சிறப்பான காலமாக இருக்கும். அதே நேரத்தில் படிப்பைத் தவிர்த்து மற்ற விஷயங்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். படிப்பில் நல்ல கவனம் செலுத்தினால் நல்ல மதிப்பெண்ணும் , நல்ல உயரத்தையும் பெறலாம்.

வழிபாடு :

சனிக்கிழமை அன்று ஹனுமனை வழிபாடு செய்ய வேண்டும்.

சிவன் கோவிலில் இருக்கும் நவகிரகங்களை வழிபாடு செய்யுங்கள்.

ஜாதகம் மட்டுமில்ல உங்க மச்சம் கூட சொல்லிடும் உங்க அதிர்ஷ்டததை!

About the Author

WT
Web Team
ஆசியாநெட் நியூஸ் தமிழ் வெப் குழு – சமீபத்திய செய்திகள் மற்றும் நிகழ்வுகளை எழுத்து மூலம் வழங்கும் அணி.
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Kanda Sashti Vratam date : கந்த சஷ்டி விரதம் எப்போது தொடங்குகிறது? 6 நாட்கள் விரத முறை, சூரசம்ஹாரம் தேதி முழு விவரம்!
Recommended image2
Vastu Tips: தலையணைக்கு அடியில் 'இந்த' ஒரு பொருள் வைங்க.. உங்க வாழ்க்கையே மாறும் மேஜிக்கை பாருங்க!
Recommended image3
Varahi Amman Worship : ஐப்பசி மாத தேய்பிறை பஞ்சமி..வாராஹி அம்மனுக்கு இந்த வழிபாடுகளைச் செய்யுங்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved