MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • குரு பெயர்ச்சி பலன் 2023: விரைய குருவால் ரிஷபத்திற்கு யோகமா ? சாபமா?

குரு பெயர்ச்சி பலன் 2023: விரைய குருவால் ரிஷபத்திற்கு யோகமா ? சாபமா?

நிகழ உள்ள  குருபெயர்ச்சியால் ரிஷபத்திற்கு என்னென்ன பலன்கள் என்பதை இந்த பதிவில் காணலாம். 

2 Min read
Author : Web Team
| Updated : Apr 20 2023, 09:40 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13

சுப கிரகங்களில் ஒன்றான குரு பகவான் ஏப்ரல் 22 ஆம் தேதி மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடம் பெயர்கிறார். அடுத்த ஆண்டு மே மாதம் வரை குரு பகவான் மேஷ ராசியில் பயணம் செய்ய உள்ளார்.

இந்த இடப்பெயர்ச்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களுக்கு விரைய ஸ்தானத்தில் குரு வரவுள்ளதால் வருமானம் 1 பக்கம் இருந்தாலும் தண்ணீர் போல் பணம் செலவாக உள்ளதாள் நிதானம் கடைபிடிப்பது முக்கியம்களும். அதே நேரத்தில் குருவின் பார்வை பல்வேறு விதங்களில் அற்புதங்கள் செய்ய உள்ளதால் அச்சப்பட வேண்டியதில்லை.

ரிஷப ராசிக்கு 12ஆம் வீட்டில் குரு மறைய இருக்கிறார். விரைய குரு என்றாலும் விரயங்களை சுப விரயமாக செய்து கொள்ளலாம். வருமானம் இருந்தாலும் சேமிக்க முடியாத அளவிற்கு செலவுள் வரிசையாக வரும் .

சுக்கிரனின் வீடு ரிஷபம். குரு சுக்கிரனுக்கு கெட்டவன் எனினும் கெட்டிடில் கிட்டிடிடும் ராஜயோகம் என்பதற்கு ஏற்றார் போல் குரு மறைவது சிறப்பாகும். சுப விரயம், எதிர்பாரா திடீர் செலவுகள் போன்றவை வரவுள்ளது .ஆன்மீக பயணங்கள் உண்டாகும்.

23

குருவின் பார்வை 4ஆம் வீட்டினை பார்ப்பதால் அம்மா வழியான சொத்துக்கள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. அம்மாவின் உடல் ஆரோக்கியம் மேன்மையடையும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு மறைமுக போட்டி, பொறாமைகள் நீங்கி, சாதகமான சூழல் உருவாகும். தவிர முடங்கி கிடந்த வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும்.

வண்டி வாகனம் போன்றவை வாங்க நல்ல சூழல் உருவாகும். வெற்றி மேல் வெற்றி உங்களை தேடி வரும். சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள். வீட்டில் சந்தோஷமும் நிறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையேயான கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

குருவின் பார்வை 6ஆம் வீட்டை பார்ப்பதால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வம்பு வழக்குகள் இருந்தவர்களுக்கு சாதகமான முடிவு கிடைக்கும். தம்பதிகள் சவால்களை சந்திக்கும் வாய்ப்புகள் ஏற்பட்டாலும் தெய்வத்தின் அனுகிரகத்தினால் அனைத்தையும் எதிர்த்து ஜெயிப்பீர்கள்.

33

உத்தியோகதில் இருப்பவர்களுக்கு கௌரவ பதவிகள் தேடி வரும். விரும்பிய இடத்தில இடமாற்றம் மற்றும் புரமோசன் கிடைக்கும். வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்பவர்கள் சாதகமான செய்தி கிடைக்கும்.

8 ஆம் வீட்டினை பார்ப்பதால் வீட்டு ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். உடல் நலத்தில் பேணி காணுங்கள். குறிப்பாக ஜீராண மண்டல உறுப்புகளில் மிகுந்த கவனம் செலுத்துங்கள். விலையுயர்ந்த பொருட்கள், ஆவணங்களை பத்திரமாக பாதுகாப்பாக வையுங்கள்.

பரிகாரம்:

வியாழக் கிழமைகளில் அம்பாள் வழிபாடு செய்யுங்கள். உங்களால் இயன்ற அளவிற்கு ஏழைகளுக்கு உதவி புரியுங்கள்.

11 நாட்கள் இந்த பூஜை செய்து பாருங்க! பணக்கஷ்டமும், வறுமையும் உங்கள் வீட்டை விட்டு ஓடும்.

About the Author

WT
Web Team
ஆசியாநெட் நியூஸ் தமிழ் வெப் குழு – சமீபத்திய செய்திகள் மற்றும் நிகழ்வுகளை எழுத்து மூலம் வழங்கும் அணி.

Latest Videos
Recommended Stories
Recommended image1
கந்த சஷ்டி 2026: முருகன் அருள் பெற கடைப்பிடிக்க வேண்டிய விரத முறை என்ன?
Recommended image2
எரியும் பிணத்தை உண்ணும் வினோத திருவிழா.! திருச்சி ஓயாமரி சுடுகாட்டில் நள்ளிரவில் நடந்த மயானக்கொள்ளை.!
Recommended image3
வீட்டில் இந்த ஓவியம் இருந்தால் செல்வம் பெருகும்.. நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved