MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • Today Rasipalan 17th Mar 2023: அந்தஸ்து உயரும்.. பெண்களுக்கு வெற்றி

Today Rasipalan 17th Mar 2023: அந்தஸ்து உயரும்.. பெண்களுக்கு வெற்றி

மார்ச் 17ம் தேதியான இன்றைய தினத்திற்கான 12 ராசிக்காரர்களுக்கான ராசி பலனை பார்ப்ப்போம். 

2 Min read
Author : karthikeyan V
Published : Mar 17 2023, 05:30 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112

மேஷம்:

தேங்கிக்கிடந்த வேலைகள் முடியும். சொத்து தொடர்பான ஆவணங்களில் மிகக்கவனமாக இருக்கவும். அனுபவஸ்தர்களிடம் கலந்தாலோசித்து முக்கியமான முடிவுகளை எடுக்கவும். குடும்பத்தில் இனிமையான சூழல் நிலவும்.
 

212

ரிஷபம்:

அனைத்தையும் குழப்பிக்கொள்ளாமல் ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் கவனம் செலுத்துவது வெற்றியை தரும். குழந்தைகளுடன் நேரம் செலவிட்டு அவர்களது பிரச்னைகளுக்கு தீர்வு காணுங்கள். தொழிலில் புதிய விஷயங்கள் அல்லது புதிய தொழிலுக்கான முயற்சியை ஒத்திவைக்கவும். சரியான நேரத்தில் அதுவாகவே நடக்கும்.  கணவன் - மனைவி இடையே நல்லுறவு இருக்கும்.
 

312

மிதுனம்:

நண்பர்கள் மற்றும் உறவினர்களை சந்திப்பீர்கள். வீண் செலவுகளை தவிர்க்கவும். பயணத்தை ஒத்திவைக்கவும். தொழிலில் ஆர்டர் தொடர்பான பணிகளை சரியான நேரத்தில் செய்து முடிக்கவும். குடும்பத்தில் பரஸ்பரம் புரிதல் இருக்கும்.
 

412

கடகம்:

அனுபவஸ்தர்களின் ஆலோசனையும் ஆதரவும் கிடைக்கும். மன அமைதி இருக்கும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவார்கள். உங்கள் திறமைகளை முழுமையாக பயன்படுத்த சரியான காலக்கட்டம் இது. கோபமும் ஈகோவும் உங்கள் வேலையை பாதிக்கும். 

சனி பலன்கள்.. இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் வந்தாச்சு.. இனி வர்ற அதிர்ஷ்டத்தால் வாழ்க்கையே மாறப் போகுது..!
 

512

சிம்மம்:

குழந்தைகளின் சாதனை உங்களுக்கு மகிழ்ச்சியும் பெருமையும் அளிக்கும். மன அமைதி இருக்கும். நண்பர் அல்லது உறவினருடன் கருத்து வேறுபாடு ஏற்படும். பொருளாதார இழப்பு ஏற்படலாம். தொழிலில் சில மாற்றங்கள் செய்ய நேரிடும். வயிற்று வலி உண்டாகலாம்.
 

612

கன்னி:

ஸ்பெஷலான நபர் ஒருவரை சந்திப்பீர்கள். கடன் கொடுக்கும் முன் ஆழமாக யோசிக்கவும். தொழில் பார்ட்டிகளில் கலந்துகொள்ளவும். உங்கள் கடின உழைப்பிற்கு விரைவில் பலன் கிட்டும். 
 

712

துலாம்:

உங்கள் திறமைக்கு ஏற்ப சாதிப்பீர்கள். நற்செய்தியை கேட்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள். உணர்ச்சிவசப்படாமல் எதார்த்தத்தை உணர்ந்து செயல்படுங்கள். வரவுக்கு ஏற்ப செலவும் அதிகரிக்கும். மூத்தவர்களின் ஆலோசனையை கேட்டு செயல்படவும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
 

812

விருச்சிகம்:

அண்மைக்காலமாக இருந்துவந்த பிரச்னை தீரும். முடிவுகளை நம்பிக்கையுடன் மனம் உறுத்தலில்லாமல் எடுங்கள். அதிகப்படியான கோபம் உங்கள் ஆரோக்கியம் மற்றும் வேலையை பாதிக்கும். தொழிலில் புதிய முதலீடு  எதுவும் செய்ய வேண்டாம்.
 

912

தனுசு:

சரியான நேரத்தில் சரியான முடிவெடுக்க வேண்டியது அவசியம். இளைஞர்கள் கடுமையாக உழைக்க நேரிடும். பெண்களின் கடின உழைப்புக்கான ரிசல்ட் கிடைக்கும். அறிமுகமில்லாதவர்களுடன் தொழில் டீலிங் வைத்துக்கொள்ள வேண்டாம். 

தேனியில் ஆச்சர்யம்.. 5 தலை நாகம் பாதுகாக்கும் சிவன் கோயில்.. இங்க எவ்வளவு விசேஷம் தெரியுமா?

1012

மகரம்:

நற்செய்தியுடன் இன்றைய தினம் தொடங்கும். உறவினர்கள் மத்தியிலும் சமூகத்திலும் உங்கள் அந்தஸ்து அதிகரிக்கும். லோன் எதுவும் வாங்க வேண்டாம். தொழில் முறையை மாற்ற வேண்டும். மனைவி மற்றும் உறவினர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும்.
 

1112

கும்பம்:

நேர்மறையான சிந்தனைகளுடன் இருங்கள். எதிர்மறையாக சிந்திக்க வேண்டாம். நல்ல முடிவெடுத்து முக்கியமான வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். அமைதி, நிதானத்தை கடைபிடிக்கவும். தொழிலில் சிறு மாற்றம் செய்யவேண்டும். கணவன் - மனைவி இடையே சிறு மோதல் ஏற்படும். 

1212

மீனம்:

நெருக்கமான நபர் ஒருவரை பிரச்னையிலிருந்து காப்பாற்றுவீர்கள். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கும். தேவையில்லாத வாக்குவாதங்களை தவிர்க்கவும். தொழில் ரீதியான பயணத்தின் மூலம் ஆதாயம் கிடைக்கும். கணவன் - மனைவி இடையேயான உறவு பலப்படும்.
 

About the Author

KV
karthikeyan V
ஜோதிடம்
ஜோதிடம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
கந்த சஷ்டி 2026: முருகன் அருள் பெற கடைப்பிடிக்க வேண்டிய விரத முறை என்ன?
Recommended image2
எரியும் பிணத்தை உண்ணும் வினோத திருவிழா.! திருச்சி ஓயாமரி சுடுகாட்டில் நள்ளிரவில் நடந்த மயானக்கொள்ளை.!
Recommended image3
வீட்டில் இந்த ஓவியம் இருந்தால் செல்வம் பெருகும்.. நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved